பிக் பாஸ் முழுக்க நிறைந்திருக்கும் பூர்ணிமா.. நயன்தாராவின் அன்னபூரணி படத்தில் இப்படி ஒரு கேரக்டரா?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் பூர்ணிமா நடிகை நயன்தாரா நடித்த அன்னபூரணி திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறாராம்.
நேற்று நயன்தாராவின் அன்னபூரணி திரைப்படத்திற்கான ட்ரெய்லர் வெளியாகி இருந்த நிலையில் அந்த திரைப்படத்தில் பூர்ணிமாவை பார்த்ததும் ரசிகர்கள் அதிர்ச்சி அடைகின்றனர்.

அதோடு இத்தனை நாட்களாக யூடியூப் சேனலில் காமெடியான 6 கேரக்டரில் நடித்துக் கொண்டிருந்த பூர்ணிமா இப்போது அன்னபூரணி திரைப்படத்தில் மாஸாக இடம்பெற்று இருப்பதால் பலர் வாழ்த்துக்களும் கூறி வருகிறார்கள்.
பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே ஒரு சிலர் தான் வாங்கி வைத்திருந்த பெயரும் புகழையும் கெடுத்து விடுவார்கள். அல்லது ஒரு சிலர் அதுவரைக்கும் தெரியாமல் இருந்தாலும் பிறகு பட்டி தொட்டி எல்லாம் தெரிய தொடங்கி விடுவார்கள். அந்தநிலையில் தான் இப்போதைய ஏழாவது சீசனும் ஒரு சில போட்டியாளர்களின் வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
அதில் கடலூரைச் சார்ந்த பூர்ணிமா சென்னைக்கு வந்து ஐடி கம்பெனியில் வேலை பார்த்து பிறகு அங்கு ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக வேலையை விட்டு அராத்தி என்ற ஒரு youtube சேனல் மூலமாக சில நண்பர்களோடு சேர்ந்து பழகி வீடியோக்களை வெளியிட்டு இப்போது இரண்டு மில்லியனுக்கு மேல் சப்ஸ்கிரைப் வைத்திருக்கிறார்.
அதனாலே பூர்ணிமாவிற்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது. பிக் பாஸ் வீட்டிற்குள் பூர்ணிமா விளையாடும் விளையாட்டு பலரையும் திட்ட வைத்திருக்கிறது. ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பூர்ணிமா மற்றும் அவருடைய தோழி மாயா இல்லை என்றால் நிகழ்ச்சியே இல்லை என்று சொல்லும் அளவிற்கு தான் இருக்கிறது.
அதோடு எந்த பக்கம் திரும்பினாலும் அங்கு நடக்கும் பிரச்சனைகளில் பூர்ணிமா கண்டிப்பாக முக்கிய பங்கு வகிக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் பூர்ணிமாவிற்கு சமூக வலைத்தளத்தில் அதிகமான நெகட்டிவ் கருத்துக்கள் வந்து கொண்டே இருக்க அது குறித்து கடந்த வாரத்திலும் அதற்கு முந்தைய வாரத்திலும் கமல்ஹாசன் பூர்ணிமாவை குத்தி காட்டி பல விஷயங்களை பேசி இருந்தார்.
அதிலும் விதிமீறல்களில் விதியே இல்லாமல் விளையாடும் பூர்ணிமாவிற்கு வாராவாரம் கமலுடைய அர்ச்சனை நடந்து கொண்டு இருந்தாலும் அந்த நேரத்தில் கண்ணீர் சிந்தும் பூர்ணிமா பிறகு அதை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறார். இப்படியே பல வாரங்கள் போய்க்கொண்டிருக்கிறது. அதோடு பூர்ணிமா நாமினேஷனில் வந்தால் இந்த வாரம் தூக்கி விட வேண்டும் என்று ரசிகர்கள் பிளான் போட்டாலும் அது நடக்காமல் போய்க்கொண்டிருக்கிறது.
இப்படியான நிலையில் தான் நேற்று நடிகை நயன்தாரா நடித்த அன்னபூரணி என்ற திரைப்படத்தின் டிரைலர் வெளியானது. அன்னபூரணி திரைப்படம் வரும் டிசம்பர் 1ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த ட்ரெய்லரை பார்த்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கிடைத்திருக்கிறது. காரணம் அதில் ஒரு சீனில் ஜெய், நயன்தாரா மற்றும் சில நண்பர்கள் கேரக்டர் நின்று கொண்டிருக்கிறார்கள்.
அதில் நயன்தாரா பக்கத்தில் பூர்ணிமா ரவி நின்று கொண்டிருக்கும் காட்சியைப் பார்த்து இணையவாசிகள் ஷாக்கில் இருக்கின்றனர். அட இது நம்ம பூர்ணிமா வாச்சே... என்று பலரும் கூறி வருகின்றனர். அதோடு இந்த திரைப்படத்தில் ஜெய்யோடு பல காமெடி நடிகர்கள் இருப்பதால் அன்னபூரணி திரைப்படத்தில் பூர்ணிமாவும் காமெடி கேரக்டரில் தான் நடித்திருக்கிறாரா என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனாலும் படம் வந்த பிறகுதான் வெளியே தெரியும் அவர் படம் முழுக்க இருக்கிறாரா? அல்லது ஒரு சில காட்சிகளில் மட்டும் வருகிறாரா என்பது தெரியும். ஆனாலும் தற்போது இணையத்தில் அதிகமான பூர்ணிமா என்ற வார்த்தை ட்ரெண்ட்டாக இருக்கும்போது நயன்தாராவின் திரைப்படத்திலும் பூர்ணிமா வந்திருப்பது இணையத்தில் பேசப்படுகிறது.












Click it and Unblock the Notifications