சத்தியமா நீங்க நினைக்கிற மாதிரி இல்லை.. பிக் பாஸுக்குள் எல்லோரும் இப்படித்தான்.. விசித்திரா சொன்ன பகீர்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்த விசித்திரா முதல் முறையாக இந்த நிகழ்ச்சிக்கு பிறகு பேட்டி கொடுத்திருக்கிறார். அதில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் நடந்த பல நிகழ்வுகள் குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார். அதோடு தன்னை பற்றி நெகட்டிவ் ஆக வந்த கமண்டுகளுக்கும் விசித்திரா அதில் விளக்கம் கொடுத்து இருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தான் புதிய வாழ்க்கையை தொடங்கிவிட்டதாகவும் இந்த நிகழ்ச்சியின் தாக்கத்திலிருந்து தான் இப்போது தான் வெளியே மெல்ல மெல்ல வந்து கொண்டிருக்கிறேன், அதுபோல பிக் பாஸுக்குள் என்ன நடந்தது என்பதை பற்றி பேசி இருக்கிறார். அதை விரிவாக பார்க்கலாம்.

பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி முடிவடைந்து இரண்டு வாரங்களுக்கு மேலாக ஆகிவிட்ட நிலையில் முதல் முறையாக இந்த சீசனில் போட்டியாளராக இருந்த விசித்திரா விஜய் டிவிக்கு பேட்டி கொடுத்திருக்கிறார். அந்த வீடியோ இப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் பிக் பாஸ் பற்றிய பல விஷயங்களை விசித்திரா வெளிப்படையாக பேசி இருக்கிறார்.
அதாவது இந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டு ரசிகர்களின் மத்தியில் இப்போது நல்ல பெயரோடு இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்திருக்கிறேன். இதுவே எனக்கு பெரிய சந்தோஷம்தான் என்றும் சீசனில் டைட்டில் ஜெயிக்கவில்லை என்றாலும் மக்கள் மனதை வெற்றி பெற்றுவிட்டேன் இன்று தன்னுடைய சந்தோஷத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
அதோடு எல்லோருமே பிக் பாஸ் வீட்டிற்குள் தாங்கள் வெற்றி பெற வேண்டும் என்ற கருத்தில்தான் விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஆனால் ஒரு சில இடங்களில் அவர்கள் செய்த சில செயல்கள் மக்கள் மத்தியில் தவறாக போயிருக்கிறது. ஆனால் எனக்கு அதிகமான நல்ல பெயர் கிடைத்திருப்பது எனக்கு சந்தோஷம்தான். இனி நான் அந்த பெயரை வைத்தே அடுத்த கட்டத்தை தொடர வேண்டும் என்று நினைக்கிறேன்.
இப்போது அதிகமான மக்கள் என்னை விச்சு மம்மி என்று கூப்பிடுகிறார்கள். அந்தப் பெயர் எனக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது. அதுபடியே இனி என்னுடைய வாழ்க்கை போகப் போகிறது. அதுபோல நான் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது செய்த செயல் சிலருடைய மனதை கஷ்டப்படுத்தி இருக்கிறது. அதாவது அந்த வீட்டிற்குள் எல்லோருக்கும் நம்மிடம் என்ன நடக்கிறது என்பது மட்டும்தான் தெரியுமே தவிர நம்மைப் பற்றி பிறர் என்ன பேசிக் கொண்டிருக்கிறார்கள் நமக்கு பின்பக்கத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது தெரியாது.
ஆனால் வெளியே இருக்கும் மக்கள்தான் அதை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். அதனால் உங்களுக்கு சில நேரங்களில் ஏன் இவங்க எப்படி எல்லாம் பேசினார்? ஏன் இப்படி எல்லாம் நடந்து கொண்டார் என்று கேள்வி வந்திருக்கும். அதனால் சிலர் என்னுடைய நடவடிக்கையில் அதிருப்தியை தெரிவித்து இருக்கிறார்கள். அதற்கு நான் மனசார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். சத்தியமா நான் எந்த இடத்திலும் அங்கு நடித்துக் கொண்டிருக்கவில்லை.
உண்மையாக என்னுடைய கேரக்டர் படி நடந்து கொண்டிருந்தேன். முதல் சில வாரங்களில் நான் உள்ளே இருப்பதற்கு ரொம்பவே கஷ்டப்பட்டேன். பிறகு நான் அங்கு ஒரு இடத்தை பிடித்து கம்பீரமாக அமர்ந்து கொண்டேன். வெளியே வந்த பிறகும் பலர் என்னிடம் நீங்கள் இப்படி எல்லாம் பேசி இருக்கக் கூடாது என்று சொல்கிறார்கள். நான் அப்படி பேசியது அந்த இடத்தில் உள்ளே இருந்த எனக்கு கொடுத்த அழுத்தம் காரணமாகத்தான் வேறு எந்த உள்நோக்கத்தோடு நான் அப்படியெல்லாம் நடந்து கொள்ளவில்லை.

இது உள்ளே நடந்தது ஒரு விளையாட்டு அதிலிருந்து நான் இப்போது வெளியே வந்து விட்டேன். இனி என்னுடைய நிஜ வாழ்க்கையில் என்னுடைய வாழ்க்கையை கொண்டு போய் விடுவேன் என்று அந்த பேட்டியில் விசித்திரா பேசியிருக்கிறார். அதோடு விசித்திரா அந்த பேட்டியில் மக்கள் தினேஷுக்கு எதிராக கேமரா முன்பு விசித்திரா பேசியதை குறித்து தான் நெகடிவ் கருத்து இவருக்கு வந்து கொண்டிருக்கிறது என்று விசித்திரா இப்படி ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
-
ஸ்டன் ஆன விஜய்.. "80 சீட்+ துணை முதல்வர்" எல்லாம் ஓகே.. ஆனா ஒரு விஷயத்தை யோசிக்கும் தவெக தலைமை -
விஜய்க்கு புது ஆஃபர் கொடுக்கும் பாஜக? 80 தொகுதி + துணை முதல்வர் பதவி! டெல்லியில் பரபர பாலிடிக்ஸ் -
Election Exclusive: நெருங்குது கிளைமேக்ஸ்..தாமரையுடன் கைகோர்க்கும் விசில்! நள்ளிரவில் ஹோட்டல் மீட்டிங்.. டோட்டல் மாற்றம் -
இந்தியா கோட்டை விட்ட ‘தங்கமான’ வாய்ப்பு! ஈரான் போரை பயன்படுத்தி.. தட்டித் தூக்கிய சீனா! சூப்பர் பவர் -
காங்கிரஸ் கட்சியா இது? தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே அசாம் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! -
கரூர் கேஸ்.. செந்தில் பாலாஜிக்கு மட்டுமல்ல.. "அவங்களுக்கும்" சம்மன் அனுப்பும் சிபிஐ.. பயங்கர செக்! -
4 மணி நேரம் கூட இருக்காது.. தேர்தல் அறிவிப்புக்கு முன்பு மம்தாவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. பாயும் பாஜக! -
தேர்தல் தேதிகளை அறிவித்த நொடி.. சட்டென தேனி வருசநாடு பற்றி பேசிய தேர்தல் ஆணையர்.. ஏன் தெரியுமா? -
போச்சு.. திமுக கூட்டணியில் முதல் விக்கெட்? பாஜக பக்கம் சாயும் பண்ருட்டி வேல்முருகன்? என்ன காரணம்? -
திமுக கூட்டணியில் தொடர்வது மறுபரிசீலனை செய்யப்படும்.. திடீரென டோனை மாற்றிய தவாக தலைவர் வேல்முருகன் -
Tamil Nadu Election 2026 Date: வெளியானது தமிழ்நாடு சட்டசபை தேர்தல் தேதி! எந்தெந்த தேதியில் என்னென்ன நடக்கும்? -
தோல்வியை ஒப்புக்கொண்ட அமெரிக்கா! ஈரான் முன் மண்டியிட்ட டிரம்ப்? குட்டி பாதையால் வீழ்ந்த வல்லரசு












Click it and Unblock the Notifications