Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஷ்ணு வெடி போட்ட காரணமே வேறயா? ரகசியத்தை உடைத்த தினேஷ்.. இப்படி ஒரு கதை இருக்கு தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் கிராண்ட் பினாலே நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தது. அதற்கு பிறகு இந்த சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வருகின்றனர். தொடர்ச்சியாக தாங்கள் எடுக்கும் புகைப்படங்கள் வீடியோக்களை அப்லோடு செய்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் விஷ்ணு தான் வெடி போட்ட வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவிட அது வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான் டைட்டில் ஜெயிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த விஷ்ணுவிற்கு கடைசியில் ஏமாற்றம் கிடைத்திருந்தாலும் அதை வெளி காட்டாமல் விஷ்ணு வெடி வெடித்து கொண்டாடி மகிழ்ந்து இருக்கிறார். அந்த வீடியோ இப்போது டிரெண்டிங் ஆகிக்கொண்டிருக்கும் நிலையில் இதற்கு பின்னாடி ஒரு பெரிய கதை இருக்கிறதாம். அது குறித்த தகவல்களையும் இவரோடு பிக் பாஸ் வீட்டிற்குள் நண்பர்களாக இருந்த போட்டியாளர்கள் உடைத்திருக்கிறார்கள்.

ஏற்கனவே பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் இரண்டு அணியாக தான் உள்ளே போட்டியாளர்கள் பிரிந்திருந்தனர். ஆரம்பத்தில் விஷ்ணு மாயா குரூப்போடு இருந்தார். பிரதீப் உடைய வெளியேற்றத்திற்கு பிறகு மாயா குரூப்பில் இருந்து வெளியே வந்த விஷ்ணு அந்த நேரத்தில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே வந்த போட்டியாளர்களோடு சேர்ந்து கொண்டார்.

அதிலும் ஆரம்பத்தில் அர்ச்சனா தினேஷ் போன்ற வைல்ட் கார்டு போட்டியாளர்கள் கூட விஷ்ணு சண்டையிட்டு இருந்தார். அதிலும் தினேஷ் விஷ்ணுவை பிரமோ பொறுக்கி என்று பேசிய அந்த சண்டை எல்லாம் மறக்கவே முடியாது. அதுபோல விஷ்ணுவும் அர்ச்சனாவும் சண்டை போடும்போது விஷ்ணுவை பார்த்து அர்ச்சனா குப்பை தொட்டியை தூக்கி காட்டி இது நீதான் என்று சொன்னதும் வேற லெவலில் பிரபலமானது.

 bigg boss tamil season 7 contestant Vishnu is celebrating and enjoying with explosions

அவ்வளவு சண்டை போட்டு இருந்தாலும் அடுத்த சில வாரங்களிலேயே விஷ்ணு, மணி, தினேஷ், அர்ச்சனா, கூல் சுரேஷ் போன்றோர் ஒரு அணியாக மாறி இருந்தனர் அப்போது ஒரு முறை விஷ்ணு இந்த வீட்டிற்குள் மாயாவை தவிர நம்ம அணியில் யார் டைட்டில் ஜெயித்தாலும் நான் வெளியே போய் 10,000 வாலா பட்டாசு வெடிச்சு அந்த மகிழ்ச்சியை கொண்டாடுவேன். நான் ஜெயிக்கிறனாலும் பரவாயில்லை ஆனால் மாயா மட்டும் கப்பு ஜெயிச்சிட கூடாது என்று சொல்லி இருந்தார்.

அதுபோலவே விஷ்ணு டாப் 5 போட்டியாளர்களில் ஒருவராக இருந்து வந்தார். அதுவும் டிடிஎஃப் டாஸ்க்கில் ஜெயித்து நேரடியாக இறுதி பைனலுக்கு வந்திருந்தார். அதுபோல இவரும் இந்த சீசன் டைட்டிலை வெல்வதற்கு வாய்ப்பு இருந்ததாக தெரிந்தது. அதுபோல அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டிருந்தாலும் அடிக்கடி காமெடியும் செய்து மக்களின் மனதையும் விஷ்ணு கவர்ந்திருந்தார்.

இந்த நிலையில் இந்த சீசனின் வின்னராக அர்ச்சனா தேர்வாகி இருக்கிறார். அதனால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு விஷ்ணு தான் சொன்ன மாதிரியே பத்தாயிரம் வாலா பட்டாசு வெடித்து அந்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்க அதற்கு அதிகமான வாழ்த்துக்களும் லைக்குகளும் குவிந்து வருகிறது. அதிலும் இவருடைய நண்பனான தினேஷ் "சொன்ன சொல்லைத் தவற மாட்டான்.... இந்த கோட்டைச்சாமி" என்று பாராட்டி இருக்கிறார்.

அடுத்ததாக சீரியல் நடிகையான ஃபரினா சூப்பர் என்று தெறி சிம்பல் கொடுத்திருக்கிறார். அதை தொடர்ந்து ப்ராவோ "வாங்குடா இன்னொரு பத்தாயிரம் வாலா" என்று பெருமிதம் கொண்டிருக்கிறார். அடுத்ததாக சனம் தங்க் ஆஃப் தங்க் லைஃப் அப்படிங்கற மாதிரி ஒரு கமெண்ட் தட்டி விட்டு இருக்கிறார்.

 bigg boss tamil season 7 contestant Vishnu is celebrating and enjoying with explosions

அதை தொடர்ந்து இந்த சீசனில் போட்டியாளராக இருந்த ஐசு ஏன்டா டேய் என்று விஷ்ணுவின் டயலாக்கை அவருக்கு கமெண்ட் ஆக கொடுத்து இருக்கிறார். அதைத் தொடர்ந்து சீரியல் நடிகையும் விஷ்ணு ஓடு சத்யா சீரியலில் கதாநாயகியாக நடித்த ஆயிஷா ஆக்சன் ஹீரோ என்று விஷ்ணுவை டாக் செய்திருக்கிறார். இப்படியாக கமாண்டுகள் குவிந்து கொண்டிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+