பிக் பாஸில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சரவணன்.. மேடையிலே சொன்ன வார்த்தை.. இனி கண்ணன் இவர்தானா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி இன்று பிரமாண்டமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இருந்து நடிகர் சரவணன் கலந்து கொண்டு இருக்கிறார்.
இவர் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடித்து வந்த கண்ணன் கேரக்டரில் இனி யார் நடிக்கப் போகிறார்கள் என்று எதிர்பார்ப்பு பலருக்கும் இருக்கிறது.

அதே நேரத்தில் நடிகர் சரவணன் பிக் பாஸ் மேடையில் சொன்ன வார்த்தை குறித்து பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
எதிர்பாராததை எதிர்பருங்கள் என்பதுதான் பிக்பாஸ் தாரக மந்திரம் ஆனால் தற்போதைய சீசன் யாரெல்லாம் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்ற விபரங்கள் சில நாட்களாகவே இணையத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடிகர் சரவணன விக்ரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறார் என்று சில வாரங்களாகவே பேசப்பட்டு வந்தது.
அந்த வகையில் இன்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் அது நிஜம் என்று நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் நடிகர் சரவணன் 13வது போட்டியாளராக பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகம் ஆகி இருக்கிறார். அதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணனாக யார் நடிப்பார்கள் என்று கேள்வி அனைவருக்கும் இருந்து வருகிறது. இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர் சீரியல் இன்னும் ஒரு சில வாரங்களில் முடிவுக்கு வர இருக்கிறது என்பதால் இதற்கான சூட்டிங் வேலைகள் எல்லாம் முடிவுக்கு வந்துவிட்டது என்று கூறப்படுகிறது.
அதே நேரத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் வாய்ப்புக்காக நடிகர் சரவணன் பல போராட்டங்களுக்கு பிறகு தான் கிடைத்தது என்றும் அந்த சீரியலில் அவர் இத்தனை நாட்களாக நடித்து வந்த நிலையில் கடைசி நேரத்தில் அவர் இல்லாமல் காட்சிகள் இருக்காது என்பதற்காக அவர் குறித்து காட்சிகளை ஏற்கனவே படமாக்கப்பட்டு விட்டது என்றும் கூறப்படுகிறது. அதனால் இனி கண்ணன் கேரக்டரில் சரவணன் நடித்த காட்சிகள் மட்டும்தான் இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது.

அதனால் தான் நடிகர் சரவணன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார் என்றும் தகவல்கள் பரவி வருகிறது. இந்த நிலையில் பிக் பாஸ் மேடையில் சரவணனனுக்காக குமரன் மற்றும் தீபிகா கலந்து கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் கையில் கடலைமிட்டாயை பரிசாக கொண்டு வந்திருந்தனர்.
அதை பார்த்ததும் சரவணன் அண்ணன் இது நம்ம கடையில் உள்ளதா? அப்படி என்றால் எக்ஸ்பைரி எல்லாம் பார்க்க வேண்டாம். தைரியமாக சாப்பிடலாம் என்று கிண்டல் செய்து இருந்தார். தற்போது இது குறித்தும் இந்த கண்ணனுக்கு எங்க போனாலும் நக்கல் ஜாஸ்தி தான் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications