பிக் பாஸூல் இருந்து வெளியேற கன்சப்ஷன் ரூமில் 2 போட்டியாளர்கள்.. ரசிகர்கள் கேட்கும் “நறுக்” கேள்வி
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கப்பட்டு ஒரு வாரம் முடிவடைந்திருக்கும் நிலையில் இன்று காலை 2 போட்டியாளர்கள் நாங்கள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற வேண்டும் என்று கன்சப்ஷன் ரூமில் பிக்பாஸிடம் பேசிக் கொண்டிருக்கின்றனர்.
அதில் பவா செல்லத்துரையும், நடிகை மாயாவும் தங்களால் இந்த வீட்டில் இனி இருக்க முடியாது என்று பிக் பாஸிடம் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

ஒரு வாரம் கூட இந்த நிகழ்ச்சியில் இவர்களால் இருக்க முடியவில்லை என்றால் எதற்காக வருகிறார்கள் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அந்த வகையில் பெரிய அளவில் எதிர்பார்ப்போடு இருந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த வாரம் முதல் ஒளிபரப்பாக தொடங்கி இருக்கிறது. அக்டோபர் இரண்டாம் தேதி பிரமாண்டமாக தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் அறிமுகமானார்கள. முதல் வாரத்திலேயே யாரும் எதிர் பார்க்காத வகையில் எலிமினேஷன் வைத்து அதில் நடிகை அனன்யா வெளியேற்றப்பட்டு இருக்கிறார்.
இதில் வழக்கமான பிக் பாஸ் நிகழ்ச்சியை போன்று தான் இந்த முறையும் சண்டை சச்சரவுகளுக்கு பஞ்சம் இல்லாமல் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அந்த நிலையில் நிகழ்ச்சி தொடங்கி ஒரு வாரம் மட்டுமே முடிவடைந்து இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் எங்களால் இனி தொடர முடியாது என்று காலை பவா செல்லத்துரையும், மாயா கிருஷ்ணனும் பிக் பாஸிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கின்றனர்.

அதில் மாயாவிடம் பிக் பாஸ் நீங்கள் இந்த நிகழ்ச்சியில் எதற்காக கலந்து கொண்டீர்கள்? இதில் கலந்து கொள்வதற்காக எத்தனையோ பேர் காத்துக் கொண்டிருக்கும் போது உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது என்றெல்லாம் பேசி அவருடைய மனதை மாற்றி இருக்கின்றனர்.ஆனால் பவா தன்னால் இனிமே இந்த நிகழ்ச்சியில் தொடர முடியாது.
தனக்கு ஏற்கனவே சுகர் இருக்கிறது. ஆனால் இங்கு நேரத்திற்கு சாப்பாடு கிடைப்பதில்லை. அதை குறித்து நான் குறை சொல்லவில்லை. விளையாட்டு என்றால் இப்படித்தான் இருக்கும். ஆனால் இந்த விளையாட்டை நான் தொடர்ச்சியாக விளையாடினால் என்னுடைய உடல்நிலை சரியில்லாமல் போய்விடும்.
அதனால் என்னை இன்று நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றி விடுங்கள் என்று உறுதியாக பேசியிருக்கிறார். சக போட்டியாளர்கள் எவ்வளவோ அட்வைஸ் செய்தும் அதை எல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது என்று பவா சொல்லிவிட இன்னும் சிறிது நேரத்தில் பிக் பாஸ் வீட்டில் இருந்து பவா வெளியேறுவார் என்று தகவல்கள் வெளியேறி இருக்கிறது.

இந்த நிலையில் இதுகுறித்து ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் திட்டி வருகின்றனர். காரணம் கடந்த சீசனில் ஜி பி முத்து பலருடைய எதிர்பார்ப்போடு நிகழ்ச்சியில் அறிமுகம் ஆகி ஒரு சில நாட்களிலேயே தன்னால் இந்த நிகழ்ச்சியில் இருக்க முடியாது. தன்னுடைய குடும்பத்தை பார்க்க வேண்டும் என்று வெளியேறி இருந்தார்.
இதே நேரத்தில் இந்த வாய்ப்புக்காக பலர் காத்திருக்கின்றனர். ஆனால் அவர்களுக்கெல்லாம் கிடைக்காத வாய்ப்பு இவர்களுக்கு கிடைத்து, அதை வீணடித்து விட்டனர் என்று கூறி வந்தனர்.அதுபோல இப்போது இவர்கள் இருவரும் வெளியேற போகிறோம் என்று கூறிக் கொண்டிருக்கும் நிலையிலும் அடுத்தவர்களுடைய வாய்ப்பை நீங்கள் தட்டி பறித்துக் கொண்டு இப்படி அலட்சியம் செய்யலாமா? என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஏற்கனவே முதல் எலிமினேஷனில் பவா செல்லதுரை வெளியேறுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனார். ஆனால் அவருக்கு பதிலாக நிகழ்ச்சியில் நிறைய நாட்கள் தொடர வேண்டும் என்று நினைத்த அனன்யா வெளியேறி விட்டார். ஆனால் அவர் வெளியேறிய பிறகு இவர் இந்த முடிவு எடுத்தது தவறு என்றும் பலர் கூறி வருகிறார்கள்.
அதுபோல ஏற்கனவே மாயா பேசிக் கொண்டிருப்பது ரசிகர்களுக்கு எரிச்சலாக இருப்பதாக அவர் குறித்து அதிகமான மீம்ஸ்கள் பரவி வரும் நிலையில் இந்த முறை அவர் வெளியேற வேண்டும் என்று முடிவெடுத்தது கூட சரியானது தான் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications