பிக்பாஸ் 7:போன சீசனில் ஜிபி முத்து..இந்த சீசனில் நடிகர் சிம்புவின் நண்பர்..களைகட்ட போகும் பஞ்சாயத்து
சென்னை: விஜய் டிவியில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி நாளை அதாவது அக்டோபர் ஒன்றாம் தேதி மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது.
இந்த நிலையில் இந்த சீசனில் யாரெல்லாம் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் அதிகமாக இருக்கிறது.

அதே நேரத்தில் போன சீசனில் ஜி பி முத்து கலந்து கொண்டிருந்த நிலையில் இந்த சீசனில் காமெடி நடிகர் ஒருவர் அவருக்கு பதிலாக கலந்து கொள்வதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
விஜய் டிவியில் எத்தனையோ ரியாலிட்டி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தான் அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். அதனாலேயே இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக 6 சீசன்கள் முடிவடைந்து தற்போது ஏழாவது சீசன் வரும் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் தொடங்கப்பட இருக்கிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் வாழ்க்கையில் அடுத்தடுத்த வாய்ப்புகளும் முன்னேற்றமும் வந்துவிடும் என்று அதிகமான பிரபலங்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆனால் ஒரு சில பிரபலங்கள் இதில் கலந்துகொண்டு தாங்கள் அதுவரைக்கும் சம்பாதித்து வைத்திருந்த பெயரும் புகழையும் கூட இழந்து போய் இருக்கின்றனர்.

அதனால் ஒரு சில பிரபலங்கள் இந்த நிகழ்ச்சிக்கான கிடைத்த வாய்ப்புகளை கூட வேண்டாம் என்று ஓடிப்போய் ஒளிந்து கொள்வதாகவும் கூறப்படுகிறது. இந்த நேரத்தில் தற்போது ஏழாவது சீசன் தொடங்கப்பட்டு இருக்கும் நிலையில் இதில் யாரெல்லாம் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்று உத்தேச பட்டியல் சில மாதங்களாகவே வெளியாகி இருக்கிறது. ஒவ்வொரு சீசனிலும் இந்த மாதிரி வெளியாகும் உத்தேச பட்டியலில் இருக்கும் அதிகமான போட்டியாளர்கள் கலந்து கொள்வது வழக்கம்தான்.
அந்த வகையில் இந்த சீசனில் சீரியல் நடிகர் விஷ்ணு, தொகுப்பாளர் மாகாபா, நடிகை தர்ஷா குப்தா, பாண்டியன் ஸ்டோர் சரவணன், நடிகை வனிதாவின் மகள் ஜோவிதா, நடிகை ரோஷினி ஹரிப்ரியன், பப்ளூ பிரித்திவிராஜ், விஜே அர்ச்சனா, ரக்ஷன், நடிகை நிவிஷா,ரோபோ சங்கரின் மகளான நடிகை இந்திரஜா சங்கர் என பலருடைய பெயர் அடிபட்டு கொண்டிருக்கிறது. அந்த வகையில் நடிகர் கூல் சுரேஷின் பெயரும் தற்போது இந்த பட்டியலில் இடம் பெற்று இருக்கிறது.

நடிகர் கூல் சுரேஷ் தனக்கு வாய்ப்புகள் சரியாக அமையவில்லை என்று அடிக்கடி பேட்டிகளில் பேசிக் கொண்டிருக்கிறார். அதுபோல தற்போது திரைப்படங்கள் வெளியாகும் போது அந்த திரைப்படம் குறித்து பேசி பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். எந்த சினிமா நிகழ்ச்சிகள் என்றாலும் ஆஜராகி விடும் இவர் சமீபத்தில் ஆடியோ லாஞ்சில் தொகுப்பாளருக்கு மாலை அணிவித்து சர்ச்சையில் சிக்கினார்.
இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டால் கன்டென்ட்க்கு பஞ்சமே இருக்காது என்று நம்பலாம். அதை நேரத்தில் கடந்த சீசனில் ஜிபி முத்து கலந்து கொண்டது போன்று இந்த சீசனில் கூல் சுரேஷ் கலந்து கொண்டு இருக்கிறார். சும்மாவே கூல் சுரேஷ் என்ன பேசுகிறோம் என்று யோசிக்காமல் பேசிவிடுவார். இப்போது 24 மணி நேரத்தில் என்னவெல்லாம் பேசப்போகிறாரோ என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications