பாண்டியன் ஸ்டோரில் இருந்து பிக்பாஸுக்கு போறது தனம் இல்லையா? இந்த நடிகரா? இனி சீரியலில் விலகல்!?
சென்னை: விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலம் ஒருவர் கலந்து கொள்வதாக தகவல்கள் பரவி வருகிறது.
அதே நேரத்தில் இந்த சீரியலில் இருந்து அவர் விலகப் போகிறாரா? என்ற இந்த கேள்விகளும் எழுந்து வருகிறது.

அதே நேரத்தில் இனி பிக் பாஸ் நிகழ்ச்சி பார்ப்பதற்காக பாண்டியன் ஸ்டோர் சீரியல் ரசிகர்களும் ரெடியாக போகின்றனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்கலில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சி ஆரம்ப காலகட்டத்தில் இருந்து இப்ப வரைக்கும் அதிகமான ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. அதிகமாக இளைஞர்களை கவர்ந்த பிக் பாஸ் நிகழ்ச்சி விரைவில் சீசன் 7 தொடங்குகிறது. வரும் அக்டோபர் ஒன்றாம் தேதியில் இருந்து தொடங்க இருக்கிறது என்ற செய்திகள் வெளியாகி இருக்கிறது.
இந்த நிலையில் யாரெல்லாம் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என்று உத்தேச பட்டியல் வெளியாகி இருக்கிறது. அதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிர் கேரக்டரில் நடிக்கும் நடிகர் குமரன் பெயரும் இருக்கிறது. ஆனால் இதுவரைக்கும் அவருடைய பெயர் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. இப்போது திடீரென்று இந்த லிஸ்டில் அவருடைய பெயரும் இடம் பெற்று இருக்கிறது. அது குறித்து அவர் இன்னமும் எந்த அதிகாரப்பூர்வமான தகவல்களையும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில் சில தினங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து தான் விலகுவதாகவும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை தனியார் நிர்வகிப்பார்கள் என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர் சீரியலும் விரைவில் முடிவுக்கு வருகிறது என்ற தகவல்களும் வெளியாகி இருந்தது. இதனாலேயே ஒருவேளை குமரன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக இருக்குமோ என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில் ஒரு வேலை பிக் பாஸ் நிகழ்ச்சியில் குமரன் கலந்து கொண்டால் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் அவருக்காக இருக்கும் ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்கு அதிகமான வாய்ப்புகள் இருக்கிறது. அதனாலேயே பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான எதிர்பார்ப்பும் அதிகரிக்கும். இதுவரைக்கும் சீரியலில் ஒரு விதமாக குமரனை கதிராக பார்த்து வந்த ரசிகர்களுக்கு அவருடைய நிஜ கேரக்டர்களை பிக் பாஸ் நிகழ்ச்சியில் பார்த்துக் கொள்ள முடியும்.
ஏற்கனவே குமரன் தன்னுடைய டான்ஸ் திறமையின் மூலமாக பல போராட்டங்களுக்கு பிறகு ஒரு சில நிகழ்ச்சிகளில் டான்ஸ் ஆட வாய்ப்பு கிடைத்து அதிலிருந்து தான் அவருக்கு நடிகராக வாய்ப்பு கிடைத்தது இப்போது ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்ட பிறகு பெரிய அளவில் அவருக்கு வாய்ப்பு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. அதனால் என்ன நடக்கப்போகிறது என்பதை பார்ப்போம்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications