பிக் பாஸ் 7 லைவ்: பிக் பாஸிலிருந்து வெளியேற சுவர் ஏறி குதிக்க போன கூல் சுரேஷ்.. வெளியான அதிர்ச்சி காரணம்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் இன்றைய எபிசோட்டின் 24 மணி நேர லைவில் கூல் சுரேஷ் பிக் பாஸில் இருந்து வெளியேற வேண்டும் என்பதற்காக சுவர் ஏறி குதிக்க முயற்சி செய்து இருக்கிறார்.
ஏற்கனவே இது போல கடந்த சீசன்களில் சென்ராயன் சுவர் ஏறி குதிக்க முயற்சி செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிக் பாஸ் கூல் சுரேஷை கூப்பிட்டு அட்வைஸ் செய்திருக்கிறார்.
அதோடு தான் கூல் சுரேஷ் எதற்காக இப்படி ஒரு முடிவு எடுத்தார் என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு உளவியல் சார்ந்த நிகழ்ச்சியாக தான் இருந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பிரபலங்கள் ஒரே வீட்டிற்குள் 100 நாட்கள் எந்த வெளி உலக தொடர்பும் இல்லாமல் இருக்கின்றனர். அதே நேரத்தில் உள்ளே இருக்கும் வண்ணங்கள் மற்றும் பொருள்களால் எளிமையாக எல்லோருக்கும் கோபம் ஏற்பட்டுவிடும்.
அந்த மாதிரி சூழ்நிலையில் இருக்கும் போது பிரபலங்கள் செய்யும் செயல் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. அந்த மாதிரிதான் இன்றைய 24 மணி நேர எபிசோடில் கூல் சுரேஷ் செய்து இருக்கிறார். ஏற்கனவே சில நாட்களாக கூல் சுரேஷ் எனக்கு வீட்டின் ஞாபகமாக இருக்கிறது. நான் வீட்டில் சொல்லாமல் வந்துவிட்டேன் நான் வீட்டிற்கு போக வேண்டும் என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் இன்று பிக் பாஸில் இருந்து வெளியே போக வேண்டும் என்பதற்காக சுவர் ஏறி குதிக்க முயற்சி செய்தார். சுவற்றில் மேல் பகுதியில் நின்று கொண்டிருக்கும்போது அவரை பிக்பாஸ் அழைத்து அட்வைஸ் கொடுத்திருக்கிறார். அப்போது அந்த இடத்தில் மணிச்சந்திரா மட்டுமே இருந்த நிலையில் அவரும் யாரிடமும் இது பற்றி சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில் பிக் பாஸ் எதற்காக நீங்க இப்படி ஒரு செயலை செய்றீங்க? இதனால் நீங்க என்ன நிரூபிக்க விரும்புகிறீர்கள் என்று கேட்க, அதற்கு கூல் சுரேஷ் எனக்கு வீட்டில் சில பிரச்சனைகள் இருக்கிறது. அதை தீர்க்காமல் நான் வந்துவிட்டேன். இப்போ எனக்கு வீட்டு ஞாபகமாகவே இருக்கிறது என்று சொல்ல, நீங்க இப்படி செஞ்சி கெட்ட பேரோட போகிறது உங்கள் வீட்டில் உள்ளவங்களுக்கு சந்தோஷத்தை கொடுக்குமா? என்று பிக் பாஸ் கேட்கிறார்.
அதற்கு சுரேஷ் இல்லை என்று சொல்கிறார். பிறகு எதற்காக இப்படி செய்து கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் நல்லபடியாக விளையாடி வெற்றியோடு போக வேண்டும் என்று தானே இங்கே வந்தீர்கள். அந்த வழியில் தானே இவ்வளவு தூரம் போய்க்கொண்டிருக்கிறீர்கள். அதோடு உங்களுடைய வீட்டினர் நீங்கள் நல்லபடியாக இருப்பதை பார்த்து சந்தோஷம்தான் படுவார்கள்.
இது போல நீங்களாக வெளியே போகிறேன் என்று இந்த வீட்டின் ரூல்ஸ் மீறி செய்தால் அவர்களும் கஷ்டப்படதானே செய்வார்கள் என்று அட்வைஸ் கொடுத்து அதோடு அதட்டும் தோணியிலும் பேசியிருந்தார். பிறகு கூல் சுரேஷ் ஒரு வழியாக சமாதானம் ஆகி இருக்கிறார். ஆனாலும் இன்று இனி என்ன பிரச்சனை நடக்கப்போகிறது என்று தெரியவில்லை. அதே நேரத்தில் இது 24 மணி நேர எபிசோடில் இன்று காலையில் நடந்திருப்பதால் இது ஒரு மணி நேர எபிசோடில் ஒளிபரப்பாகுமா என்பதும் தெரியவில்லை.
ஆனாலும் சில தினங்களுக்கு முன்பு கூல் சுரேஷ் சோகமாக இருப்பதை பார்த்து விசித்திரா என்ன ஏன் இப்படி இருக்கிறீங்க என்று அன்பாக பேச அதனால் சுரேஷ் தன்னுடைய வீட்டு பிரச்சினைகளை எல்லாம் விசித்திராவிடம் பேசி இருக்கிறார். ஆனால் அதை சொல்லி அடுத்த நாள் விசித்திரா கூல் சுரேஷை நாமினேசன் செய்ததை கூல் சுரேஷால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
தான் நம்பியவர் தனக்கு துரோகம் செய்துவிட்டார் என்றே புலம்பி கொண்டு இருந்தார். இந்த நிலையில் இந்த இடத்தில் தான் இருக்க விரும்பவில்லை என்று மீண்டும் இப்போது கூல் சுரேஷ் சொல்லிக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே இதுபோல சென்ராயன் தன்னால் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் முடியவில்லை என்று சுவர் ஏறி குதிக்க முயற்சி செய்ததும் குறிப்பிடத்தக்கது.
அதுபோல காமெடி நடிகையான மதுமிதாவும் பிக் பாஸ் போட்டியாளர்களோடு ஏற்பட்ட பிரச்சனையால் தன்னால் இந்த வீட்டில் இருக்க முடியவில்லை தான் வெளியே போக வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருந்து பிறகு கையை வெட்டி பிரச்சனை செய்திருந்தார். அதனால் அவர் அதிரடியாக வெளியேற்றப்பட்டு இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அந்த நேரத்தில் 24 மணி நேர எபிசோடுகள் இல்லை ஆனால் இப்போது இருக்கிறது. இதனால் இந்த வாரத்தில் என்ன மாற்றம் ஏற்பட போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம். அதே நேரத்தில் கூல் சுரேஷ் செய்த செயல் சரியா என்பதில் உங்களுடைய கருத்து என்ன என்பதை தட்டி விடுங்க.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications