பெட்டில் இருக்கும்போது ஆடை பற்றி பிரதீப் சொன்ன வார்த்தை.. கோபத்தில் பூர்ணிமா.. விஷ்ணு கேட்ட கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் பிரதீப் மீது குற்றச்சாட்டு வைத்த பூர்ணிமாவிடம் கோர்ட் டாஸ்க்கில் விஷ்ணு கேள்வி மேல் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

அதில் பூர்ணிமா தான் பெட்டில் படுத்து இருந்தபோது பிரதீப் தன்னை பற்றி மோசமான கமெண்ட் செய்தார் என்று குற்றச்சாட்டு வைத்திருந்தார்.

இதற்கு விஷ்ணு நீங்கள் பிரதீப் கமாண்ட் செய்யும் போது சிரித்துவிட்டு ஏன் அதை பிறகு பெரிதாக மாற்றினீர்கள் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். இந்த நிலையில் இன்று நீதிமன்ற டாஸ்க்கில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

bigg boss tamil season 7 court task vishnu and poornima speech

பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் பிரதீப் ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்ட பிறகு பிக் பாஸ் வீட்டிற்குள்ளும் சரி வெளியேயும் சரி அவரை பற்றிய செய்திகள் தான் அதிகமாக அடிபட்டுக் கொண்டிருக்கிறது. பிக் பாஸில் இருந்து பிரதீப்பை வெளியேற்றியது தவறு என்று ஒரு தரப்பினர் வெளியே பேசிக் கொண்டிருக்கும் நிலையில் உள்ளேயும் இது பற்றிய விவாதம் காரசாரமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் இந்த வாரத்தில் நீதிமன்றம் டாஸ்க் தொடங்கப்பட்டிருக்கிறது. அதில் பல விடை தெரியாத கேள்விகளுக்கு நீதிமன்றத்தில் விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதில் இப்போது ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி கொண்டு இருக்கிறது. அதில் குற்றவாளி கூண்டில் பூர்ணிமா நின்று கொண்டிருக்கிறார்.

எதிர் தரப்பில் விஷ்ணு நின்று கொண்டு பூர்ணிமாவிடம் கேள்வி கேட்கிறார். அதாவது நீங்க கமல் சார் முன்னாடி பிரதீப் என்னைப் பற்றி தப்பான கமெண்ட் பாஸ் பண்ணுகிறார் என்று சொன்னீர்களே அது என்ன கமெண்ட் என்று சொல்ல முடியுமா என்று கேட்கிறார்.அதற்கு பூர்ணிமா அதை இப்போது சொல்ல முடியாது என்று சொல்லி விடுகிறார்.

அதோடு அவர் தப்பான கமெண்ட் செய்தார் என்று சொல்வதை விடவும் அந்த கமெண்ட் என்னை அன் கம்ஃபர்டபிள் ஆக பீல் பண்ணி, அவர் சொன்ன வார்த்தையால் படுத்திருந்த நான் பெட்ஷீட் எடுத்து மூடிகிட்டேன் என்று சொல்கிறார். அதற்கு விஷ்ணு அப்படி நீங்கள் பீல் பண்ற மாதிரியே பிரதீப் என்ன கமென்ட் பாஸ் பண்ணுனார் என்று கேட்க, அதற்கு அதை நான் இப்போது சொல்ல முடியாது என்று மீண்டும் பூர்ணிமா சொல்கிறார்.

அதற்கு சரி என்று விஷ்ணு பூர்ணிமாவிடம் நீங்க இப்பதானே கோர்ட்டுக்குள் முந்தைய விவாதத்தின் போது எனக்கு ஏதாவது தப்பா பட்டுச்சுன்னா நோ மீன் நோ என்று உடனுக்குடன் சொல்லி விடுவேன் என்று சொன்னீங்க. ஆனால் பிரதீப் உங்களை பற்றி தப்பா கமெண்ட் பண்ணி இருக்கும்போது நீங்க அன்னைக்கு கேட்கல, மாறாக சிரிச்சிட்டு பெட்ஷீட் எடுத்து மூடிக்கிட்டிங்க.

அதனால எனக்கு ஒன்னு தெரிஞ்சாகணும். நீங்க பிரதீப் பேசின அந்த கமெண்டை என்ஜாய் பண்ணுனீங்களா? இல்ல அதை அபியூஸ்னு நெனச்சீங்களா? என்று விஷ்ணு கேள்வி கேட்கிறார். அதற்கு பூர்ணிமா ஆனால் நான் இதற்கு முன்பு இரண்டு மூன்று முறை பிரதீப்பிடம் அவர் என்னை இந்த மாதிரி கமெண்ட் பாஸ் பண்ணும் போது நான் நோ சொல்லி இருக்கிறேன். ஆனாலும் திருப்பி திருப்பி பண்ணிக்கிட்டு இருந்ததால நான் எங்க பேசணுமோ அங்க பேசலாம்னு விட்டு விட்டேன் என்று சொல்கிறார்.

அதைத்தொடர்ந்து விஷ்ணு அப்படியா அப்போ பிரதீப் உங்களைப் பற்றி தப்பா கமெண்ட் பண்ணது எப்போ நடந்துச்சுன்னு சொல்ல முடியுமா? என்று கேட்டு நீங்க என்ன உடை போட்டு இருந்தீங்க என்று கேட்கிறார். அதற்கு பூர்ணிமா நான் ஷார்ட்ஸ் போட்டு இருந்தேன். அது என்னுடைய தவறா என்று கோபமாக கேள்வி கேட்க, அதற்கு விஷ்ணு இவங்களுக்கு ஷார்ட் மெமரினு நினைக்கிறேன்.

நீங்க சொன்ன பிரதீப் உங்களைப் பற்றி தப்பான கமெண்ட் பேசியது நான்காவது வாரத்தில் நடந்தது இல்லை ஏனென்றால் தாலாவது வாரத்தில் பிரதீப் பாசில் இருந்தாரு. ஐந்தாவது வாரத்தில்தான் பிக் பாஸ் வீட்டிற்குள் பிரதீப் வந்தாரு. அப்போ தான் நீங்க சொன்ன அந்த கமெண்ட் பாஸ் பண்ணுனாரு.

அந்த டைம்ல நீங்க போட்டு இருந்த டிரஸ் என்ன தெரியுமா? ஆரஞ்ச் கலர் லெக்கின்ஸ் போட்டு இருந்தீங்க. இதை நான் ஏன் சொல்றேன்னா இப்படி எப்பவுமே ஒருத்தங்க மேல தப்பான ஒரு குற்றச்சாட்டை வைக்காதீங்க என்று வாதிட்டு இருக்கிறார். தற்போது இந்த வீடியோவை பிரதீப் ரசிகர்கள் ட்ரண்ட் செய்து விஷ்ணுவை பாராட்டி வருகிறார்கள்.

அதே நேரத்தில் பூர்ணிமா பிரதீப் தன்னை பற்றிய தவறான கமெண்ட் பாஸ் பண்ணுனார் என்று சொல்வது பற்றி ரவீணா ஏற்கனவே ஒரு வீடியோவில் பேசியிருந்தார். அது என்னன்னா பூர்ணிமா டைட்டான லெக்கின்ஸ் அணிந்திருக்கும் போது எதிர்பக்கத்தில் பெட்டில் அமர்ந்திருந்த பிரதீப் பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது பூர்ணிமா போர்வையை இழுத்து மூடும் போது மச்சான் மறைக்காத என்று இரட்டை அர்த்தத்தில் பிரதீப் பேசினார் என்று கூறி இருந்தார். அது பற்றி தான் தற்போது இன்று விவாதம் நடைபெற்று இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தப் பிரச்சனைக்கு நீங்க என்ன நினைக்கிறீங்க? கமெண்டில் அதை சொல்லி விட்டு போங்க.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+