பிக் பாஸ் 7: அர்ச்சனாவின் பெருந்தன்மை.. தலையில் தண்ணீரை ஊற்றி நிக்சன் செய்த அதிரடி.. மாட்டிய பிக் பாஸ்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் டான்ஸ் மாரத்தான் டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதில் போட்டியாளர்களுக்கு பல நடிகர்களின் கேரக்டர் கொடுக்கப்பட்டிருக்கிறது.
அதில் மாயாவிற்கு பிக் பாஸ் ஓரவஞ்சனையாக உலக அழகி ஐஸ்வர்யா ராய் கேரக்டர் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று பல ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
அதே நேரத்தில் நேற்றிலிருந்து முழுக்க அர்ச்சனா தனக்கு கொடுக்கப்பட்ட ஈஸ்வரி கேரக்டரில் மாறி இருக்கிறார். அதுபோல நிக்சனும் யாரும் எதிர்பார்க்காத வகையில் தன்னுடைய பர்பாமன்ஸை காட்டி இருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

இந்த வகையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருந்த கலகலப்பான டான்ஸ் மாரத்தான் டாஸ்க் தொடங்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே இந்த டாஸ்க் கடந்த சீசனில் நடைபெற்றது தான். இதற்கு போட்டியாளர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கேரக்டரில் படி அன்று முழுக்க விளையாட வேண்டும்.
பிறகு தங்களுடைய பர்பாமன்ஸ் அடிப்படையில் சக போட்டியாளர்கள் கொடுக்கும் பணத்தில் யார் அதிகமாக பணம் வைத்திருக்கிறார்களோ அவர்கள்தான் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த நிலையில் இந்த முறை போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட கேரக்டர்களில் ஆரம்பத்தில் பல போட்டியாளர்கள் தங்களுக்கு இது வேண்டாம் என்று அழுது கொண்டிருந்தனர்.
அதில் அர்ச்சனாவும் ஒருவர். எல்லா போட்டியாளர்களுக்கும் பாசிடிவ் கேரக்டர் கொடுத்துவிட்டு எனக்கு மட்டும் நெகட்டிவ் கேரக்டர் கொடுத்து இருக்கிறார்கள். அதாவது திமிரு பட ஈஸ்வரி கேரக்டர் எனக்கு கொடுத்திருக்கிறார்கள், அப்போ வெளியேயும் என்னுடைய பெயர் இப்படித்தான் போய்க்கொண்டிருக்கிறது என்று அர்ச்சனா சொல்லி அழுது கொண்டு இருக்க, பிறகு பிக் பாஸ் அவரைக் கூப்பிட்டு அவருக்கு ஆறுதல் கூறி அட்வைஸ் கொடுத்திருந்தார்.
அதற்கு பிறகு அர்ச்சனா முழுக்க முழுக்க ஈஸ்வரியாகவே மாறி இருந்தார். அதுபோல மாயாவும் எனக்கு ஏற்கனவே இது போன்ற கேரக்டரை தந்திருக்கிறீர்கள். அதனால் இந்த முறையாவது கேரக்டரை மாத்தலாமா என்று கேட்டிருந்தார். ஆனால் அதற்கும் பிக் பாஸ் மறுத்துவிட்டார். மாயாவிற்கு ஜீன்ஸ் திரைப்படத்தில் ஐஸ்வர்யாராயின் கேரக்டர் கொடுக்கப்பட்டிருந்தது.
அது எனக்கு பிடிக்கவில்லை என்று கூறியிருந்தார். இது அதிகமான ரசிகர்கள் அதிர்ச்சி அடைய வைத்திருந்தது. உலக அழகி ஐஸ்வர்யாராய் கேரக்டர் கொடுத்த பிறகும் இப்படி சொல்லலாமா என்பது பலருடைய கேள்வி. அதோடு ஐஸ்வர்யா ராய் கேரக்டர் தனக்கு கொடுத்த பிறகு அந்த கேரக்டரில் கொஞ்சம் கூட மாயா இல்லை என்பதுதான் உண்மை.

நேற்றைய டாஸ்க்கில் மாயாவிற்கு ஜீன்ஸ் படத்தில் கண்னோடு காண்பதெல்லாம் பாடல் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அந்த பாட்டுக்கு மாயா மாயாவாக மட்டும் தான் அந்த பாட்டிற்கு முழுக்க டான்ஸ் ஆடி இருந்தார். இது குறித்து அனைவரும் கடைசியில் விமர்சனம் தெரிவித்திருந்தனர். அது போல இன்று வெளியான முதல் ப்ரோமோவிலும் மாயா மற்றும் ரவீனா இருவரும் டான்ஸ் ஆடுகின்றனர்.
அப்போதும் மாயா ஐஸ்வர்யா ராய் கேரக்டரில் கொஞ்சம் கூட செட் ஆகாத மாதிரி தான் தன்னுடைய உடை மற்றும் உடல் மொழி எல்லாவற்றையும் காட்டி இருந்தார். இதனை பூர்ணிமா சுட்டிக்காட்டி தன்னுடைய ஆதரவை ரவீனாவிற்கு தெரிவிக்க அதனால் பூர்ணிமா மற்றும் மாயாவிற்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
பிக் பாஸ் என்னதான் மாயாவிற்காக ஸ்பெஷலாக ஐஸ்வர்யா ராய் கேரக்டர் கொடுத்தாலும் மாயா அதை அவமரியாதை செய்து விட்டார். இது குறித்து கமல்ஹாசன் இந்த வரம் விசாரிப்பாரா என்றும் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதுபோல இன்று இரண்டாவது ப்ரோமோவில் இந்த டான்ஸ் ஜோடி மாரத்தான் டாஸ்க்கில் யார் சிறப்பாக செயல்பட்டார்கள் என்று கேட்கப்பட்டது.
அதில் அனைவரும் அர்ச்சனா மற்றும் தினேஷ் பெயரை சொல்ல அர்ச்சனா ஏற்கனவே டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கில் கலந்து கொள்ள முடியாமல் போட்டியாளர்கள் அவரை நாமினேஷன் செய்திருந்த நிலையில் தனக்கு கொடுத்திருந்த புள்ளிகளை வேறு யாருக்காவது கொடுக்கலாம் என்று பிக் பாஸ் சொன்னபோது அதை சற்றும் யோசிக்காமல் பூர்ணிமாவிடம் தன்னுடைய புள்ளிகளை கொடுக்க இருந்தார்.
அதனால் மாயா கோவப்பட்டு இருக்கிறார். அர்ச்சனாவின் பெருந்தன்மையை பலரும் பாராட்டி வருகின்றனர். அதுபோல நேற்று இன்னொரு சம்பவம் நடந்தது. அதை எல்லோரும் பாராட்டி வருகிறார்கள். அதாவது ஆரம்பத்திலிருந்து நிக்சனுடைய செயல்பாடு அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
ஆனால் நேற்று நிக்சனுக்கு தனுஷ் கெட்டப் கொடுக்கப்பட்டிருந்தது. தன்னுடைய கேரக்டர் படியை நிக்சன் பல இடங்களில் இருந்து வந்தார். அப்போது தான் நிக்சனுக்கு காதல் கொண்டேன் திரைப்படத்திலிருந்து தொட்டு தொட்டு போகும் தென்றல் என்ற பாடல் கொடுக்கப்பட்டது.
அந்த பாடலுக்கு யாரும் எதிர்பார்க்காத வகையில் இரவு நேரத்தில் குளிர் தண்ணீரை தலை முழுக்க ஊற்றி, பாடலுக்கு அழகாக நிக்சன் டேன்ஸ் ஆடி இருந்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுவரைக்கும் நிக்சன் பிக் பாஸ் வீட்டிற்குள் எத்தனையோ பிரச்சனைகள் செய்து இருந்தாலும் நேற்று அவருடைய பர்பாமன்ஸ் மூலமாக பலரும் நிக்சனை பாராட்டி வருகிறார்கள்.
-
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ -
"விவாகரத்து + தேர்தல்".. சென்னையில் சொத்துகளை அவசரஅவசரமாக விற்கும் நடிகர் விஜய்..ஷாக் காரணங்கள் -
வாரத்தில் 4 நாள் தான் வேலை.. 3 நாள் லீவு! எரிபொருள் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த இலங்கை அதிரடி முடிவு -
சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன 4 பேரை கவனிச்சீங்களா? விஜய்யை முளையிலேயே ஆஃப் செய்து? எங்கேயோ கேட்ட குரல் -
கூட்டணி சேர விடாமல் விஜய்யை தடுக்கும் "அந்த" 2 பேர்? பணத்திற்கு எங்க போறது? குமுறும் தவெகவினர் -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல்












Click it and Unblock the Notifications