பிக் பாஸ் 7: தொடங்கியது டான்ஸ் மாரத்தான்.. தினேஷுக்கு ஸ்பெஷல் கேரக்டர்.. விசித்ரா செஞ்ச வேலைய பாருங்க
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் டிசம்பர் 13ஆம் தேதிக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருந்த டான்ஸ் மாரத்தான் டாஸ்க் தொடங்கி இருக்கிறது. இதில் போட்டியாளர்கள் ஜோடியாக தங்களுடைய டான்ஸ் தொடங்கி இருக்கிறார்கள்.
அதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பல ஜோடிகள் கலக்கி இருக்கிறார்கள். அது யார் யார் என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி இன்று 73 வது வது நாள் தொடங்கி இருக்கிறது. இதில் கடந்த சில நாட்களாகவே பிக் பாஸ் வீட்டில் அனல் பறக்கும் விவாதம் நடந்து வருகிறது. ஏற்கனவே கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏகப்பட்ட பிரச்சனைகள் இருந்தது. அதிலும் அர்ச்சனா நிக்சன் இருவருக்கும் இடையே சண்டை வெடித்தது.
இந்த சண்டையில் நிக்சன் அர்ச்சனாவை படுமோசமாக பேசி இருந்தார். ஆனாலும் கமல்ஹாசன் எல்லோ கார்ட் அவருக்கு கொடுத்து இருந்தார். ஆனால் அவரை கண்டித்ததை விடவும் தினேஷ், அர்ச்சனா, மணி, விஷ்ணுவைதான் கமல் அதிகமாக கண்டித்து இருந்தார். அதோடு இந்த பிக் பாஸ் வீட்டிற்குள் என்டர்டைன்மெண்ட்டே இல்லை உள்ளே வன்மம் தான் அதிகமாக இருக்கிறது என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் இந்த வாரம் என்டர்டெயின்மென்ட் கொடுக்கும் விதத்தில் புதியதாக டாஸ்க் தொடங்கப்பட்டிருக்கிறது. அதாவது ஒவ்வொரு சீசனில் நடக்கும் டான்ஸ் மாரத்தான் டாஸ்க் தான் தொடங்கி இருக்கிறது. இதில் ஒவ்வொரு ஜோடியாக போட்டியாளர்கள் பங்கேற்றிருக்கின்றனர். நேற்று பிக் பாஸ் வீட்டிற்குள் டாஸ்க் தொடங்கப்பட்டிருக்கிறது.
அதை தொடர்ந்து இன்று டான்ஸ் மாரத்தான் டான்ஸ் நிகழ்ச்சி தொடங்கி இருக்கிறது அதில் தினேஷ் படையப்பா ரஜினிகாந்த் ஆக வேஷம் போட்டு இருக்கிறார், அவருக்கு ஜோடியாக நீலாம்பரியாக விசித்திரா மாறி இருக்கிறார். அதுபோல போக்கிரி விஜய் ஆக விஷ்ணு மாறி இருக்கிறார். .

அதுபோல தனுஷ் கெட்டப்பில் நிக்சன் மாரி இருக்கிறார். அதுபோல மணி வாரணம் ஆயிரம் சூர்யாவாகவும், மாயா சிம்ரன் ஆகவும் மாறி கலகலப்பாக அட்ராசிட்டி செய்து கொண்டிருக்கின்றனர். இந்த கலகலப்பான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இந்தநிலையில் கடந்த வாரம் முழுக்க சண்டை சச்சரவுகள் இருந்த நிலையில் கமல் கொடுத்த அட்வைஸ் காரணமாக இந்த வாரம் கலகலப்பாக மாறுமா? இல்ல இந்த டாஸ்க்கையும் யாரும் வீம்பு பிடித்து பிரச்சனையை விஸ்வரூபம் ஆக்குவார்களா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications