பிக் பாஸ் 7 ரசிகர்களுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி.. இன்று நடந்தது தான் அதிசயம்.. இதை நம்ப முடியலையே!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் டிசம்பர் 15ஆம் தேதிக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் இன்று பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி 75 வது நாள் கலகலப்பாக கொண்டாடப்பட்டு இருக்கிறது.
இதுவரைக்கும் சண்டை போட்டுக் கொண்டிருந்த போட்டியாளர்கள் பலர் இன்று நடந்து கொண்ட விதத்தைப் பார்த்து அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கிடைத்திருக்கிறது.

அந்த வகையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளிலிருந்து அதிகமான சண்டை சச்சரவுகள் மட்டும் தான் இருந்து வருகிறது. அதனால் எப்படா இந்த சீசன் முடியும் என்பது பலருடைய எதிர்பார்ப்பு என்று கமெண்ட்களில் பலர் கதறி வருவதை பார்க்க முடிகிறது.
இந்த நிகழ்ச்சி முடிந்தால் இதற்கு பதிலாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி வரும் அது கூட நன்றாக இருக்கும் என்றும் பலர் வெளிப்படையாகவே இந்த நிகழ்ச்சிக்கான ப்ரோமோக்களில் கமெண்ட் தெரிவித்து வருவதை பார்க்க முடிகிறது. இப்படியான நிலையில் கடந்த வாரத்தில் கமல்ஹாசன் இந்த சீசனில் என்டர்டைன்மென்ட் என்பதே கிடையாது. வன்மம் மட்டும்தான் அதிகமாக இருக்கிறது.
எந்த டாஸ்க் கொடுத்தாலும் அதில் தங்களுடைய வன்மத்தை தான் எல்லோரும் காட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்று எல்லோரையும் கதறவிட்டிருந்தார். இந்த நிலையில் இந்த வாரத்தில் அனைவருக்கும் ஞான உதயம் வந்துவிட்டது போல.. சிலருடைய நடவடிக்கைகளில் மாற்றம் தெரிகிறது.. கடந்த வாரம் வரைக்கும் இரண்டு அணியாக போட்டியாளர்கள் பிரிந்து கொண்டு ஒருவரை ஒருவர் வார்த்தைகளால் தாக்கி கொண்டிருந்தனர்.

ஆனால் இந்த வாரத்தில் அதிகமான சண்டை சச்சரவுகள் இல்லை. அதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. இந்த வாரத்தில் டான்ஸ் மராத்தான் டாஸ்க் தொடங்கப்பட்டது. அதுபோல நிமிட டாஸ்க்கும் தொடங்கியிருந்தது. அடுத்தடுத்து டாஸ்க் வந்து இருந்ததால் இந்த வாரத்தில் சண்டைகளுக்கு கொஞ்சம் பிரேக் விட்டிருக்கும் போட்டியாளர்களுக்கு இன்று காலை வெளியான முதல் ப்ரோமோவில் சூப்பர் சர்ப்ரைஸ் கிடைத்திருக்கிறது.
அதாவது இன்று பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி 75 ஆவது நாளில் அடி எடுத்து வைத்திருக்கும் நிலையில் அதை ஸ்வீட்டோடு பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு தெரிவித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சி தங்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை பற்றி எல்லா போட்டியாளர்களும் மாறி மாறி பேசிக் கொண்டிருக்கின்றனர்.

இதுவரைக்கும் ஒருவர் பேசினாலே அங்கு வரண்டு இழுத்து பிரச்சனை செய்யும் போட்டியாளர்கள் கூட இன்று கலகலப்பாக மாறி இருந்தது உள்ளே இருக்கும் போட்டியாளர்களுக்கு அதிசயமாக இருந்திருக்கும் போல. அதனால்தான் இன்று வெளியான முதல் ப்ரோமோவில் மணி இன்று எல்லோருடைய முகத்திலும் சந்தோஷம் இருக்கிறது.
இதை அப்படியே தக்க வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார். இந்த கலகலப்பான ப்ரோமோ ரசிகர்களின் மத்தியில் வைரல் ஆகி வருகிறது. இது போலவே எல்லோரும் ஜாலியாக இருக்க வேண்டும் என்பதும் பலருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது. என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications