பிக் பாஸ் 7: விஷ்ணுவிடம் தங்கை சொன்ன வார்த்தை.. பயந்த பூர்ணிமா.. உடைந்த கூட்டணி.. மாயா செயலை பாருங்க
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 டிசம்பர் 20ஆம் தேதிக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் இரண்டாவது நாளாக ஃப்ரீஸ் டாஸ்க் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் அதில் விஷ்ணுவின் குடும்பத்தினர் வந்திருக்கின்றனர்.
அப்போது விஷ்ணுவிடம் அவருடைய தங்கை கொடுத்த அட்வைஸை கேட்டு பூர்ணிமா எதிர்பாராத செயலை செய்கிறார். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

அந்த வகையில் அனைவரும் எதிர்பார்த்து இருந்தபடியே பிக் பாஸ் போட்டியாளர்கள் வீட்டில் இருந்து உறவினர்கள் இந்த வாரம் முழுக்க வருவாங்க என்று பிக் பாஸ் அறிவித்திருக்கிறார். அந்த வகையில் நேற்று பூர்ணிமா, அர்ச்சனா, விக்ரம், விஜய் வீட்டிலிருந்து உறவினர்கள் வந்து இருந்தாங்க.
அதுபோல இன்று வெளியான முதல் ப்ரோமோவில் நிக்சனின் அப்பா வந்திருந்தார். அவர் நிக்சன் வெளியே தங்கள் வீட்டில் என்ன மாதிரி நடந்து கொள்கிறார் என்பது பற்றியும் பிக் பாஸ் வீட்டிற்குள் அவருடைய மாற்றம் குறித்தும் வெளிப்படையாக பேசுகின்றார். அதைத் தொடர்ந்து தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் விஷ்ணுவின் வீட்டில் இருந்து உறவினர்கள் வந்திருக்கிறார்கள்.
அதிலும் விஷ்ணுவின் தங்கை மற்றும் அம்மா வந்திருக்கும் நிலையில் விஷ்ணுவிடம் அவர்கள் மாயா பூர்ணிமா பிரண்ட்ஷிப் நல்லா இருக்கு. அதுக்குள்ள நீ போக வேண்டாம். யாருக்கும் அதிகமாக முக்கியத்துவம் கொடுக்காத, அது வேண்டாம் என்று அறிவுரை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அந்த நேரத்தில் இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது மாயா பூர்ணிமா அவர்களோடு பேச ஜாலியாக வருகின்றனர்.
அந்த நேரத்தில் பூர்ணிமா அவர்களிடம் நான் விஷ்ணுவோட அதிகமா பேசுறது இல்லை என்று சொல்ல, அதற்கு விஷ்ணுவின் தங்கை அமைதியாக பார்க்கிறார். அதை பார்த்து பதறி போன பூர்ணிமா இவங்க பாக்குறத பார்த்தா என்ன அடிச்சிடுவாங்க போல என்று பதறுகிறார். தற்போது இந்த ப்ரோமோ வெளியில் இருக்கும் நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த உறவினர்கள் எல்லோருமே விசித்ராவிடம் பாசமாக நடந்து கொள்கிறார்கள்.
இதைப் பார்த்து விசித்ரா மட்டுமல்ல பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்களும் அதிர்ச்சி அடைகின்றனர். அதனால் விசித்திராவிற்கு தான் வெளியே அதிகமான வரவேற்பு இருக்கிறது என்று பேசிக் கொண்டிருக்கின்றனர். அதுபோல நேற்று வந்த உறவினர்கள் அனைவரும் சேர்ந்து விசித்திராவை பாராட்டி கப்பு கொடுத்திருந்த நிலையில் விசித்திரா இந்த சீசனில் டைட்டில் வின்னர் என்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது என்று தெரிகிறது. ஆனாலும் என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications