பிக் பாஸ் 7: ரவீனாவை அடிக்க பாய்ந்த உறவினர்.. மணிக்கு கொடுத்த வார்னிங்.. பரபரப்பான சம்பவம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் டிசம்பர் 21ஆம் தேதிக்கான முதல் ப்ரோமோ வெளியாகியிருக்கிறது.

இந்த வாரம் ஃப்ரீஸ் டாஸ்க் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் அதில் ரவீனாவின் உறவினர் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்திருக்கின்றனர்.

Bigg Boss Tamil season 7 December 21th Promo 1 A cousin who rushed to beat Raveena

தர்ஷினி உறவினர்கள் ரவீனா மற்றும் மணி நடவடிக்கையை குறித்து திட்டி இருக்கின்றனர். என்ன நடந்தது என்பதை விரிவாக பார்ப்போம்.

அந்த வகையில் பிக்பாஸ் ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருந்த உறவினர்களின் வருகை நிகழ்ச்சி பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் கடந்த இரண்டு நாட்களாக நடந்து வருகிறது. அதில் முதல் நாள் அர்ச்சனா, பூர்ணிமா, விக்ரம், விஜய்யின் குடும்பத்தினர் வந்திருந்த நிலையில் நேற்று நிக்சன், தினேஷ், மணியின் குடும்பத்தினர் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்திருந்தனர்.

அதில் பலர் சுவாரசியமாக பேசிக் கொண்டிருந்தனர். இந்த வீடியோக்களும் இணையத்தில் வைரல் ஆகி இருந்தது. அதிலும் நேற்று நிக்சனின் அப்பா தன்னுடைய மகன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு திருந்தி இருக்கிறான் என்பதை சந்தோஷமாக பேசி இருந்த விதம் மற்றும் ஒரு தந்தையின் இயலாமை அவருடைய வார்த்தைகளில் அதிகமாக வெளிப்பட்டதை பார்க்க முடிந்தது.

இத்தனை நாட்களாக தன்னுடைய மகனை தான் திருத்துவதற்காக எத்தனையோ முயற்சி செய்திருந்தாலும் அதில் எல்லாம் திருந்தாத தன்னுடைய மகன் பிக் பாஸ் வீட்டிற்குள் பலரிடம் வாங்கி கட்டிக் கொள்ளும் நிலையைப் பார்த்ததும் தனக்கு கஷ்டமாக இருந்தாலும் சந்தோஷமாக இருந்தது என்று நிக்சனின் அப்பா பேசியது 7ஜி ரெயின்போ காலனி திரைப்படத்தில் கதாநாயகனின் அப்பாவை போன்று ரசிகர்களின் மனதில் இப்போது இடம் பிடித்து விட்டார்.

பிக் பாஸ் வீட்டிற்குள் நிக்சன் செய்து வந்த தவறுகளில் தாக்கம் கூட நேற்று அவருடைய அப்பா பேசிய வார்த்தைகளுக்கு பிறகு ரசிகர்களின் மத்தியில் குறைய தொடங்கி இருக்கிறது. அதைத் தொடர்ந்து இன்று வெளியான முதல் ப்ரோமோவில் ரவீணாவின் குடும்பத்தினர் வந்திருக்கின்றனர்.

எப்படியும் ரவீனாவின் அம்மா தான் வருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில் இப்போது வந்திருப்பது அவருடைய சித்தி போல இருக்கிறது. அவர் ரவீனாவிடம் கோபமாக பேசிக் கொண்டிருக்கிறார். நான் உன்னை அரைஞ்சுருப்பேன்... ஏன்னா உன் மேல எனக்கு அவ்வளவு கோபமா இருக்கு... உனக்கு அம்மா எல்லாத்துக்கும் ஒத்துக்கிட்டாங்களா?

நீ பிக் பாஸ் வீட்டுக்குள்ள எல்லார்கிட்டயும் அம்மா எல்லாத்துக்கும் ஒத்துக்கிட்டாங்கன்னு சொல்லிக்கிட்டு இருக்கியே? நீ அவருக்காக இங்க விளையாட வரல.. இது நமக்கு தேவை கிடையாது என்று சொல்ல இவர்கள் பேசுவதை மணியும் விஷ்ணுவும் பார்த்துக் கொண்டே பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது மணி ஏதோ திட்டுறாங்க போல என்று சொல்கிறார்.

அதைத்தொடர்ந்து ரவீனாவிடம் எல்லாம் ஓகேவா என்று மணி சிக்னல் காமிக்க அதற்கு ரவீனா கழுத்தை அறுக்கிறார்கள் என்று சைகை காட்டுகிறார். பிறகு ரவீனாவின் உறவினர் மணி, ரவீனாவை அழைத்து வைத்து உங்க அம்மாவை கன்வின்ஸ் பண்ணுன்னு சொல்றியே அது எப்படி? நீங்க இங்க வந்து தனியா உக்காருவதற்கு தான் ஷோக்கு வந்தீங்களா? இனி தனியா கூப்பிட்டு வச்சு பேசுறதை தயவுசெய்து பண்ணாதீங்க என்று மணியிடம் ரவீனாவின் உறவினர் கறாராக பேசியிருக்கிறார்.

தற்போது இந்த ப்ரோமோ வைரல் ஆகி வருகிறது. ஏற்கனவே இதுபோன்று ஷிவானி அம்மா பிக் பாஸ் வீட்டிற்குள் கடுமையாக நடந்து கொண்டிருந்தார். அது அந்த நேரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. அதைத்தொடர்ந்து இப்போது ரவீனாவின் உறவினர் பேசியது சரி என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அதே நேரத்தில் உங்களுடைய கருத்து என்ன என்பதை தட்டி விடுங்க.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+