பிக் பாஸ் 7: விசித்திராவிற்கு அதிர்ச்சி கொடுத்து வெளியே அனுப்பிய பிக் பாஸ்.. உள்ளே நடந்த எதிர்பாராத வேலை
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் டிசம்பர் 22 ஆம் தேதிக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் ரசிகர்கள் எதிர்பார்த்தபடி விசித்ராவின் குடும்பத்தினர் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்திருக்கின்றனர்.
ஆனால் விசித்திராவிற்கு பிக் பாஸ் எதிர்பாராத அதிர்ச்சியை கொடுத்திருக்கிறார். என்ன நடந்தது என்பதை விரிவாக பார்ப்போம்.

அந்த வகையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் ரசிகர்கள் எதிர்பார்த்தபடி ஃப்ரீஸ் டாஸ்க் தொடங்கப்பட்டிருக்கிறது. இதில் போட்டியாளர்களின் உறவினர்கள் வந்து கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே பிக் பாஸ் இந்த வாரம் முழுக்க உறவினர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் வருவார்கள். அதுவும் ஒவ்வொரு போட்டியாளரின் உறவினர் ஒவ்வொருவராக வருவர் அல்லது மொத்தமாக ஒரே நாளில் வருவார்கள் என்று கூறி இருந்தனர்.
இதில மூன்று நாட்களாக இந்த டாஸ்க் நடைபெற்று வரும் நிலையில் கிட்ட தட்ட எல்லா போட்டியாளர்களின் உறவினர்களும் வந்துவிட்டனர். மீதம் இருந்தது விசித்ரா மட்டும்தான். விசித்ரா வீட்டில் இருந்து யாரும் வரவில்லை. இதனால் ரசிகர்களின் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்தது. விசித்ராவின் வீட்டில் இருந்து அவருடைய கணவர் மற்றும் குழந்தைகள் எப்போது வருவார்கள் என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்து இருந்தனர்.

தற்போது அது நிறைவேறி இருக்கிறது. அதாவது தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் அந்த காட்சிகள் இடம் பெற்று இருக்கிறது. இன்று வீட்டிற்குள் எல்லோரும் ஃபிரீஸில் இருக்கும்போது அங்கே உனக்காக பொறந்தேனே எனதழகா என பாடல் ஒலிக்க, சேட்டை பிடித்த பிக் பாஸ் விசித்திராவை மட்டும் ஃப்ரீஸில் இருக்க வைத்து எல்லோரையும் ரிலீவ் செய்து விடுகிறார்.
அப்போது விசித்திராவிற்கு தன்னுடைய கணவர் தான் உள்ளே வருகிறார் என்பது தெரிந்து விடுகிறது. அதுபோல விசித்ராவின் கணவர் பிக் பாஸ் மெயின் டோர் வழியாக உள்ளே வர அவரை எல்லா போட்டியாளர்களும் ஓடி சென்று வரவேற்று கூட்டிக்கொண்டு வருகின்றனர். கையில் பூங்கோத்தோடு வந்த விசித்ராவின் கணவர் அதை விசித்திராவிடம் கொடுத்து தன்னுடைய காதலை வெளிப்படுத்துகிறார்.

விசித்திரா அவருடைய கணவரை கட்டி அணைத்து தன்னுடைய மகன் எங்கே என்று கேட்க அவர்களுக்கு எக்ஸாம் இருக்கு அதனால்தான் வரல என்று அவருடைய கணவர் சொன்னதும் விசித்திரா கோவப்பட்டு குழந்தை போல அழுகிறார். அப்போது பிக் பாஸ் கொஞ்சம் கூட இரக்கம் இல்லாதவர் போல, விசித்திரா நீங்க கன்ஃபெஷன் ரூமுக்கு வாங்க என்று கூப்பிட விசித்திராவும் கோபப்பட்டு கொண்டே சிணுங்கி கொண்டு அங்கு போகிறார்.

அங்கு கையில் ஒரு டாஸ்க் லெட்டரை எடுத்தபடி வந்து ஹாலில் எல்லாரும் முன்பும் படிக்க போகும் போது அங்கு இருந்த காட்சியை பார்த்து விசித்திரா இன்ப அதிர்ச்சி அடைந்திருக்கிறார். ஆமாம் விசித்திரா கன்ஃபெஷன் ரூமுக்கு போன கேப்பில் அவருடைய மூன்று மகன்களும் வீட்டிற்குள் வந்திருக்கின்றனர். இந்த நெகிழ்ச்சியான காட்சி இப்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் இடம் பிடித்திருக்கிறது. இப்ப வரைக்கும் இந்த காட்சிகள் லைவில் இன்னும் ஒளிபரப்பாகவில்லை. இதை பார்ப்பதற்காக ரசிகர்கள் பலர் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications