பிக் பாஸ்க்குள்ள நடந்தது நாட்டுக்கே பாடம்.. புது பிரச்சனையை கிளப்பிய கமல்ஹாசன்.. அடடே இதுதான் காரணமா?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் டிசம்பர் 23ஆம் தேதிக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
இன்று சனிக்கிழமை என்பதால் கமல்ஹாசன் வழக்கம்போல முதல் ப்ரோமோவில் அதிரடியாக என்ட்ரி கொடுத்து இருக்கிறார்.
அதோடு இந்த வாரம் முழுக்க பிக் பாஸ் வீட்டிற்குள் அன்பு ஆறாக ஓடி இருந்த நிலையில் கமல்ஹாசன் அதை வைத்து இன்று ப்ரோமோவில் செம்மையாக பேசி இருக்கிறார். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

அந்த வகையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து தினமும் சண்டை சச்சரவுகள் தான் அளவுக்கு அதிகமாக இருக்கிறது. ஒரு சில நேரங்களில் சின்ன பிரச்சினையாக இருந்தாலும் அதை வார இறுதி நாட்களில் கமல்ஹாசன் பஞ்சாயத்து செய்து பெரிய பிரச்சினையாக மாற்றியதும் உண்டு.
இதுவரைக்கும் இல்லாத வகையில் இந்த சீசனில் தான் கமல்ஹாசனுக்கு ரசிகர்களின் மத்தியில் அதிகமான நெகட்டிவ் இமேஜ் உருவாகிக் கொண்டிருக்கிறது. இதுவரைக்கும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் சனி மற்றும் ஞாயிறு எபிசோடுகளை பார்ப்பதற்காகவே பலபேர் தவம் இருந்ததும் உண்டு. ஆனால் இப்போது கமல்ஹாசன் என்ன பேசுவார் அதை வைத்து என்ன மாதிரி ட்ரோல் செய்யலாம் என்று பலர் எதிர்பார்த்து இருக்கின்றனர்.
காரணம் இந்த சீசனில் ஆரம்பத்தில் இருந்து மாயா கூட்டணிக்கு கமல்ஹாசன் சப்போர்ட் செய்து வருவது ரசிகர்களின் மத்தியில் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இதுவரைக்கும் எப்படியோ ஆனால் இந்த வாரம் முழுக்க ஃப்ரீஸ் டாஸ்க் நடைபெற்று பிக் பாஸ் வீட்டிற்குள் சென்டிமென்ட் காட்சிகள் ஆறாக ஓடிக் கொண்டிருந்தது அனைவருக்கும் தெரிந்ததுதான்.

இதனால் இந்த வாரம் கமல்ஹாசன் எதை வைத்து என்ன பேச போகிறார் என்று எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் இருக்கிறது. எது நடந்தாலும் சரி, நடக்கவில்லை என்றாலும் சரி என்னால் கண்டன்ட் உருவாக்கி கலக்கலாக பேச முடியும் என்பதை இன்று வெளியான முதல் ப்ரோமோவில் கமல்ஹாசன் நிரூபித்து இருக்கிறார்.
அதாவது இன்று வெளியான ப்ரோமோவில் அன்பென்றும் கொட்டுமுரசே என்று பாரதி சொன்னார். அந்த அன்பு மிகுதியாக கொட்டப்பட்டு வழிந்து ஓடியதால் சச்சரவு கொஞ்சம் குறைந்தது. இது பிக் பாஸ்க்கு மட்டுமல்ல நாட்டுக்கும் பாடமாக இருக்கும். அன்பு அதிகரித்தால் சச்சரவு குறையும்... இங்கே வந்த உறவினர்கள் அன்போடு சேர்ந்து அறிவுரைகளையும் வழங்கிட்டு போயிருக்காங்க.
அதனால் ஏதாவது மாற்றம் வருகிறதா என்பது இன்று இரவு பார்ப்போம் என்று கூறி இருக்கிறார். அதற்கு அதிகமான ரசிகர்கள் இந்த வாரத்தில் நடைபெற்ற பல நிகழ்வுகளை கமெண்டுகளில் கொட்டி வருகின்றனர். அதிலும் மணியை ரவீனாவின் ஆன்ட்டி திட்டியது ரொம்பவே தவறு என்பது பலருடைய கருத்தாக இருக்கிறது. ஆனாலும் மணிக்கு ஆறுதலாக அவருடைய அண்ணன் மகள் நடந்து கொண்ட விதமும் இந்த சீசனில் பெரிய அளவில் ஹைலைட் என்றும் கூறி வருகின்றனர்.

அதுபோல நேற்று விசித்ராவின் குடும்பத்தினர் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தது இதுவரைக்கும் விசித்ராவின் மீது இருந்த கோபத்தை எல்லாம் குறைய வைத்து விட்டது என்றும் பலர் கருத்து கூறியிருக்கிறார்கள். சரி எது எப்படியோ இன்று இரவு கமல்ஹாசன் என்ன பஞ்சாயத்தை செய்யப் போகிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications