நிக்சன், விஜய் வர்மாவின் ஏமாற்று வேலையை உடைத்த கமல்ஹாசன்.. அம்பலமான உண்மை.. ஆனால் இது அதிசயம்
சென்னை: விஜய் டிவில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் டிசம்பர் 30ஆம் தேதிக்கான 4வது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் டாஸ்க்கில் நிக்சன் செய்த ஏமாற்று வேலையை குறித்து கமல்ஹாசன் கேள்வி கேட்டு இருக்கிறார்.
அதே நேரத்தில் அர்ச்சனா சந்தேகப்பட்டது குறித்து இன்று குறும்படத்தோடு கமல்ஹாசன் நிரூபிக்க போகிறார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் குறும்படத்திற்கு அதிகமான வரவேற்பு ஒவ்வொரு சீசனிலும் இருக்கிறது. ஏற்கனவே இந்த சீசனில் ஒரு சில குறும்படங்கள் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் இந்த வாரம் இந்த சீசனில் குறும்படம் வெளியாக்குமா என்பது பலருடைய கேள்வியாக இருந்தது.
காரணம் டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கில் நடைபெற்ற இரண்டாவது முயல் டாக்ஸ்கில் நிக்சன் மற்றும் விஜய் வர்மா இருவரும் ஏமாற்று வேலை செய்திருந்தனர் என்று ஆதாரத்தோடு ரசிகர்கள் வெளியிட்டு இருந்தனர். 24 மணி நேர காட்சிகளில் நிக்சன் அந்த டாஸ்க்கில் கொடுக்கப்பட்ட கார்டில் மடக்கி வைத்தும், பிறகு அதில் சுரண்டி வைத்தும் அடையாளப்படுத்தி இருந்தார்.
அதை தெரிந்து கொண்டே விஜய் வர்மா நிக்சனுக்கு அந்த கார்டை ஒவ்வொரு முறையும் கிடைக்கும்படி கைவிரலை அதில் வைத்து காட்டி இருந்தார். இது அந்த நேரத்தில் அதிகமாக விமர்சிக்கப்பட்டது. அதிலும் எவிக்ஷன் என்ற கார்ட் தன்னிடம் வந்தால் தனக்கு எதிராக இருக்கும் கேங்கை ஒவ்வொருத்தராக வெளியே தூக்கி அனுப்பி விடுவேன் என்று பிளான் போட்டு நிக்சன் விளையாடி இருந்தார்.
அதுபோல அவருக்கு இரண்டு முறை எவிக்சன் என்ற கார்டு வந்திருந்தது. இந்த நிலையில் அந்த கார்டில் வைக்கப்பட்டிருந்த நெயில் பாலிஷ் குறித்து அர்ச்சனா பிக் பாஸ் இடம் புகார் செய்திருந்தார். இந்த நிலையில் இன்று வெளியான நான்காவது ப்ரோமோவில் கமல்ஹாசன் இது குறித்து விசாரித்து இருக்கிறார்.
அதில் அர்ச்சனா கமல்ஹாசனிடம் அந்த கார்டில் அடையாளம் வச்சுட்டாங்க சார் என்று சொல்ல, அதற்கு கமல்ஹாசன் ஒருவேளை அது அடையாளமாக வச்சிருந்தாங்க என்றால் அது யாராக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீங்க பிக் பாஸ்? என்று கேள்வி கேட்கிறார். அதற்கு அர்ச்சனா ஓ அப்போ பன்னிருக்காங்களா? என்று கேட்க அதற்கு இல்லை நான் கேட்கிறேன் என்று கமல்ஹாசன் சொல்லி,
உங்களுடைய சந்தேகத்தை தான் நான் பிக் பாஸ் வரைக்கும் கொண்டு போறேன் என்று சொல்கிறார். அப்போது நிக்சன் தலையை குனிந்த படி இருக்கிறார். பிறகு கமல்ஹாசன் நியாயப்படி இந்த டாஸ்க் நடந்தது என்று நம்புறீங்களா விஜய் வர்மா என்று கமல்ஹாசன் கேட்கிறார். அதற்கு விஜய் வருமா பதில் எதுவும் சொல்லாமல் நிற்கிறார்.
பிறகு நிக்சன் நீங்க கார்டை எதுவும் மடிச்சு கிடிச்சு பண்ணுனீங்களா? என்று கேள்வி கேட்டுவிட்டு விஜய் வர்மாவிடம் நீங்க ஜெயித்ததற்கு நான் தான் காரணம் என்று ஒரு இடத்தில் நீங்க சொன்னீங்களே அது எதற்கு.... பார்க்கிறவங்களுக்கு பல சந்தேகம் இருக்கு, அதற்கு பதில் சொல்லுங்கள் என்று கேள்வி கேட்கிறார்.
இந்த ப்ரோமோ ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது. காரணம் ஏற்கனவே பல ப்ரோமோகளில் கமல்ஹாசன் இப்படித்தான் பில்டப் கொடுத்து பேசுவார். கடைசியில் நிக்சனுக்கு ஜால்ரா போட்டு விடுவார் அதுபோல இன்றும் நடந்து விடக்கூடாது என்றும் பலர் கூறி வருகிறார்கள். காரணம் இதில் கம்ப்ளைன்ட் சொல்லிய அர்ச்சனாவை குற்றம் சாட்டுவது போலவே கமல்ஹாசன் பேசிக் கொண்டிருக்கிறார்.
இதனால் அர்ச்சனாவை நீங்க எப்படி பிக் பாஸிடம் கம்ப்ளைன்ட் செய்யலாம் என்று கேள்வி கேட்டு எச்சரிக்க போகிறாரா? அல்லது தப்பு செஞ்ச நிக்சனுக்கு எச்சரிக்கை கொடுக்கப் போகிறாரா? என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருக்கும் நிலையில் என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications