பிக் பாஸ் 7: கமல் கேட்ட அந்த கேள்வி.. முகம் சுளித்த விசித்திரா.. ஆப்பு வைத்த ரசிகர்கள்.. எதிர்பாராத ட்விஸ்ட்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் டிசம்பர் 30ம் தேதிக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் இந்த வாரம் முழுக்க போட்டியாளர்கள் இரண்டு அணி ஆக சேர்ந்து விளையாடியதை வைத்து கமல்ஹாசன் கேள்வி கேட்டிருக்கிறார்.
அதற்கு விஷ்ணு விளக்கம் கொடுக்க அதைக் கேட்டு விசித்திரா காண்டாகி இருக்கிறார். அப்போது அங்கிருக்கும் ரசிகர்கள் எதிர்பாராத செயலை செய்திருக்கின்றனர். என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

அந்த வகையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி 90 நாட்களை கடந்திருக்கும் நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் முடிவுக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் இந்த சீசனில் டைட்டில் வின்னர் யாராக இருக்கும் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருக்கிறது. ஆனால் யாரையும் குறிப்பிட்டு இவர்தான் இந்த சீசனின் டைட்டில் வின்னர் என்று யூகிக்க முடியாத வகையில் தான் இருக்கிறது.
தற்போது வரைக்கும் உள்ளே 10 போட்டியாளர்கள் இருக்கும் நிலையில் இந்த வாரத்தில் ரவீனா வெளியேறப் போகிறார் என்று தகவல்களும் பரவி வருகிறது. ஏற்கனவே வாக்குகளின் அடிப்படையில் நிக்சன் மற்றும் மாயா மட்டுமே கடைசி இடத்தில் இருந்த நிலையில் அவர்களின் இருவர்தான் வெளியேறுவார்கள் என்று ரசிகர்கள் நம்பி இருந்த நிலையில் கடைசியில் பிக் பாஸ் அதிர்ச்சி கொடுத்து ரவீனாவை வெளியேற்றி இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று சனிக்கிழமை எபிசோடு வெளியாகி இருக்கிறது. அதில் கமல்ஹாசன் இந்த வாரம் நடைபெற்ற டாஸ்க்குகளில் நடந்த கேங் குறித்து விசாரிக்கிறார். அதாவது நீங்க எல்லாம் டாஸ்க்களில் குரூப் குரூப்பாக விளையாடினீங்க என்று கேட்க அதற்கு விஷ்ணு மாயா பூர்ணிமா இவங்களுடைய நோக்கம் என்னன்னு எனக்கு தெரியும்...
அதுபோல தினேஷ் ப்ரோனா விசித்ரா அம்மாக்கு ரொம்ப பிடிக்கும். அவங்க தினேஷ் உடைய முயலை சாப்பிட ரொம்ப ஆசை படுவாங்க என்று சொல்ல அதற்கு கமல்ஹாசன் விசித்திரா அந்த டீம் தானே? ஆனால் நீங்க அவங்க கோட்டையை மட்டும் ஏன் தொடவே இல்ல என்று கேட்க அதற்கு அந்தக் கோட்டை தானாவே சரிஞ்சிடும் சார், நாம எதுவும் பண்ணத் தேவையில்லை என்று விஷ்ணு சொல்ல அதற்கு விசித்திரா முகத்தை அப்படியும் இப்படியுமாக காட்டி வெளிச்சம் காட்டுகிறார்.
அதற்கு கமல்ஹாசன் நாங்க எல்லாம் இவங்க தனித்தனி ஆளுங்கன்னு நெனச்சுக்கிட்டு இருக்கோம். ஆனா இங்கு டீம் ஏ, டீம் பி என்று சொல்ல அங்கிருந்த மக்கள் கைதட்டி ஆரவாரம் செய்கின்றனர். அதுவும் விசித்ராவின் எக்ஸ்பிரஷனை பார்க்கும்போது அங்கு இருக்கும் பார்வையாளர்கள் கைதட்டிய விதத்தை பார்த்து விசித்திரா மேலும் காண்டாகி இருக்கிறார். இதனால் இன்று இரவு கமல்ஹாசன் யாருக்கு பஞ்சாயத்து வைக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.
ஏற்கனவே நிக்சன் டாஸ்க்கில் ஏமாற்றியதற்கு கமல்ஹாசன் குறும்படம் போடுவாரா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில் தற்போது வெளியான மூன்று ப்ரோமோக்களிலும் அதற்கான அறிகுறிகள் தென்படவில்லை என்பதால் இந்த வாரமும் போங்காட்டம் போட போகிறாரா கமல்ஹாசன் என்று பலர் கேள்வி எழுப்புகிறார்கள்.

அதே நேரத்தில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில் மறைந்த நடிகர் விஜயகாந்த் பற்றி உருக்கமாக கமல்ஹாசன் இன்று அவரைப் பற்றிய நினைவுகளை பகிரலாம் என்றும் கூறியிருப்பதால் அதற்காகவாவது இன்றைய எபிசோட்டை பார்க்கலாம் ஆனால் கமல்ஹாசன் வழக்கம்போல இந்த முறையும் விஷ்ணு, தினேஷ், மணி குரூப்பை தான் வச்சு செய்யப் போகிறார் என்று இப்போது வெளியான ப்ரோமோகளில் தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications