பிக் பாஸ் 7: தனியாக நாமினேஷனில் சிக்கிய நிக்சன்.. பிக் பாஸ் வைத்த செக்.. இதுவரைக்கும் இப்படி ஆனதில்லை
Subscribe to Oneindia Tamil
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் டிசம்பர் நான்காம் தேதிக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் இதுவரைக்கும் நடக்காத நிகழ்வாக இந்த வாரத்தில் எலிமினேஷனுக்காக நிக்சன் மட்டுமே நாமினேஷன் ஆகி இருக்கிறார்.

இந்த வாரத்தில் ஸ்மால் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் நிக்சனை டார்க்கெட் செய்து எல்லா போட்டியாளர்களும் நாமினேஷன் செய்திருப்பது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் இதற்கு முந்தைய சீசன்கள் போல இல்லை என்று சொல்லும் அளவிற்கு தான் பல அதிரடியான நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கிறது. தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரைக்கும் ஐந்து வைல்ட் கார்டு போட்டியாளர்கள் ஒரே நேரத்தில் அறிமுகமானது கிடையாது. ஆனால் இந்த சீசனில் அறிமுகமாகி இருத்தனர்.
அதுபோல ஏற்கனவே பிக் பாஸ் வீட்டை விட்டு எலிமினேஷன் ஆகி வெளியே போன இரண்டு போட்டியாளர்கள் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்திருக்கின்றனர்.அதே நேரத்தில் இந்த சீசனில் சண்டை சச்சரவுகள் மட்டும் தான் முக்கிய நிகழ்வாக இருக்கிறது. சண்டை போட்டு கண்டன்ட் கொடுத்தால் தான் ரசிகர்கள் ரசிப்பார்கள் என்று போட்டியாளர்கள் நினைத்துக் கொண்டிருப்பதாலேயே இவர்கள் செய்யும் பல செயல்கள் அதிகமாக விமர்சிக்கப்படும் வருகிறது.
அதுபோலத்தான் பிரதீப்க்கு சக போட்டியாளர்கள் ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்டதும் இணையத்தில் இப்போதும் பலராலும் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இதுவரைக்கும் எந்த சீசனிலும் நடக்காத நிகழ்வு என்று சொல்லும் வகையில் புதியதாக ஒரு சம்பவமும் நடந்திருக்கிறது.
அதாவது கடந்த வாரத்தில் வீட்டின் தலைவராக இருந்த நிக்சன் இந்த வாரத்தில் தனி ஆளாக எலிமினேஷனுக்கு நாமினேஷன் செய்யப்பட்டிருக்கிறார். எல்லா போட்டியளர்களும் நிக்சன் பெயரை சொல்ல அதனால் பிக் பாஸ் இந்த வாரத்தில் எலிமினேஷன் ஆனவர்களின் பெயர் பட்டியல் என்று வாசித்து அப்போது நிக்சன் மற்றும் நிக்சன் என்றே சொல்லி முடித்திருக்கிறார்.
இதனால் அனைவரும் குழப்பமும் அதிர்ச்சியும் அடைந்திருக்கின்றனர். அதே நேரத்தில் இந்த வாரத்தில் பிக் பாஸ் வீட்டிற்குள் மாயா, விசித்ரா, மணி, அர்ச்சனா, விஷ்ணு, தினேஷ், கூல் சுரேஷ் என ஆறு போட்டியாளர்களும் அனன்யா, விஜய், நிக்சன், ரவீனா, பூர்ணிமா, விக்ரம் என ஆறு போட்டியாளர்களும் ஸ்மால் பாஸ் வீட்டிற்குள் இருக்கின்றனர். இந்த நிலையில் இந்த வாரம் நிக்சன் வெளியேற்றப்படுவாரா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
More From
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications