பிக் பாஸ் 7: தொடங்கியது கல்லூரி டாஸ்க்.. கலக்கிய தினேஷ்.. மாயா திடீர் மாற்றம்.. பிக் பாஸ் வைத்த செக்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் டிசம்பர் 6ஆம் தேதிக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் ரசிகர்கள் எதிர்பார்த்த காலேஜ் டாஸ்க் தொடங்கப்பட்டிருக்கிறது.
அப்போது பல சுவாரசியமான நிகழ்வுகளும் நடைபெற்றிருக்கிறது. இதுவரைக்கும் வீராப்பாக இருந்த பல போட்டியாளர்கள் இன்றைய டாஸ்க்கில் கலகலப்பாக மாறி இருக்கின்றனர். அது பற்றி பார்க்கலாம்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு சில டாக்ஸ்குகள் ஒவ்வொரு சீசனிலும் தொடரும் சம்பிரதாயமாக இருந்து வருகிறது. அதில் ஒன்றுதான் கல்லூரி டாஸ்க். இது எல்லா சீசனிலும் நடைபெறும் டாஸ்காக இருந்தாலும் இந்த சீசனில் போட்டியாளர்கள் என்ன செய்ய காத்திருக்கிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருக்கத்தான் செய்கிறது.

இதற்கு முன்பு கல்லூரி டாஸ்க்கில் பல கலகலப்பான நிகழ்வுகள் நடக்கும். அதுவரைக்கும் அடித்துக்கொண்டு சண்டை போட்டுக் கொண்டிருந்த போட்டியாளர்கள் கூட இந்த டாஸ்க்கில் கலகலப்பாக என்டர்டைன்மென்ட் செய்திருக்கிறார்கள். அதுபோல இந்த சீசனில் எப்போது கல்லூரி டாஸ்க் வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
நேற்றைய பொம்மை டாஸ்க்கில் கூட போட்டியாளர்கள் தங்களுக்குள் இருக்கும் வன்மத்தையும் போட்டி பொறாமையையும் காட்டி இருந்தனர். ஆனால் இன்று தொடங்கி இருக்கும் கல்லூரி டாஸ்க்கில் என்ன மாதிரி நடக்கப்போகிறதோ என்று எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருக்கிறது. இதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் கல்லூரியின் முதல்வராக தினேஷ் மாறி இருக்கிறார்.
அவர் தன்னுடைய உருவத்தையும் உடல் மொழியையும் கூட கல்லூரி முதல்வர் கேரக்டருக்கு மாற்றி அவர் பேசிய விதம் பலரையும் பாராட்ட வைத்திருக்கிறது. அதே நேரத்தில் மாயா இதுவரைக்கும் குட்டி உடையில் அதிகமாக சுற்றிக் கொண்டிருக்கிறார் என்ற கம்ப்ளைன்ட் இருந்த நிலையில் இன்று அவர் ஒரு கணக்கு டீச்சராக மாறி இருக்கிறார். அதுபோல விசித்திரா, தினேஷ் மீது தனக்கு இருக்கும் கோபத்தை இன்றும் டாஸ்க்கில்ஸ்கில் பிரின்ஸ்பலை கலாய்த்து கொட்டி இருக்கிறார்.
பிக் பாஸ் யார் யார் என்ன கேரக்டரில் இருந்தால் புது பிரச்சனைகள் வருமோ அதற்கு தகுந்த மாதிரியே கேரக்டரை கொடுத்திருக்கிறார். அதிலும் சரவண விக்ரம் மற்றும் அனன்யா இருவரும் கல்லூரி காதலர்களாக மாறி இருக்கின்றனர். அதுபோல விஷ்ணு கெமிஸ்ட்ரி வாத்தியாராக பவ்யமாக மாறி இருப்பது பலரையும் வியக்க வைத்திருக்கிறது. ஆனாலும் இன்று இரவு என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications