Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிக் பாஸ் 7: சீ.. நீ எல்லாம் பொண்ணே இல்ல கருமம்.. தரக்குறைவாக திட்டிய நிக்சன்.. அர்ச்சனா செய்த அதிரடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் டிசம்பர் 7ஆம் தேதிக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

அதில் நிக்சன் மற்றும் அர்ச்சனாவிற்கு இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்று இருக்கிறது. ஏற்கனவே வினுஷா பற்றி நிக்சன் பேசியதை அர்ச்சனா சொல்லிக்காட்டி இருக்கிறார்.

அதனால் கோபம் அடைந்த நிக்சன் அர்ச்சனாவை, நீ எல்லாம் பொண்ணே இல்லடி நாயே என்று தரக்குறைவான வார்த்தைகளால் பேசியிருக்கிறார்.

Bigg Boss Tamil season 7 December 7th promo 1 and fans reaction

அந்த வகையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் இன்று பெரிய அளவில் சண்டை பூதாகரமாக வெடித்திருக்கிறது. ஏற்கனவே தரக்குறைவான வார்த்தைகள் இரட்டை அர்த்தமுள்ள வசனங்கள் பேசுகிறார் என்று தான் அதிரடியாக பிரதீப்க்கு ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்டு இருக்கிறார். ஆனால் இன்று நிக்சன் அதே தப்பை மீண்டும் செய்கிறார்.

ஏற்கனவே நிக்சன் வினுஷா தேவியை பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது உருவக்கேலி செய்திருந்தார். அதற்கு தான் மன்னிப்பு கேட்டு விட்டேன் என்று சொல்லி இருந்த நிக்சன் குறித்து வினுஷா தன்னிடம் நிக்சன் மன்னிப்பு கேட்கவே இல்லை. மன்னிப்பு கேட்டது டாஸ்கில் என்னை கிண்டல் செய்ததற்காக மட்டும்தான் ஆனால் என்னை பற்றி உருவ கேலி செய்ததற்காக என்னிடம் சொல்லி மன்னிப்பு கேட்கவில்லை என்று வெளியே பல இன்டர்வியூகளில் தெரிவித்திருக்கிறார்.

அதோடு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் விளக்கம் கொடுத்து இருக்கிறார். இந்த நிலையில் நேற்று டாஸ்கில் நாங்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் ஆரம்பத்தில் இருந்த 18 போட்டியாளர்கள் இருந்தபோது சந்தோஷமாக இருந்தோம். ஆனால் வைல்ட் கார்டு ஐந்து போட்டியாளர்கள் வந்த பிறகுதான் பிக் பாஸ் வீட்டிற்குள் சண்டை சச்சரவுகள் வந்துவிட்டது என்ற விதத்தில் நிக்சன் பேசி இருந்தார். இந்த நிலையில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில் அர்ச்சனா மற்றும் நிக்சனுக்கு இடையே பெரிய அளவில் பூகம்பம் வெடித்து இருக்கிறது.

அதாவது அர்ச்சனா பெட்டில் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கு நிக்சன் பேசிக் கொண்டிருக்கிறார். அதில் நீங்க பிக் பாஸ் வீட்டிற்கு தகுதியான ஆளு கிடையாது என்று சொல்கிறார் அதற்கு அப்படியா என்று அர்ச்சனா கைதட்டி சிரிக்கிறார். மேலும் ஒரு பொண்ண பத்தி தப்பு தப்பா பேசினாரு. அதை வெளியிலேயே அந்த வினுஷா மேட்டர் எனக்கு தெரியும் என்று சொல்ல, அதனால் கோபமான நிக்சன் திரும்பத் திரும்ப அதை சொல்லாத என்று சொல்ல அதற்கு அர்ச்சனா கத்தாத என்று சொல்கிறார்.

அதற்கு நிக்சன் அதை நீ சொல்லாத மூடு என்று சொல்ல, அர்ச்சனா போடா என்று சொல்ல.... அங்கு விக்ரம் நிக்சனை சமாதானம் செய்து அழைத்து செல்வதற்காக முயற்சி செய்கிறார். அப்போது அர்ச்சனாவை பார்த்து நிக்சன் நீ வாயை மூடு உன் பேச்சுக்கு நான் வந்தனா என்று கையை நீட்டி பேச அதற்கு அர்ச்சனா மரியாதையா பேசு என்று கையை நீட்டி பேசுகிறார்.

அதற்கு நிக்சன் என்ன பண்ணுவ சீ.... நீ எல்லாம் பொண்ணே இல்ல, கருமம் மூடு பிக் பாஸ் வீட்டை விட்டு ஓடிடு என்று பேசிக் கொண்டிருக்க நிக்சனை விஷ்ணு, விஜய் போன்றோர் அங்கிருந்து கூட்டிக்கொண்டு போகின்றனர். இப்படியாக கலவரமான பிக் பாஸ் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதே நேரத்தில் ஒரு சில நாட்களாக அர்ச்சனா நிக்சனை டார்கெட் செய்து பேசி வருகிறார் என்று ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

அதோடு ஆரம்பத்தில் இருந்து நிக்சன் தன்னுடைய குணத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காக அர்ச்சனா பல இடங்களில் நிக்சனுக்கு தனியாக அட்வைஸ் பண்ணினார். அதுவும் ஐசுவோடு நிக்சன் பேசி பழகுவதும் குறித்து வைல்ட் கார்டாக வீட்டிற்குள் வந்ததுமே அர்ச்சனா நிக்சனிடம் அட்வைஸ் கொடுத்திருந்தார்.

அதுபோல வெளியே வினுஷா விஷயம் எவ்வளவு பெரிய பிரச்சனையாக போயிருக்கிறது என்பதையும் அர்ச்சனா நிக்சனுக்கு தெரியப்படுத்தி இருந்தார். இந்த நிலையில் இன்று எதனால் இவர்கள் இருவருக்குள் இவ்வளவு பெரிய கருத்து மோதல் நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். அதே நேரத்தில் இந்த வாரம் இது பற்றி கமல்ஹாசன் என்ன சொல்ல போகிறார் என்பதை பார்ப்பதற்காகவும் ரசிகர்கள் ஆர்வத்தோடு இருக்கின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+