அர்ச்சனா பிக் பாஸ்க்கு பாதியில் வந்த காரணமே இதுதான்.. தினேஷ் சொன்ன தகவல்.. இத்தனை கதை இருக்கா?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் நடிகை அர்ச்சனா வைல்ட் கார்ட் என்ட்ரியாக கலந்து கொண்டது குறித்து நடிகர் தினேஷ் சில தகவல்களை பகிர்ந்து இருக்கிறார்.
அதோடு பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் மணி தன்னோடு ஆரம்பத்திலேயே அர்ச்சனாவுக்கு ப்ரோமோ வீடியோ எடுத்தாங்க என்று கூறியிருக்கிறார்.

இந்த நிலையில் ஆரம்பத்திலேயே நிகழ்ச்சிக்கு தயாராக இருந்த அர்ச்சனா பிறகு வைல்ட் கார்டு என்று உள்ளே நுழைந்தது குறித்து தினேஷ் விமர்சித்து பேசி இருக்கிறார். தற்போது இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி இப்போது தான் சூடு பிடிக்க தொடங்கி இருக்கிறது. இதுவரைக்கும் இந்த நிகழ்ச்சியில் மாயா மற்றும் பூர்ணிமாவின் கேங் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த நிலையில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக அர்ச்சனா தினேஷ் உட்பட 5 போட்டியாளர்கள் உள்ளே நுழைந்ததும் மாயா கேங்கிற்கு பெரிய அளவில் பயம் ஏற்பட தொடங்கியது.
அதனாலயே இவர்களுக்கு ரசிகர்களின் மத்தியில் நல்ல பெயர் வந்து விடக்கூடாது என்பதற்காக பயந்து வைல்ட் கார்டு போட்டியாளர்கள் எல்லாரையும் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். அதுதான் அவர்கள் செய்த பெரிய தவறு என்பது அவர்களுக்கு அப்போது தெரியவில்லை. அந்த வார தலைவராக இருந்த பூர்ணிமா தன்னுடைய முடிவால் தனக்கு இருந்த பெயரை நெகட்டிவ் ஆக மக்களின் மனதில் மாற்றிக் கொண்டார்.
அதைத்தொடர்ந்து அர்ச்சனா முதல் இரண்டு, மூன்று நாட்களாக உள்ளே அழுத வண்ணமாக இருந்தாலும் பிறகு மாயா கேங் அனைவரும் தன்னை டார்கெட் செய்தாலும் தனி ஆளாக நின்று ரகளை செய்து பலருடைய மனதை கவர்ந்து விட்டார். அதுபோலவே வைல்ட் கார்டு போட்டியாளராக வந்து தற்போது இரண்டு வாரமாக பிக் பாஸ் வீட்டிற்குள் தினேஷ் தலைவராகவும் மாறி இருக்கிறார்.
அவருக்கும் ரசிகர்களின் மத்தியில் அதிகமான வரவேற்பு இருக்கிறது. இந்த நிலையில் அவர் சமீபத்தில் பேசிய ஒரு வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது அந்த வீடியோவில் மணி, தினேஷ், ரவீனா என ஒரு சிலர் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது அர்ச்சனா பிக் பாஸ் வீட்டிற்கு முதல் நாளே வரவேண்டியவர் ஆனால் அப்படி வராமல் வைல்ட் கார்ட் மூலம் அனுப்பியது பிக் பாஸின் குருநாத தான் என்று தினேஷ் கூறியிருக்கிறார்.
அப்போது பக்கத்தில் இருந்த மணிச்சந்திராவும் ஆமாம் எனக்கும் அர்ச்சனாவுக்கும் தான் சூட்டிங் ஒன்று போல நடந்தது. அப்படி இருக்கும்போது அர்ச்சனாவை எங்களுடன் அனுப்பாமல் வைத்ததுதான் ஏனென்று அப்போது எங்களுக்கு புரியாமல் இருந்தது. ஆனால் இப்போது இவருக்கு பின் பல சூழ்ச்சிகள் நடந்து இருக்கிறது என்பது புரிகிறது என்று மனி கூறுகிறார்.
அத்துடன் இந்த நிகழ்ச்சியில் அர்ச்சனா ஆரம்பத்திலிருந்து உள்ளே வரும் வரை 24 மணி நேரமும் என்ன நடக்கிறது என்பதை ஒன்று விடாமல் பார்த்து பக்காவாக பிளான் பண்ணி வந்திருக்கிறார். அதற்கு ஏற்ற மாதிரி தான் அர்ச்சனா காய் நகர்த்தி ரசிகர்களின் மத்தியில் ஒரு நல்ல பிளேயராக இடத்தைப் பிடித்து விட்டார் என்று பிக் பாஸ் வீட்டிற்குள் பேச்சு போய்க் கொண்டிருக்கும் நிலையில் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிறது.
இந்த வீடியோவை பார்த்ததும் ரசிகர்கள் பலரும் தங்களுடைய அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் தினேஷ் அர்ச்சனா குறித்து விமர்சித்திருப்பது குறித்தும் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். அப்படி என்றால் தினேஷம் தான் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே நுழைந்தார் தான்?அவரும் தான் ஆரம்பத்தில் இருந்து இந்த சீசனில் கலந்து கொள்வார் என்று கூறப்பட்டது. அப்படி இருக்கையில் அவரும் இந்த நிகழ்ச்சியை பற்றி நன்றாக பார்த்து தெரிந்து விட்டு தான் இப்போது இப்படி விளையாடிக் கொண்டிருக்கிறார் என்றும் சிலர் கேள்வி எழுப்புகின்றனர். எப்படியோ இனி என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications