கிழக்கு வாசல் சீரியலில் தினேஷுக்கு பதிலாக மாற்றப்பட்ட புது நடிகர்.. ஆரம்பமான முதல் நாளே இப்படியா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கிழக்கு வாசல் சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து வந்த நடிகர் தினேஷ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருப்பதால் அவருக்கு பதிலாக இன்று புதியதாக நடிகர் சசி இந்தர் அறிமுகம் ஆகி இருக்கிறார்.
தினேஷ் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போகும்போது அவருடைய கேரக்டர் வெளிநாட்டிற்கு சுற்றுலா செல்வது போன்று கதையை கொண்டு போயிருந்தனர்.

அது நேரத்தில் அர்ஜுன் கேரக்டரில் நடித்து வந்த தினேஷ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடைசி வரைக்கும் இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டு நிலையில் தற்போது அவருக்கு பதிலாக சீரியலில் புது நடிகர் அறிமுகமாகி இருக்கிறார். அவர் யார் என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
விஜய் டிவியில் சமீபத்தில் ஒளிபரப்பான கிழக்கு வாசல் சீரியல் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் ராதிகா சரத்குமார் நிறுவனம் தயாரித்துக் கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் நடிகை ரேஷ்மா கதாநாயகியாக நடிக்க அவருடைய தந்தையாக எஸ்ஏ சந்திரசேகர் நடிக்கிறார்.
அதுபோல நடிகர் அருண், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜீவா கேரக்டரில் நடித்த வெங்கட் என பல முக்கிய நடிகர்கள் நடித்துக் கொண்டிருக்கிறார். அதோடு நடிகர் தினேஷ் இந்த சீரியலில் அர்ஜுன் என்ற கேரக்டரில் நடித்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் இவர் இப்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் இவருக்காக சீரியலில் கதை மாற்றப்பட்டு இருந்தது. அதாவது அர்ஜுன் மற்றும் கதாநாயகி ரேனு இருவருக்கும் திருமணம் மணமேடை வரைக்கும் வந்திருந்த நிலையில் கடைசியில் அர்ஜுன் மனசு மாறி எனக்கு ரேணு வேண்டாம் என்று சொல்லி இருப்பார். பிறகு ரேணு அழுது கொண்டிருப்பார் என்று நினைத்திருந்த நிலையில் தைரியமாக இருப்பதை பார்த்து கோபத்தில் அர்ஜுன் இருக்கும் நிலையில் தன்னுடைய மனதை மாற்றுவதற்காக தான் தன்னுடைய நண்பர்களோடு வெளிநாட்டிற்கு செல்கிறேன் என்று சொல்லிவிட்டு தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டிருந்தார்.

இந்த நிலையில் இவர் நிகழ்ச்சியில் விளையாடுவதை பார்த்து அவருக்காக சீரியலில் மாற்றம் வைத்துக் கொள்ளலாம் என்று சீரியல் தரப்பினர்கள் நினைத்துக் கொண்டிருந்தார்கள் போல. அதே நேரத்தில் இப்போதைய நிலவரப்படி தினேஷுக்கு அதிகமான வரவேற்பு இருப்பதால் அவர் நிகழ்ச்சியில் இன்னும் அதிக நாட்கள் தாக்குப்பிடிப்பார் என்று தெரிகிறது.
இதனாலையே அவருடைய கேரக்டரில் புதியதாக ஒரு நடிகரை சீரியலில் அறிமுகப்படுத்தி இருக்கின்றார். அந்த நடிகர் உடைய பெயர் சசிஇந்தர் தான். அவர் ஏற்கனவே விஜய் டிவியில் பல சீரியல்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியலில் நடித்து இருந்தார். இந்த நிலையில் இவர்தான் இனி தினேஷ் தடுத்து வந்த அர்ஜுன் கேரக்டரில் தொடர்வார் என்று கூறப்பட்டிருக்கிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications