Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விசித்ராவின் கணவர் கேட்ட கேள்வி.. பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட தினேஷ்.. கதறி அழுத அவருடைய அம்மா

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் நேற்றைய எபிசோடில் ஃப்ரீஸ் டாஸ்க்கில் கலந்து கொள்வதற்காக விசித்ராவின் கணவர் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்திருந்தார்.

அவர் பிக் பாஸ் வீட்டிற்குள் தினேஷ் மற்றும் அர்ச்சனா செய்த செயல்கள் தான் எங்களை ரொம்பவே மனசு கஷ்டப்படுத்தியது என்று சொல்ல அதற்கு தினேஷ் விசித்ராவிடம் மன்னிப்பு கேட்டு இருக்கிறார்.

அதே நேரத்தில் பேட்டி ஒன்றில் தினேஷின் அம்மா சில தகவல்களை சொல்லி கதறி அழுது இருக்கிறார். அந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

bigg boss tamil season 7 Dinesh has apologized to Vishitra saying that it was the actions

அந்த வகையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கிய நாளிலிருந்து அதிகமான பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் போட்டியாளராக விசித்திரா இருந்து வருகிறார். இதுவரைக்கும் எந்த சீசனிலும் இல்லாத சாதனையை விசித்திரா இந்த சீசனில் செய்து வருகிறார். அதாவது பிக் பாஸ் வீட்டிற்குள் வயதில் அதிகமான போட்டியாளர்கள் ஒரு சில வாரங்களில் வெளியேற்றப்படுவது வாடிக்கையாக தான் இருக்கிறது.

ஆனால் 82 நாட்களுக்கு மேலாகவும், டைட்டில் ஜெயிப்பதற்கு அதிகம் வாய்ப்புள்ள போட்டியாளராக பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்து வருகிறார். இதில் இந்த வாரம் போட்டியாளர்களின் உறவினர்கள் வீட்டிற்குள் வந்த வண்ணமாக இருக்கின்றனர். அதில் நேற்று விசித்திராவின் குடும்பத்தினர் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்திருந்தனர். இவர்களுடைய குடும்பத்தை பார்ப்பதற்காக ரசிகர்களும் ஆர்வத்தில் காத்திருந்தனர். அது நேற்று நடந்தது.

bigg boss tamil season 7 Dinesh has apologized to Vishitra saying that it was the actions

அதுபோல உள்ளே சில சுவாரசியமான சம்பவங்களும் நடந்தது. ஏற்கனவே பேட்டிகளில் விசித்திராவின் கணவர் விசித்திரா பற்றி பல தகவல்களை பேசி இருக்கிறார். அந்த வகையில் நேற்று கூட பிக் பாஸ் வீட்டிற்குள் சக போட்டியாளர்களிடம் சகஜமாக பேசிக் கொண்டிருந்த விசித்திராவின் கணவர் எனக்கு பிக் பாஸ் வீட்டிற்குள் நடந்த இரண்டு செயல்கள்தான் ரொம்பவே மனதை கஷ்டப்படுத்தியது என்று சொல்ல, எல்லோரும் என்னவென்று ஆர்வமாக கேட்டனர்.

அப்போது தினேஷ் சர்க்கரையை ஒழித்து வைத்ததற்காக விசித்திராவை பேசியதும், பொம்மை டாஸ்க்கில் அர்ச்சனா விசித்திரா மீது உள்ள கோபத்தை எல்லாம் கொட்டியது தான்.... என்று சொன்னது தான் தாமதம், அதற்கு பிறகு தான் தினேஷுக்கு தான் செய்தது விசித்ராவின் குடும்பத்தை எவ்வளவு பாதித்திருக்கிறது என்பது புரிந்திருக்கிறது. ஏற்கனவே தினேஷுக்கு அன்று என்ன நடந்தது என்பது இப்ப வரைக்கும் தெரியாது.

மாயா மற்றும் பூர்ணிமா சர்க்கரையை ஒழித்து வைத்ததை விசித்திரா சொல்லாமல் தான் ஒழித்து விட்டது போல நடித்துக் கொண்டிருந்ததால் தான் தினேஷ் அன்று உங்க வயசுக்கு இப்படி திருடி பெயரை கெடுத்துக்காதீங்க என்று சொல்லி இருந்தார். ஆனால் அது எங்க மனச கஷ்டப்படுத்தியது என்று விசித்ராவின் கணவர் சொல்ல அதனால் உடனே தினேஷ் விசித்திராவிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு இருந்தார்.

bigg boss tamil season 7 Dinesh has apologized to Vishitra saying that it was the actions

அதுபோல விசித்ராவின் கணவர் தான் எந்த இடத்திலும் யாரையும் குற்றம் சொல்ல வேண்டும் என்று நினைக்கவில்லை. நீங்க வெளிய வந்து பாத்தா தான் உள்ளே என்ன நடந்திருக்குங்கிறது உங்களுக்கு தெரியும். ஆனால் உள்ளே நடந்த ஒரு சில செயல்கள் எங்க மனச கஷ்டப்படுத்தி அவ்வளவுதான் அதனால நாங்க யாரையும் குறை சொல்லல என்று மீண்டும் மீண்டும் தெளிவுபடுத்தி இருந்தார்.

இதே நேரத்தில் தினேஷின் அம்மா பிரபல சேனல் ஒன்றில் பேட்டி அளிக்கையில் தன்னுடைய மகன் வாழ்க்கை இப்போ வீணா போயிட்டு என்று கதறி அழுதபடி பேசி இருந்தார். தன்னுடைய வீட்டில் ரச்சிதா என்னுடைய மகனோடு குடும்பமாக சந்தோஷமாக வாழ்ந்துட்டு இருந்தாங்க... அப்போ அவங்களுக்கு புளியோதரை தான் ரொம்ப பிடிக்கும் என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது தினேஷின் அம்மா அழுது இருந்த வீடியோக்கள் இப்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+