தொடங்க போகும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7..இந்த சீசனில் யாரெல்லாம் இருக்காங்கன்னு தெரியுமா?செம ட்விஸ்ட்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 சமீபத்தில் முடிவடைந்தது. அதை தொடர்ந்து ஏழாவது சீசன் இன்னும் ஒரு சில வாரங்களில் தொடங்கப்பட இருக்கிறது.
இந்த சீசனில் யாரெல்லாம் கலந்துக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாக இருக்கிறது. அந்த நிலையில் சில பிரபலங்களின் பெயர் இப்போது இணையத்தில் வெளியாகி வலம் வருகிறது.
ஒவ்வொரு சீசனிலும் நிகழ்ச்சி தொடங்கப்படுவதற்கு முன்பாக பலருடைய பெயர் அடிப்படும். அந்த மாதிரி ஒரு சில போட்டியாளர்களின் பெயர்கள் கருத்துக்கணிப்பில் இருக்கின்றது. அவர்களைப் பற்றி பார்க்கலாம் வாங்க.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி சமீபத்தில் ஆறாவது சீசன் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து இப்போது ஏழாவது சீசன் ஒளிபரப்பாகும் என்பது பலருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த சீசனிலும் நடிகர் கமல்ஹாசன் தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போகிறார் என்றும் செய்திகள் வெளியாகி இருக்கிறது.
அது மட்டும் அல்லாமல் இந்த சீசன் வரும் ஜூலை கடைசி வாரம் அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடக்க வாய்ப்பு இருக்கிறது என்றும், அதுபோல இதுவரைக்கும் இல்லாத வகையில் கேமராக்கள் அதிகரிக்கப்படுகிறது என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதுவரைக்கும் சுமார் 65 கேமரா இருந்த நிலையில் தற்போது 76 கேமரா பொருத்தப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
அதுபோல இந்த சீசனில் சிலர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களின் விவரங்களை பார்க்கலாம். அதில், முதல் ஆளாக நடிகை ரேகா நாயர் இருக்கிறார். இவர் ஏற்கனவே நடிகர் பயில்வான் ரங்கநாதன் உடன் செம சண்டையில் ஈடுபட்டு சமீபத்தில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருந்தார். அது போதாது என்று வெளிப்படையாகவே பயில்வான் இறந்தால் நான் வெடி போட்டு கொண்டாடுவேன் என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரேகா நாயர் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரைத் தொடர்ந்து நடிகை உமா ரியாஸ் கலந்து கொள்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஏற்கனவே இவருடைய மகன் ஷாரிக் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். அதை தொடர்ந்து பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு இருந்தார்.
அதுபோல தொகுப்பாளராகவும் பிரபலமாக இருக்கும் பாவனாவும் இந்த நிகழ்ச்சிக்கான ஆடிஷனில் கலந்து கொண்டிருக்கிறார் என்று செய்தி வெளியாகி இருக்கிறது. அதனால் கண்டிப்பாக அவரும் கலந்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது என்பது பலருடைய எதிர்பார்ப்பு. அவரைத் தொடர்ந்து விஜய் டிவி பிரபலமாகவும், தொகுப்பாளராகவும், மாகாபா கலந்து கொள்வதற்கு அதிகமான வாய்ப்பு இருக்கிறது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவரைத் தொடர்ந்து மாகாபாவின் நெருங்கிய நண்பராக இருக்கும் விஜய் டிவி சரத் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆட்டிஷனில் கலந்து கொண்டிருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் சரத் பிரபலமடைந்தது போல ,இந்த நிகழ்ச்சியிலும் தனக்கு ஒரு பிரபலத்தை ஏற்படுத்த வேண்டும் என்று முயற்சிப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது வரைக்கும் இவர்களுடைய பெயர்கள்தான் அதிகமாக அடிபட்டுக் கொண்டிருக்கிறது. இதில் யாரெல்லாம் கன்பர்மேஷன் ஆகிறார்கள் என்பது இன்னும் ஒரு சில நாட்களில் தெரிந்துவிடும். அதைத் தொடர்ந்து மேலும் யாரெல்லாம் செலக்ட் ஆகிறார்கள் என்பதை பற்றியும் சில தினங்களில் பார்ப்போம்.
-
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
அஜித்துக்கு அடுத்த பேரிழப்பு.. தந்தையை தொடர்ந்து தாயாரும் மறைவு.. சோகத்தில் பிரபலங்கள் வருத்தம் -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications