பிக் பாஸ் 7இல் பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர் இல்லை.. இந்த நடிகராம்? கடைசியில் இப்படி ஒரு பிரச்சனையாமே?
சென்னை: விஜய் டிவியில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி வரும் அக்டோபர் ஒன்றாம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கப்பட இருக்கிறது.
இதில் யார் யாரெல்லாம் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் பல பிரபலங்களின் பெயர் அடிபட்டுக் கொண்டிருக்கிறது.

அதே நேரத்தில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் ப்ரோமோ சூட் முடித்து விட்டார்களாம். இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இருந்து கதிர் கலந்து கொள்ளவில்லை என்றும் இன்னொரு நடிகர் தான் கலந்து கொண்டிருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஒவ்வொரு முறையும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்படுவதற்கு முன்பு அது பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்த சீசனில் என்னவெல்லாம் புதியதாக இருக்கப் போகிறது, இந்த சீசனில் யாரெல்லாம் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்று ஒவ்வொரு முறையும் பலர் எதிர்பார்ப்பில் இருக்கும் நிலையில் இந்த சீசனிலும் அப்படித்தான் ரசிகர்களின் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
அதுபோல ஒவ்வொரு சீசனும் தொடங்கப்படுவதற்கு முன்பு இதில் இவர்களெல்லாம் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்று பல பிரபலங்களின் பெயர் அடிபட்டுக் கொண்டிருப்போம். அதில் பாதி பேர் தான் கலந்து கொள்வார்கள். அந்த வகையில் இந்த முறையும் பல பேருடைய பெயர் அடிபட்டுக் கொண்டிருக்கிறது. உத்தேச பட்டியலில் பல பிரபலங்கள் பெயர் இடம் பெற்று இருக்கிறது. அதில் விஜய் டிவி பிரபலங்கள் அதிகமானோர் இருக்கின்றனர்.
அந்த வகையில் விஜய் டிவியில் விரைவில் முடிவுக்கு வர இருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிராக நடிக்கும் குமரன் இந்த சீசனில் கலந்து கொள்வார் என்று செய்திகள் சமீபத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. ஏற்கனவே பல போராட்டங்களுக்கு பிறகு தான் குமரனுக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் வாய்ப்பு கிடைத்திருந்தது. இந்த நிலையில் இந்த சீரியல் முடிவடைக்கு வருவதற்கு முன்பு அவர் சீரியலை விட்டு விலகுவாரா? என்பது பலருடைய கேள்வியாக இருந்தது.
அதுபோல பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முதல் பாகம் முடிவடைந்தது இரண்டாவது பாகம் விரைவில் தொடங்கப்பட இருக்கும் நிலையில் அதில் குமரன் கலந்து கொள்வாரா? இல்லையா? என்ற ஒரு பிரச்சனையும் சீரியல் தரப்பிற்குள் போய்க்கொண்டிருந்தது. இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொள்வார் என்று செய்திகள் வெளியான நிலையில் தற்போது அது உண்மை இல்லை என்று அடுத்த செய்தி ஒன்று பரவி வருகிறது.

அதாவது ஆரம்பத்தில் குமரனிடம் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் அதற்குப் பிறகு அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்றும் அதே நேரத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணன் கேரக்டரில் நடிக்கும சரவணன் தான் பிக் பாஸ் வீட்டிற்கு போகப் போகிறார் என்று செய்திகள் பரவி வருகிறது. அதாவது சமீபத்தில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் அதிகமான நெகட்டிவ் கருத்துக்களை பெற்று இருந்தது கண்ணன் கேரக்டரில் நடித்து வந்த சரவணன் தான்.
அதே நேரத்தில் சமீபத்தில் இந்த சீரியல் முடிவுக்கு வர இருக்கும் நிலையில் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்போது இவருடைய நிஜ கேரக்டரை ரசிகர்கள் புரிந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே நல்ல பெயரோடு இருந்த பல பிரபலங்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு நெகடிவ் பெயர் எடுத்தது பலருக்கு தெரியும். ஆனால் அது போல இவரா இப்படி என்று சொல்வது போன்று ஒரு சிலர் வெளியே நெகட்டிவாக இருந்தாலும் உள்ளே நல்ல பெயரையும் எடுத்திருந்தனர். அந்த வகையில் கண்ணனுடைய கேரக்டர் ரசிகர்களுக்கு என்ன மாதிரி சேரப் போகிறது என்பது பொறுத்திருந்து பார்த்தால் தான் தெரியும்.
-
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications