பிக் பாஸ் 7 லைவ்: பெற்றோரை ஆர்வமாக வரவேற்ற தினேஷுக்கு கிடைத்த அதிர்ச்சி.. இதை எதிர்பார்க்கலையே
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் இரண்டாவது நாளாக ஃப்ரீஸ் டாஸ்க் நடைபெற்று வருகிறது. அதில் இன்று தினேஷ் உடைய அம்மாவும் அப்பாவும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்திருக்கின்றனர்.
பிக் பாஸ் வீட்டிற்குள் வந்ததும் தினேஷின் அப்பாவும் அம்மாவும் தங்களுடைய காதல் கதையை சொல்லி அனைவரையும் இன்ப அதிர்ச்சி அடைய வைத்திருக்கின்றனர்.
அதோடு தன்னுடைய பெற்றோர் நடந்து கொண்ட விதத்தை பார்த்து தினேஷ் அதிர்ச்சியாகி இருக்கிறார். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

அந்த வகையில் அனைவரும் ஆர்வத்தோடு காத்திருந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 7 ஃப்ரீஸ் டாஸ்க் நேற்று இருந்து தொடங்கியது. நேற்று மூன்று போட்டியாளர்களின் குடும்பத்தினர் வந்திருந்தனர். அதுவும் பூர்ணிமா, அர்ச்சனா, விஜய், விக்ரம் குடும்பத்தினர் போட்டியாளர்களிடம் சகஜமாக பேசி கலகலப்பாக நிகழ்ச்சியை கொண்டு போயிருந்தனர். அதோடு பல ரகசியங்களையும் பிக் பாஸ் வீட்டிற்குள் உடைத்திருந்தனர்.
அர்ச்சனாவின் அப்பா நேரடியாக நிக்சனை பல கேள்விகள் கேட்டு கதற விட்டிருந்தார். அதுபோல விக்ரமுடைய அப்பா மற்றும் அம்மா வெளியே நடக்கும் பல நிகழ்வுகளை சூசகமாக போட்டியாளர்களிடம் போட்டுக் கொடுத்திருந்தனர். இந்த நிலையில் இன்று யாருடைய குடும்பம் வரப்போகிறது என்ற ஆர்வம் அனைவருக்கும் இருந்தது அந்த வகையில் இன்று காலை எல்லோரும் நிகழ்ச்சிக்காக கிளம்பி கொண்டிருந்தனர்.
அந்த நேரத்தில் தினேஷ் குளித்துக் கொண்டு ரூமை விட்டு வெளியே வந்து கொண்டிருந்தார். அப்போது ஃப்ரீஸ் சொல்லப்பட்டது. அப்போது சைவம் படத்தில் இடம் பெற்ற "இந்த அன்பை போல வேறு ஏது" என்ற பாடல் ஒலிக்க அதைக் கேட்டு தினேஷ் வெளியே எட்டிப் பார்த்த வண்ணமாகவே இருக்கிறார். அவருக்கு தெரிகிறது இது நமக்காக போடப்பட்ட பாடல் தான் என்று, பிறகு ஒரு கட்டத்தில் தன்னுடைய அம்மா அப்பாவை பார்த்ததும் தினேஷ் ஓடிப்போய் அவர்களை கட்டி அணைத்து வரவேற்று வருகிறார்.
பிறகு அவர்கள் உள்ளே வந்ததும் தினேஷின் அம்மா விசித்திராவை பார்த்ததும் கட்டிப்பிடித்து கதறி அழுகிறார். அதற்கு விசித்திரா ஏன் அம்மா அழுறீங்க என்று கேட்கிறார் அதற்கு தினேஷ் உடைய அம்மா எதுவும் இப்ப வரைக்கும் சொல்லவில்லை. பிறகு எல்லாரும் ஒன்றாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது தினேஷ் உடைய அப்பா என்னுடைய முடி எல்லாம் வெள்ளை ஆகிட்டு என்பதால் எனக்கு ரொம்ப வயசாயிடுச்சு என்னுடைய மனைவி ரொம்ப சின்ன பொண்ணு நினைச்சுக்காதீங்க.
ரெண்டு பேரும் ஒரே வீட்டில் தான் வளர்ந்தோம். என்னை படிக்க வச்சது, வேலைக்கு சேர்த்து விட்டது, எல்லாமே இவங்களோட அப்பா தான். என்னுடைய மாமா தான். எனக்கு எல்லாமே பண்ணுனது இவங்க அப்பா தான் இவங்க என்னுடைய தாய் மாமன் பொண்ணு தான். நான் எங்க அப்பா அம்மா முகத்தை பார்த்ததே கிடையாது என்று சொல்லிக் கொண்டிருக்க தினேஷ் ரச்சிதா வருவாரா என்று வாசலையே அடிக்கடி பார்க்கிறார்.
ஏற்கனவே தினேஷ் இந்த சீசனில் டைட்டில் ஜெயித்து அதை ரச்சிதாவிற்கு பரிசளிப்பேன் என்று சொல்லி இருக்கும் நிலையில் வெளியே ரச்சிதா தினேஷை எதிர்க்கும் விசித்திராவிற்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்து, ஆண்கள் அடிமைப்படுத்தினால் சோர்ந்து விடாதிங்க என்று விசித்திராவிற்கு சப்போர்ட் கொடுத்திருக்கிறார். அதே நேரத்தில் தினேஷ் பெயரை தன்னுடைய கையில் டாட்டூ போட்டு இருந்த இடத்தையும் வேறு டாட்டு போட்டு மறைத்திருக்கிறார். ஆனால் இதுவெல்லாம் தெரியாமல் தினேஷ் ரச்சிதாவின் வருகைக்காக பிக் பாஸ் வீட்டிற்குள் காத்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications