Bigg Boss 7 finale: பிக் பாஸ் சொன்ன அந்த வார்த்தை..கண்கலங்கிய அர்ச்சனா.. ஆனால்! மாயா எதிர்பாரா செயல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் கிராண்ட் பினாலே நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் இறுதி கட்டத்தில் அர்ச்சனா, மாயா, மணி, தினேஷ், விஷ்ணுவின் 5 போட்டியாளர்கள் இருந்த நிலையில் இப்போது இரண்டு போட்டியாளர்கள் வெளியே போயிருக்கின்றனர். அவர்களை தொடர்ந்து மூன்று போட்டியாளர்கள் இறுதி கட்டத்தில் நிலைத்திருக்கின்றனர்.


அப்போது மூன்று போட்டியாளர்களிடமும் பிக் பாஸ் இறுதியாக பேசிய வார்த்தை மற்றும் டாஸ்க் பார்த்து அர்ச்சனா கண்கலங்கி அழுது இருக்கிறார்

Bigg Boss Tamil season 7 grand finale contestant Archana is crying after that Bigg Boss


அதைத் தொடர்ந்து மூன்று போட்டியாளர்களும் அங்கு வைக்கப்பட்டிருந்த பைக்கில் ஏறி இறுதி மேடைக்கு சென்று இருக்கின்றனர். இந்த நிலையில் என்ன நடந்தது என்பது இறுதியாக பார்க்கலாம். பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி இன்று மாலை 6 மணியில் இருந்து ஒளிபரப்பாகி வருகிறது. இதில் இறுதி கட்டத்தில் 5 போட்டியாளர்கள் இருந்த நிலையில் ஐந்தாவது போட்டியாளராக விஷ்ணுவை முதலில் எலிமினேஷன் ஆகி வெளியே தூக்கி இருந்த நிலையில், அதைத்தொடர்ந்து இப்போது தினேஷும் வெளியே வந்திருக்கிறார். இந்த நிலையில் இப்போது அர்ச்சனா, மாயா, மணி 3 போட்டியாளர்கள் மட்டுமே இருக்கின்றனர்.
இதுவரைக்கும் எந்த சீசனிலும் நடக்காத ஒரு நிகழ்வு இந்த சீசனில் நடந்திருக்கிறது. அதாவது முதல் மூன்று இடங்களுக்குள் இரண்டு பெண் போட்டியாளர்கள் இருக்கிறார்கள். இந்த நிலையில் நிகழ்ச்சி முடிவடைய இன்னும் ஒரு சில நிமிடங்களை இருக்கும் நிலையில் பிக் பாஸ்க்குள் இருக்கும் மூன்று போட்டியாளர்களிடமும் கடைசியாக பேசியிருக்கிறார். அப்போது நீங்கள் இந்த வீட்டிற்குள் வந்து நீங்களும் என்னுடைய குடும்பமாக மாறிவிட்டீர்கள். இந்த வீட்டிற்குள் நீங்கள் செய்த சின்ன சின்ன செயல்கள், நீங்கள் என்னுடைய பேச்சுக்கு கொடுத்த மரியாதை... இதை நான் எப்போதும் மறக்க மாட்டேன். அதுபோல கடந்த சீசன்களில் கலந்து கொண்ட பிரபலங்கள் எப்படி இப்போதும் எங்களுக்கு ஸ்பெஷல் ஆக இருக்கிறார்களோ அதுபோல இப்போது நீங்கள் மூவரும் இருக்கிறீர்கள்.
உங்களை நான் பிரியும் நேரம் வந்துவிட்டது என்று பேசிக் கொண்டிருக்க அந்த வார்த்தைகளை கேட்டு அர்ச்சனா கண் கலங்கி அழுது கொண்டு இருக்க மாயா கெத்தாக நின்று கொண்டிருக்கிறார். இறுதிக்கட்டத்தில் உணர்வு பூர்வமாக பிக் பாஸ் பேசியதை கேட்டு தன்னுடைய வெகுளித்தனத்தை காட்டிய அர்ச்சனா சிறிது நேரம் கழித்து பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த விளக்குகள் அணைக்கப்பட்டதும் அங்கிருந்த பைக்கில் மணி மற்றும் மாயாவோடு மேடைக்கு வந்திருந்தார். அங்கு அவருக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து மூன்று பேர் சந்தோஷத்தில் மிதந்து இருந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+