Bigg Boss 7 grand finale: கப்பு கிடைக்காத விரக்தியில் மாயா போட்ட பதிவு.. ஆனால்! ரசிகர்கள் சர்ப்ரைஸ்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில் இந்த சீசன் டைட்டில் வின்னராக அர்ச்சனா தேர்வாகி இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதைத் தொடர்ந்து இந்த சீசனில் கலந்து கொண்ட மாயா தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட பதிவு இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அதாவது மாயா தன்னோடு இந்த சீசனில் கலந்து கொண்ட ஒரு சில போட்டியாளர்களை கட்டிப்பிடித்தபடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் யாரும் எதிர்பார்க்காத ஒரு கேப்ஷனை கொடுத்திருக்கிறார்.

இன்றைய நிகழ்ச்சிக்கான சூட்டிங் நேற்று நடைபெற்று முடிந்துவிட்ட நிலையில் எல்லோரும் வெளியே வந்திருக்கும் நிலையில் மாயா இப்போது கிராண்ட் பினாலே ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் வெளியிட்ட திடீர் பதிவுதான் இப்போது இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. அதிலும் மாயாவின் பதிவுக்கு அர்ச்சனாவின் ரசிகர்கள் மாயாவை கலாய்த்து கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி கிராண்ட் பினாலே ரசிகர்கள் எடுத்து பார்த்தபடியே இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதில் இந்த சீசனில் கலந்து கொண்ட ஐந்து போட்டியாளர்களிடம் கமல்ஹாசன் இப்போது பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து பார்த்து பேசி விட்டு வெளியே வந்திருக்கிறார். அதோடு உள்ளே போட்டியாளர்கள் பெரிய அளவில் பதட்டம் இல்லாமல் இருக்கிறார்கள்.
இப்போது ஒவ்வொருவராக இந்த மேடைக்கு வருவார்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் ஏற்கனவே இந்த சீசனில் கலந்து கொண்டு வெளியே போன போட்டியாளர்கள் கமல்ஹாசனிடம் தங்கள் மனதில் இருக்கும் கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தனர். இதே நேரத்தில் இந்த சீசனில் நூல் இழையில் டைட்டில் வின்னர் வாய்ப்பை தவறவிட்ட மாயா தன்னுடைய இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற சமூக வலைதள பக்கத்தில் திடீர் பதிவு ஒன்று வெளியிட்டு இருக்கிறார்.

அதில் ஐசு, அனன்யா, பூர்ணிமா மூவரையும் கட்டி அணைத்தபடி, "கையில் என்ன கொண்டு வந்தோம் கொண்டு செல்ல...?" என்று கேள்விக்குறியோடு ஒரு கேப்ஷனும் கொடுத்திருக்கிறார். இந்த நிலையில் ரசிகர்கள் உங்களுக்கு ஆதரவாக உள்ளே பலபேர் பேசிக் கொண்டிருந்தார்களே அவர்களை எல்லாம் விட்டுவிட்டு இவர்கள் மூன்று பேரோடு மட்டும் ஏன் இந்த திடீர் போஸ்ட் என்று கேள்வி எழுப்புகின்றனர்.
அதிலும் ஒரு சில ரசிகர்கள் உங்கள் அணியில் கரப்பான் பூச்சி என்று நீங்கள் அழைத்தாலும் கண்டுகொள்ளாமல் சுற்றிக்கொண்டு இருந்த விக்ரம் கூட உங்கள் அணியில் ஒரு ஆளு கிடையாதா? என்று கேள்வி எழுப்புகிறார்கள். அதே நேரத்தில் மாயாவின் தீவிர ரசிகர்கள் நீங்கள் வருத்தப்படாதீங்க நீங்க டைட்டில் ஜெயிக்கவில்லை என்றாலும் எங்களுடைய மனதை வென்று விட்டீர்கள் என்று கமெண்ட்களை குவிக்கிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications