ஜூலி சொன்ன ஒரு பொய்யால தான்.. யுகேந்திரனிடம் இதை சொல்லித்தான் அனுப்புனோம்.. ஆனால்? மனைவி ஓபன் டாக்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் பிரபல பாடகராகவும், நடிகராகவும் இருக்கும் யுகேந்திரன் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார்.
இந்த நிலையில் யுகேந்திரன் பற்றி அவருடைய மனைவி மாலினி யுகேந்திரன் பல தகவல்களை பிரபல செய்தி சேனல் ஒன்றுக்கு பகிர்ந்திருக்கிறார்.

அதில் யுகேந்திரன் இரண்டு வாரம் மட்டுமே பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தால் போதும் என்று தான் சொல்லி அனுப்பியதாகவும் அதற்கான விளக்கத்தையும் மாலினி கூறி இருக்கிறார். அது பற்றி பார்ப்போம்.
யில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பல பேர் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர். ஒரு சிலர் பல சீசன்களாகவே இந்த நிகழ்ச்சிகள் கலந்து கொள்வதற்காக முயற்சி எடுத்து வருகின்றனர். அந்த வகையில் தான் இந்த சீசனில் அதிகமான போட்டியாளர்களுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதில் பிரபல பாடகர் ஆன மலேசியா வாசுதேவனின் மகனும் பிரபல பாடகராகவும் நடிகராகவும் இருக்கும் யுகேந்திரனும் கலந்து கொண்டிருக்கிறார்.
யுகேந்திரனை ஒரு நடிகராக பலருக்கும் தெரியும். அவர் அதிகமாக விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களோடு நடித்திருக்கிறார். வில்லனாகவும் குணசித்திர வேடங்களிலும் யுகேந்திரன் நடித்திருந்தாலும் அவர் ஒரு பாடகர் என்பது பலருக்கும் தெரியாது. அவர் பாடிய ஹிட்டான பல பாடல்கள் பலருக்கும் பிடிக்கும். ஆனால் அந்த பாடல்களை பாடியது யுகேந்திரன் தான் என்று சொன்னால் தெரியாது. அந்த வகையில் தான் தன்னை பற்றி ரசிகர்களுக்கு தெரிய வைப்பதற்காக பிக் பாஸ் நிகழ்ச்சியில் யுகேந்திரன் கலந்து கொண்டு இருக்கிறாராம்.

யுகேந்திரன் பற்றி அவருடைய மனைவி மாலினி சில தகவல்களை பகிர்ந்திருக்கிறார். அதில் யுகேந்திரன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறார் என்ற போது அவரிடம் நான் கேட்டது, நீங்க எதற்காக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுறீங்க என்பதுதான். அதற்கு அவர் சொன்னது ரசிகர்களின் மனதை கவர வேண்டும். அது மட்டும் தான் என்னுடைய நோக்கம் நான் இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெறுகிறனோ இல்லையோ ஆனால் ரசிகர்களுக்கு நான் யார் என்பதை தெரியப்படுத்த வேண்டும். அதற்காகத்தான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.
அதனாலேயே நான் அவரிடம் சொன்னது என்னவென்றால் நீங்க இந்த இரண்டு வாரம் மட்டும் இருந்தால் போதும் ஏற்கனவே சின்னத்திரையில் அடிக்கடி நீங்க நடிச்ச பல படங்கள் போட்டு கொண்டு இருக்கிறார்கள். அதனால் ரசிகர்களுக்கு நீங்கள் ஒரு நடிகர் என்பது தெரியும். அதனால் முதல் வாரத்தில் உங்களுடைய முகத்தை ரசிகர்களின் மத்தியில் பதிய வைங்க, இரண்டாவது வாரத்தில் நீங்க யார் என்பதை காட்டுங்கள். உங்களுடைய திறமையை அடிக்கடி பாட்டு பாடி வெளியே கொண்டு வாங்க. மூன்றாவது வாரத்தில் நீங்கள் இருந்தாலும் ஓகே இல்லை என்றாலும் வீட்டுக்கு வந்தாலும் சந்தோஷம்தான் என்று சொல்லித்தான் அவரை வழி அனுப்பி வைத்தேன்.
அதுபோல பிக் பாஸ் வீட்டிற்குள் அவர் நிஜத்தில் எப்படி இருப்பாரோ அப்படித்தான் உள்ளேயும் இருக்கிறார். வெளியே யாரிடமும் அவர் கோபப்பட மாட்டார். எல்லா ஆண்கள் போல யுகேந்திரனும் பொண்டாட்டியிடம் மட்டும்தான் கோபத்தை காட்டுவார். மத்தபடி அவருடைய பிரெண்ட்ஸ் கூட அவர் கோபத்தை காட்டி பார்த்ததில்லை. ஆனால் யாராவது தப்பு பண்ணுனா அவர் அந்த இடத்தில் கேள்வி கேட்பார்.
பிக் பாஸ் வீட்டிற்குள் எத்தனையோ பேர் கலந்து கொண்டு இருந்தாலும் அதிகமான ரசிகர்களின் மனதில் இருப்பது இரண்டு பேர் தான். ஒன்று உண்மையாக விளையாடிய ஓவியா, மற்றொன்று ஒரே ஒரு பொய் பேசிய ஜூலி. பிக் பாஸ் வீட்டிற்குள் ஒரு கெட்ட பெயர் எடுத்து விட்டால் அதை போக்குவதற்காக பல வருடங்களாக போராட வேண்டும். பல பேர் வரலாம் போகலாம் அவர்களைப் பற்றி நினைவுகளை ரசிகர்கள் அப்படியே மறந்து விடுவார்கள். ஆனால் இந்த மாதிரி ஏதேனும் மாட்டி விடக்கூடாது என்று தான் நாங்கள் சொல்லி அனுப்பினோம்.
அதுபோல யுகேந்திரன் இப்ப வரைக்கும் நல்லாவே விளையாடிக் கொண்டிருக்கிறார். அவர் எந்த இடத்திலும் நடித்துக் கொண்டிருக்கவில்லை. அதனால் தான் இப்போது அதிகமான ரசிகர்களுக்கு அவரை பிடிக்க தொடங்கி இருக்கிறது என்று யுகேந்திரனின் மனைவி மாலினி யுகேந்திரன் அந்த பேட்டியில் பேசியிருக்கிறார்.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications