பிக் பாஸ் தமிழ் சீசன் 7: அறிமுக முதல் போட்டியாளர் இவரா? நடப்பு நிகழ்வுகளோடு விவாதம் இருக்குமா..!
சென்னை: விஜய் டிவி விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி இன்னும் சில வாரங்களில் ஒளிபரப்பாக இருக்கிறது.
அதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் எதிர்பார்க்கப்பட்ட பட்டியல் இணையத்தில் வலம் வருகிறது. அதில் முதல் போட்டியாளராக பிரபல செய்தி வாசிப்பாளர் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றனர். ஆரம்பத்தில் இந்த மாதிரி ஒரு நிகழ்ச்சி தொடங்கும் போது அதற்கு அதிகமான நெகட்டிவ் கருத்துகள் வந்தது. அது எப்படி ஒரு பிரபலங்களால் 100 நாட்கள் சாதாரணமாக ஒரு வீட்டில் இருக்க முடியும். அதுவும் அவர்களால் போன் இன்டர்நெட் என்று எந்த ஒரு இணையதள வசதிகளையும் பயன்படுத்தாமல் இருக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பி வந்தனர்.
அதே நேரத்தில் தங்களுக்கு பழக்கமான பல பிரபலங்கள் வாழ்க்கையில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்வதற்காக அதிகமான ரசிகர்கள் ஆர்வம் காட்டிக்கொண்டும் இருந்தனர். இதனாலையே பிக் பாஸ் நிகழ்ச்சி யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு சூப்பர் டூப்பராக வெற்றி அடைந்தது. முதல் சீசனில் வெற்றியைத் தொடர்ந்து தற்போது வரைக்கும் ஆறு சீசன்கள் முடிவடைந்து இருக்கிறது.
வேறு மொழிகளிலும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடர்ச்சியாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் அதில் பல சீசன்களை கடந்து விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்னும் சில வாரங்களுக்குள் அதாவது செப்டம்பர் முதலில் அல்லது இரண்டாவது வாரத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் நிலையில் ஒவ்வொரு சீசனிலும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு உத்தேச போட்டியாளர்களின் பட்டியல் வெளியானது போலவே இந்த சீசனிலும் வெளியாகியிருக்கிறது. அதில் வழக்கமாக கலந்து கொள்ளும். நடிகர் நடிகைகள் செய்தியாளர்கள், திருநங்கைகள், அரசியல் பிரமுகர் என்ற கேட்டகிரியில் இந்த சீசனிலும் பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் சர்ச்சைக்குரிய பல போட்டியாளர்கள் இந்த சீசனில் கலந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் ஏற்கனவே நாம் யாரெல்லாம் இந்த சீசனில் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்ற ஏற்கனவே ஒரு செய்திகள் அனுப்பி இருக்கிறோம். இந்த நிலையில் தற்போது பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியின் முதல் போட்டியாளராக செய்தி வாசிப்பாளர் ரஞ்சித் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது. இது குறித்த ப்ரோமோ விரைவில் வெளியானதும் உறுதி செய்யப்படும்.
-
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications