பிக் பாஸில் திடீர் திருப்பம்.. 12 லட்சத்தோடு வீட்டிற்குள் வந்த நபர்.. பூர்ணிமா எடுத்த திடீர் முடிவு
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் இன்று 95 வது நாள் நடந்து கொண்டிருக்கிறது. அதில் இன்று ஜனவரி 4-ம் தேதிக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் மூன்றாவது நாளாக இன்றும் பணப்பெட்டி டாஸ்க் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.அதில் ஆரம்பத்தில் ஒரு லட்சத்தோடு ஆரம்பித்த இந்த டாஸ்க் இப்போது 12 லட்சத்தில் வந்து நிற்கிறது. இந்த நிலையில் உள்ளே இருக்கும் போட்டியாளர்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது.
அதில் முதல் ப்ரோமோவில் பூர்ணிமா நான் பணத்தை எடுக்கலாம் என்று யோசிக்கிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அவருக்கு மாயா அட்வைஸ் கொடுத்து கொண்டிருக்கிறார். இதுவரைக்கும் விசித்ரா தான் பணப்பெட்டியை தூக்கி விட்டார் என்று சொல்லி வந்த நிலையில் தற்போது வெளியான ப்ரோமோ ரசிகர்களின் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
அந்த வகையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி இன்னும் ஒரு சில நாட்களில் முடிவுக்கு வர இருக்கிறது. இறுதி கட்டத்தில் வந்திருக்கும் நிலையில் தற்போது இந்த வாரத்தில் பணப்பெட்டி டாஸ்க் தொடங்கி இருக்கிறது. ஒவ்வொரு சீசனிலும் பிக் பாஸ் வீட்டிற்குள் ஒரு போட்டியாளர் இந்த பணப்பெட்டியை தூக்கிக்கொண்டு வெளியே வருவதை பார்த்திருப்போம். தங்கள் எதிர்பார்த்த பணம் வந்ததும் அதை சில போட்டியாளர்கள் தூக்கி விடுவார்கள்.

ஒரு சில போட்டியாளர்கள் இன்னும் கொஞ்சம் பணம் வரட்டும் தூக்கலாம் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில் அதற்கு முன்பு வேறு போட்டியாளர் தூக்கிக்கொண்டு டாடா காட்டி வெளியே வந்தது கதையும் உண்டு. ஆனால் இந்த சீசனில் உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் நாங்கள் எத்தனை லட்சம் கொடுத்தாலும் பணத்தை வாங்க மாட்டோம் என்று விடாப்பிடியாக பேசிக் கொண்டிருக்கின்றனர்.
இதில் யார் தான் இந்த பணத்தை எடுக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. அந்த வகையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பணப்பெட்டி டாஸ்க் தொடங்கியது. அதில் ஒரு லட்சம் ரூபாயோடு டாஸ்க் தொடங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில் 12 லட்சம் ரூபாய் வைக்கப்பட்டிருக்கிறது.
அதை வெளியாள் ஒருவர் முகமூடி அணிந்தபடியே பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து பணத்தை வைக்க போட்டியாளர்களுக்குள் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. அப்போது தினேஷ் வேணும்னா பாருங்க யாரும் பணத்தை எடுக்க மாட்டாங்க... ஏன்னா நாம அவ்வளவு ஹைப் ஏத்தி குழப்பிவிட்டு இருக்கோம் என்று பேசிக் கொண்டிருக்க, அந்த நேரத்தில் விசித்திரா சிரித்துக் கொண்டிருக்கிறார்.
அவருக்கு சூம் வைத்து பிக்பாஸ் காட்டுகிறார். அதைத் தொடர்ந்து பூர்ணிமாவும் மாயாவும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது 12 லட்சம் ரூபாய் பணம் வந்துட்டு நான் இதை எடுக்கலாம்னு இருக்கேன் என்று பூர்ணிமா சொல்ல, அதற்கு மாயா நீங்க பணத்தை எடுக்க போறதா இருந்தா அது உங்களுடைய தனிப்பட்ட முடிவு என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இதனால் பூர்ணிமா பணத்தை எடுக்க போகிறாரா?
அல்லது நேற்று வெளியான தகவலின் படி விசித்திரா தான் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியே போக போகிறாரா என்று இன்னும் உறுதியாக தெரியவில்லை. ஆனால் இவர்கள் இருவரும் யார் எடுத்து இருந்தாலும் அந்த முடிவு சரியானதுதான். இத்தனை நாட்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்ததற்கு போட்டியாளர்களுக்கு சம்பளம் அதிகளவில் கொடுக்கப்பட்டிருக்கும் அதோட இந்த தொகையை இவர்கள் இருவரில் யார் எடுத்திருந்தாலும் அவர்களுக்கு பிளஸ் பாயிண்ட் தான்.

காரணம் இவர்கள் இருவரும் இந்த சீசன் டைட்டிலை ஜெயிக்க போவதில்லை என்பது உறுதியாக தெரிந்ததுதான். ஆனால் கடைசி நேரத்தில் இவர்கள் என்ன முடிவு எடுத்திருக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். அதே நேரத்தில் நீங்கள் இந்த பணப்பெட்டி டாஸ்க்கில் யார் பணத்தை எடுக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்பதை கமெண்டில் தெரிவியுங்கள்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications