அதிரடியாக பிக் பாஸ் அறிவித்த முடிவு.. வெளியே போகிறவர் இவரா? இதுவரை நடக்காத நிகழ்வு
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் ஜனவரி 3ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது.
அதில் தற்போது பணப்பெட்டி டாஸ்க் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதுவரைக்கும் பணப்பெட்டியில் ஒன்பது லட்சம் பணம் இருக்கும் நிலையில் பிக் பாஸ் முக்கிய அறிவிப்பு அறிவித்திருக்கிறார்.
ஒன்பது லட்சத்தில் இருந்து இன்னும் பணம் அதிகரிக்கவும் செய்யலாம் அல்லது குறையவும் செய்யலாம் என்று பிக் பாஸ் அறிவித்து இருக்கிறார். என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

அந்த வகையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி 94-வது நாளில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இன்னும் ஒரு சில நாட்களில் இந்த நிகழ்ச்சி முடிவுக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் இந்த சீசனில் யார் டைட்டில் வின்னர் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. அதே நேரத்தில் பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் பணப்பெட்டி டாஸ்க் தொடங்கி இருக்கிறது.
அதில் யார் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியே போகப் போகிறது என்று எதிர்பார்ப்பும் இருக்கிறது. உள்ளே போட்டியாளர்கள் ஒரு வாரத்திற்கு முன்பே இந்த பணப்பெட்டி வந்ததும் யாரெல்லாம் வெளியே போவார்கள் என்ற கணக்கெடுப்பை தொடங்கி விட்டார்கள். அதோடு நான் அவங்க போக மாட்டாங்க, இவங்க போக மாட்டாங்க என்று பலர் விவாதித்துக் கொண்டும் இருக்கிறார்கள்.
அது மட்டுமல்லாமல் ஒரு சிலர் நான் இப்ப தூக்கி விடுவேன் கொஞ்சம் கழிச்சு தூக்கி விடுவேன் என்று பாவலா செய்தும் வருகிறார்கள். அந்த வகையில் இன்றைய எபிசோடுக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் பணம் 9 லட்சத்தோடு இருக்கிறது. அப்போது பிக் பாஸ் ஒரு முக்கிய அறிவிப்பை கொடுத்திருக்கிறார்.
அதாவது பிக் பாஸ் தமிழ் சீசன் 7இல் பண பெட்டியில் இருக்கும் எண்ணிக்கை கூடவும் செய்யலாம் குறையவும் செய்யலாம் என்று கூறியிருக்கிறார். 9 லட்சம் பணம் இருக்கும் நிலையில் அதை பார்த்ததும் மணி பாஸ் அடுத்தது பணத்தை ஏத்தும் போது கொஞ்சம் பார்த்து ஏத்துங்க முடிவை மாத்திக்கலாம் என்று சொல்கிறார். அதைத்தொடர்ந்து அங்கு பெட்டியில் மூன்று லட்சத்து 50 ஆயிரம் பணம் இருப்பது போன்று காட்டப்படுகிறது.
அப்போது மணியும் விஷ்ணுவும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அதில் மணி விஷ்ணுவிடம் திடீர்னு என்ன வேணாலும் ட்விஸ்ட் நடக்கலாம் பெட்டியில் 20 லட்சம் திடீர்னு வச்சுட்டாங்கனா என்ன பண்ணுவ என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். அதைத்தொடர்ந்து அடுத்த கட்டத்தில் விஷ்ணு, மணி, தினேஷ் மூவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர்.
அப்போது மணி ஒரு பத்து லட்சம் வந்துச்சுன்னா நான் எடுத்து விடுவேன் என்று சொல்ல அதற்கு தினேஷ் யாரும் எடுக்க மாட்டாங்க நம்ம நல்லா உசுப்பேத்தி விட்டு இருக்கோம். அதனால எவனும் எடுக்க மாட்டான் என்று சொல்லி சிரித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் தற்போது சில தகவல்கள் பரவி வருகிறது.

அதாவது விசித்திரா 12 லட்சம் பணம் வந்ததும் பெட்டியை தூக்கிக்கொண்டு கிளம்பிவிட்டார் என்று கூறப்படுகிறது. அது போல இன்னும் ஒரு சிலர் மாயா தான் பணப்பெட்டியை தூக்கிக்கொண்டு கிளம்பி இருக்கிறார் அவருக்கு ஏற்கனவே நம்ம டைட்டில் வின்னராக மாட்டோம் என்பது தெரிந்து விட்டது. அதனால் கிடைத்த வரைக்கும் லாபம் என்று பணத்தோடு கிளம்பி விட்டார் என்று கூறி வருகிறார்கள்.
ஆனால் அது எந்த அளவிற்கு உண்மை என்று இன்னும் தெரியவில்லை. அதே நேரத்தில் பணப்பெட்டி டாஸ்கில் பணத்தை எடுக்க வேண்டும் என்று பெரிய அளவில் யாருமே விருப்பம் காட்டாமல் இருக்கிறார்கள். என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications