வீட்டுக்குள் வந்த மர்ம நபர்.. பணப்பெட்டியை தூக்கியதும் காலில் விழுந்த பூர்ணிமா.. பிக் பாஸ் வைத்த செக்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் ஜனவரி 5ஆம் தேதிக்கான முதல் ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. இன்று பிக் பாஸ் வீட்டில் 95 வது நாள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது பூர்ணிமா பிக் பாஸில் இருந்து வெளியேறி இருக்கிறார்.ஏற்கனவே பிக் பாஸ் வீட்டிற்குள் பணப்பெட்டி டாஸ்க் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் அதில் 16 லட்சம் ரூபாய் பணத்தை தூக்கிக்கொண்டு பூர்ணிமா தான் வெளியேற போவதாக முடிவு எடுத்து இருக்கிறார்.
ஆனாலும் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறுவதற்கு முன்பு பூர்ணிமா சக போட்டியாளர்களின் கால்களில் விழுந்து எதிர்பாராத வார்த்தையை சொல்லி இருக்கிறார். என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. இன்னும் ஒரு சில நாட்களில் இந்த சீசன் முடிவுக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக பணப்பெட்டி டாஸ்க் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆரம்பத்தில் ஒரு லட்சத்தோடு தொடங்கிய இந்த டாஸ்க் தற்போது 16 லட்சத்தோடு முடிவுக்கு வந்திருக்கிறது.

ஒவ்வொரு சீசனிலும் பணபெட்டி டாஸ்க் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதுபோல இந்த சீசனில் யார் இந்த டாஸ்க்கில் பணத்தை தூக்கிக்கொண்டு வெளியேறப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. ஏற்கனவே இந்த சீசனில் 8 போட்டியாளர்கள் மட்டுமே இந்த வாரத்தில் உள்ளே இருக்கின்றனர். அதில் விஷ்ணு நேரடியாக பைனலுக்கு போகும் டிடிஎஃப் டாஸ்கை வெற்றி பெற்று இருக்கிறார்.
அதனால் அவர் போக மீதமுள்ள ஏழு போட்டியாளர்களும் இந்த வார எலிமினேஷனில் இருக்கின்றனர். அந்த நிலையில் இந்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்றும் கூறப்பட்டது. இதனால் யாரு பணபெட்டியை தூக்கிக்கொண்டு வெளியே வர போகிறார்களோ என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் இருந்தது.
ஆனால் ஆரம்பத்தில் இருந்து இந்த டாஸ்க்கில் யாரும் பணத்தை தூக்க போறது இல்லை என்கிற மாதிரியே உள்ளே போக்கு காட்டி கொண்டு இருந்தனர். ஆனால் நேற்று பூர்ணிமா தன்னுடைய முடிவை திடீரென்று மாற்றியிருக்கிறார். ஏற்கனவே தான் 15 லட்சத்துக்கு மேலே பணம் வந்தால் யோசிக்கலாம் என்று சொல்லி இருந்த நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில் மர்ம நபர் ஒருவர் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து 16 லட்சம் ரூபாய்க்கான கார்டை வைத்துக்கொண்டு போகிறார்.
அதை பார்த்ததும் இன்ப அதிர்ச்சியான பூர்ணிமா நான் பணத்தை தூக்கிக்கொண்டு போவதற்கு ரெடியாகிவிட்டேன் என்று அங்கிருந்த எல்லோரிடமும் சொல்ல அதை கேட்டு சந்தோஷப்பட்டு விசித்திரா உண்மையாகவா...? உண்மையாகவா..? என்று மீண்டும் மீண்டும் கேட்டு உறுதிப்படுத்தி கொண்டார். ஏற்கனவே நேற்று நடந்த 24 மணி நேர லைவில் பூர்ணிமா தன்னுடைய பொருள்களை எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டிருந்ததை பார்த்ததுமே விசித்திராவிற்கு பூர்ணிமா வெளியே போவதற்கு முடிவெடுத்துவிட்டார் என்பது புரிந்து இருக்கும்.

ஆனால் இன்று வெளியான ப்ரோமோவில் தான் நம்பாதது போலவே கேட்டுக் கொண்டிருக்கிறார். அதை தொடர்ந்து பணத்தை கையில் தூக்கி, பூர்ணிமா அங்கு இருந்த எல்லா போட்டியார்களிடமும் நான் உங்களை அட்டாக் பண்ணுவதற்கு சோ சாரி என்று சாஸ்டாங்கமாக காலில் விழுந்து மன்னிப்பு கேட்டிருக்கிறார். அதை தொடர்ந்து காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரம் இது என்ற பாடலுக்கு மொத்த போட்டியாளர்களோடு சேர்ந்து பெட்டியை தூக்கியப்படியே பூர்ணிமா டான்ஸ் ஆடி இருந்தார்.
இப்படியான ப்ரோமோ வெளியாகியிருக்கும் நிலையில் பூர்ணிமா எடுத்த முடிவு சரியானது.. ஒரு வழியாக பூர்ணிமா நல்ல முடிவு எடுத்திருக்கிறார். காரணம் இந்த வாரத்தில் எப்படியும் பூர்ணிமாவை வெளியே தூக்கி இருப்பார்கள். அதற்கு முன்பு தனது கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி இருக்கிறார் என்று பலரும் பாராட்டி வருகிறார்கள். இது பற்றி உங்களுடைய கருத்து என்ன என்பதை பற்றி சொல்லிட்டு போங்க.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications