பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் பெரிய பிரச்சனை.. இதுக்கு முடிவே கிடையாதா? புது கூட்டணியால் புலம்பும் பிரபலம்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் ஜனவரி ஒன்பதாம் தேதிக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ஏற்கனவே பிக் பாஸ் வீட்டில் இருந்து எலிமினேஷன் ஆகி வெளியே போன போட்டியாளர்கள் உள்ளே வந்திருக்கின்றனர். அதிலும் முதல் போட்டியாளராக அனன்யா மூன்றாவது முறையாக பிக் பாஸ் வீட்டிற்குள் வந்திருக்கிறார்.
இதனால் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்களின் மனதில் சஞ்சலம் ஏற்படுகிறது. வெளியே தங்களுடைய கேரக்டர் எந்த மாதிரி போய்க்கொண்டிருக்கிறதோ என்பதை தெரிந்து கொள்வதற்காக உள்ளிருக்கும் போட்டியாளர்கள் முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர்.
அதோடு வெளியே சென்ற போட்டியாளர்கள் மீண்டும் வீட்டிற்குள் வந்து நடந்து கொள்ளும் விதத்தைப் பார்த்து மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் பிரச்சனை வெடிக்க தொடங்கி இருக்கிறது. அதிலும் போட்டியாளர்கள் இரண்டு அணியாக மீண்டும் பிரிய தொடங்கி இருக்கின்றனர். என்ன நடந்தது என்பதை விரிவாக பார்ப்போம்.

அந்த வகையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி கடைசி வாரத்தில் வந்திருக்கிறது. இன்னும் ஒரு சில நாட்களில் இந்த சீசன் முடிவுக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் ஏற்கனவே பிக் பாஸ் வீட்டில் இருந்து எலிமினேஷன் ஆகி வெளியே போன போட்டியாளர்கள் மீண்டும் உள்ளே வந்திருக்கின்றனர். இந்த சம்பிரதாயம் ஒவ்வொரு சீசனிலும் நடந்து கொள்வதுதான்.
கடைசி வாரத்தில் வெளியே சென்ற போட்டியாளர்கள் எல்லோரும் மீண்டும் உள்ளே வந்து ஜாலியாக நிகழ்ச்சியை கொண்டு போய்க் இருப்பார்கள். ஆனால் இந்த முறை வெளியே சென்று போட்டியாளர்கள் உள்ளே வந்தது மீண்டும் பூகம்பம் வெடிக்க தொடங்கி இருக்கிறது. அதுவும் இன்று வெளியான ப்ரோமோவில் அனன்யா இரவு நேரத்தில் வீட்டிற்குள் வந்திருக்கிறார்.
வந்ததும் அர்ச்சனா மற்றும் மாயா இருவரும் படுத்து இருக்கும் பெட்டில் அமர்ந்து அவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். அதைத் தொடர்ந்து கிச்சனில் ஆண்கள் அணியினர் சமையல் செய்து கொண்டிருக்கும் போது அங்கே அனன்யா வர அவரிடம் வெளியே என்ன மாதிரி நிலைமை போய்க்கொண்டிருக்கிறது என்பதை பற்றி தெரிந்து கொள்வதற்காக விஷ்ணு கேள்வி கேட்கிறார்.
அதற்கு அனன்யா எதையும் பதில் சொல்லாமல் சமாளிக்கிறார். இதனால் விஷ்ணு அதிர்ச்சி அடைகிறார். அதோடு வந்ததும் மாயா மற்றும் அர்ச்சனா அணியில் சேர்ந்து கொண்டதை பார்த்ததும் இனம் இனத்தோட தானே சேரும் வெளியே போனாலும் உள்ளே வந்ததும் மீண்டும் புதிய கூட்டணியை தொடங்கி விட்டாங்க போல மேடம் என்று அனன்யாவை ஜாடையாக மணி பேசிக் கொண்டிருக்க, அதற்கு விஷ்ணுவும் சிரித்துக் கொண்டிருக்கிறார்.
இதனால் இன்று இதை வைத்து அடுத்த பிரச்சனை வெடிக்க போகிறது என்று தெரிகிறது. அதே நேரத்தில் நேற்று பிக் பாஸ் "பிள்ளையும் கிள்ளிவிட்டு தொட்டிலும் ஆட்டி விடுவது போல" ஒரு டாஸ்கை வைத்து அர்ச்சனா மற்றும் தினேஷுக்கு இடையே பிரச்சனை வர வைத்து இருக்கிறார்.
உள்ளிருக்கும் போட்டியாளர்கள் தாங்கள் அடுத்தவர்களை விட எவ்வளவு சிறந்தவர்கள் என்பதை சொல்ல சொல்லி கடைசி வாரத்தில் கூட புகைச்சலை ஏற்படுத்தும் விதமாக பிக் பாஸ் கொளுத்திப் போட அதனால் இதுவரைக்கும் ஒரே அணியாக இருந்து வந்த அர்ச்சனா மற்றும் தினேஷ் பிரிந்து இருக்கின்றனர். இனி என்ன நடக்கப்போகுது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications