நிக்சனிடம் எப்படி “அந்த” வார்த்தை சொல்லலாம்.. அர்ச்சனாவிடம் கேள்வி கேட்ட வினுஷா பிக் பாஸ் வைத்த செக்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் ஜனவரி 9ஆம் தேதிக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த வினுஷா அர்ச்சனாவிடம் தன்னைப் பற்றி நிக்சனிடம் அர்ச்சனா பேசியது குறித்து கேள்வி எழுப்பி இருக்கிறார். அதற்கு அர்ச்சனா அதிர்ச்சியாகி இருக்கிறார்.
வைல்ட் கார்டு என்ட்ரியாக உள்ளே வந்த அர்ச்சனா நிக்சனிடம் வினுஷாவிற்கு ஆதரவாக முதலில் பேசி இருந்தார். பிறகு கேமரா முன்பு மன்னிப்பு கேட்க சொல்லி அட்வைஸ்சும் கொடுத்து இருந்தார். அது குறித்து இப்போது வினுஷா கேள்வி எழுப்பி இருக்கிறார்.
இந்த நிலையில் நிக்சன் சின்ன பையன் அதனால அவனுக்கு நான் அட்வைஸ் கொடுத்தேன் என்று அர்ச்சனா சொல்ல அதற்கு வினுஷா அதை ஏற்றுக் கொள்ளாமல் மேலும் மேலும் கேள்வி எழுப்பி இருக்கிறார். இதனால் இவர்கள் இருவருக்கும் விவாதம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்ப்போம்.

அந்த வகையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி இறுதி வாரத்தில் வந்திருக்கிறது. இன்னும் ஒரு சில நாட்களில் இந்த சீசன் முடிவுக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் ஏற்கனவே பிக் பாஸ் வீட்டில் இருந்து எலிமினேஷன் ஆகி வெளியே போயிருந்த போட்டியாளர்கள் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து கொண்டிருக்கின்றனர்.
அந்த வகையில் இப்போது வெளியான ப்ரோமோவில் வினுஷா பிக்பாஸ் வீட்டிற்குள் வந்திருக்கிறார். அதாவது இரண்டாவது ப்ரோமோவில் வினுஷாவை பார்த்ததும் வீட்டில் இருந்த போட்டியாளர்கள் எல்லோரும் வரவேற்று இருந்தனர். அப்போது வினுஷா விஷ்ணுவிடம் முயல் டாஸ்க்கில் நீ நன்றாக விளையாடினாய் என்று பாராட்டி இருந்தார்.
ஏற்கனவே காலையில் இருந்து நமக்கு ஆதரவா பேசுற மாதிரி ஒரு போட்டியாளர் வரமாட்டாரா என்று விஷ்ணு, தினேஷ், மணி மூவரும் காத்திருக்கின்றனர். அந்த வகையில் வினுஷா மட்டும்தான் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த நிலையில் அவர்களிடம் நல்லபடியாக பேசியிருந்தார். அப்போது கூட தினேஷ் வினுஷாவிடம் தம்பி உனக்கு போன் பண்ணுனா என்று நிக்சனை குறிப்பிட்டு கேள்வி கேட்டிருந்தார்.
அதற்கு ஆமா எனக்கு போன் பண்ணுனான். ஆனா நான் 70 கேமரா முன்னாடி பேசினதுக்கு 70 கேமரா முன்னாடியே விளக்கம் கொடுக்கலாம்னு சொல்லி இருக்கிறேன். உள்ளே வந்த பிறகு பார்த்துக்கலாம் என்று அதிரடியாக பேசியிருந்தார். அதை தொடர்ந்து இப்போது மூன்றாவது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் வினுஷா அர்ச்சனாவிடம் பேசிக் கொண்டிருக்கிறார்.
அப்போது அர்ச்சனாவிடம் உங்களுக்கு ஒரு பிரச்சனைன்னு வரும்போது நீங்க என் பெயரை யூஸ் பண்ணி நிக்சனை விக்டம்மா டார்கெட் பண்ணுனீங்க... இந்த விஷயத்தை நீங்க அப்பவே பண்ணி இருக்கலாமே? என்று எனக்கு தோணுச்சு என்று வினுஷா சொல்ல அதற்கு அர்ச்சனா அது சொன்னா அவனுக்கு கோபம் வரும்னு எனக்கு தெரியும். நேத்து நீ என்னை கோபப்படுத்தினாலா அதனால உன்னை நான் கோபப்படுத்துறேன்னு சின்ன புள்ளத்தனமா நான் அப்படி பண்ணுனேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

அதற்கு வினுஷா எனக்கு நீங்க பண்ணுனது புடிக்கல... நீங்க வீட்டுக்குள் வந்ததும் நிக்சனிடம் நீ கேமரா முன்பு சாரி சொல்லிவிடு மக்கள் அதை மறந்துருவாங்கன்னு சொன்னீங்க என்று கேட்க...அதற்கு அர்ச்சனா அவன் பயந்துட்டான் சின்ன பையன் என்று சொல்கிறார். அதற்கு வினுஷா ஏங்க எனக்கும் அவனுக்கும் ஒரு வயசு தான் வித்தியாசம் என்று சொல்ல, அதற்கு அதை விடுங்க அது ஓவர் என்று அர்ச்சனா பேசுகிறார். அதற்கு நீங்க ஓவர்ன்னு சொல்லிட்டீங்க ஆனா அங்க விட்டம்மாக இருக்கிறது நான் தானே என்று வினுஷா பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications