தமிழால் ஜோவிகாவுக்கு வந்த வினை.. பிரதீப்பை வைத்து நடந்த அவமானம்.. ட்ரோல் செய்யும் ரசிகர்கள்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக நடிகை வனிதாவின் மகளான ஜோவிகா விஜயகுமார் கலந்து கொண்டிருக்கிறார்.
இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் நடந்து கொண்ட விதம் குறித்து இவரை அவமானப்படுத்துவதற்காக பிக் பாஸ் பிரதிப்பை வைத்து புது கேம் விளையாடி இருக்கிறார்.
அத்தோடு ஜோவிகா ஏற்கனவே பேசியதற்கும் இப்போது இருக்கும் நிலைமையை பார்த்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

அந்த வகையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கப்படுவதற்கு சில மாதங்களுக்கு முன்பே நடிகை வனிதாவின் மகள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார் என்று வதந்திகள் பரவி வந்தது. அதுபோலவே கடைசியில் ஜோவிகா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்தார். இந்த நிலையில் நிகழ்ச்சி தொடங்கிய ஒரு வாரத்திற்குள் ஜோவிகாவிற்க்கும், விசித்திராவிற்கும் இடையே பெரும் சண்டையும் வெடித்திருந்தது.
இது இணையத்தில் பெரும் விவாத பொருளாக மாறி இருந்தது. அப்போது ஜோவிகா தனக்கு படிப்பு வரவில்லை என்பதால் ஒன்பதாம் வகுப்புடன் நின்று விட்டேன் என்று பேசி இருந்தார். அதுமட்டுமல்லாமல் படிப்பு சம்பந்தமான எந்த விஷயத்தை மற்ற போட்டியாளர்கள் யாரும் பேச வேண்டாம் என்று அப்போது அவர் உத்தரவு விட்டிருந்தார்.
இது காரணமாக பல பிரபலங்கள் பேசிய வீடியோக்கள் அந்த நேரத்தில் ட்ரெண்டானது. அதுபோல பொதுமக்களும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இப்படியாக இருக்கும் நிலையில் சமீபத்தில் பிக் பாஸ் டாஸ்க் லெட்டர் ஒன்றை வைத்து உங்களில் யாராவது ஒரு ஆள் கன்ஸ்ட்ரக்ஷன் ரூமுக்குள் சென்று பாருங்கள் என்று கூறி இருக்கிறார்.
அப்போது ஜோவிகா எல்லாரையும் விட முந்தி கொண்டு முதல் ஆளாக கன்ஃபெஷசன் ரூமுக்குள் நுழைகிறார். அப்போது அங்கு டாஸ்க் லெட்டரை எடுத்துப் பார்த்ததுமே ஐயோ எனக்கு தமிழ் படிக்க தெரியாது என்று கூறி விட்டு அதை ஒவ்வொரு எழுத்துக்களாக எழுத்து கூட்டி படித்து விட்டு மீண்டும் எனக்கு தமிழ் படிக்க தெரியாது பிக் பாஸ் அவசரப்பட்டு வந்து விட்டேன் என்று பிக் பாஸ் இடம் மன்னிப்பு கேட்டு இருக்கிறார்.
அப்போது பிக் பாஸ் சிறிது நேரம் கழித்து பிரதீப்பை அழைத்து உள்ளே போய் ஜோவிகாவை வெளியே கூட்டிட்டு வாங்க என்று கூறியிருந்தார். அதைத் தொடர்ந்து பிரதீப் ஜோவிகாவை வெளியே அழைத்து வந்தார். இது குறித்து வீடியோவை பகிர்ந்த நெட்டிசன்கள் பிரதீப்பை வைத்து ஜோவிகாவை பிக் பாஸ் கலாய்த்து விட்டார். தாய் மொழியே தெரியவில்லை.
இதற்குத்தான் கல்வி முக்கியம் என்று சிலர் கமெண்ட் வெளியிட்டு வருகின்றனர். அதே நேரத்தில் ஏற்கனவே லச்சரி பட்ஜெட் டாஸ்க் விஷ்ணு சொன்ன கணக்கை அப்படியே சரி என்று ஏற்றுக் கொண்டதும் பெரும் விவாதமாக இருந்தது. இப்போது டாஸ்க் லெட்டரை படிக்க தெரியாமல் இருப்பது பற்றியும் பலர் கலாய்த்து கொண்டிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications