பிக் பாஸ் ஜோவிகாவை விடுங்க.. கல்வி குறித்து ஓப்பனாக பேசிய நடிகர் தனுஷ்.. இத்தனை அவமானங்கள் இருக்காம்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் நடிகை விசித்ரா அடிப்படை கல்வி முக்கியம் என்று சொன்னதற்கு ஜோவிகா தன்னால் படிக்க முடியவில்லை. அதனால் நான் படிக்கவில்லை. படிப்பு வரவில்லை என்பவர்களை கட்டாயப்படுத்தாதீர்கள் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் படிப்பு முக்கியம் என்று ஒரு தரப்பினரும் படிப்பு முக்கியம் இல்லை, திறமைகள் இருந்தால் போதும் அவர்கள் முன்னுக்கு வந்து விடலாம் என்றும் இன்னொரு தரப்பினரும் விவாதம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் தனுஷ் படிப்பின் முக்கியத்துவம் குறித்தும் தான் படிக்காததால் பட்ட அவமானங்கள் குறித்தும் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வகையில் தற்போது விசித்திரா அடிப்படை கல்வி முக்கியம் குறைந்தது பத்தாம் வகுப்பு வரைக்குமாவது எல்லோரும் படித்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லி இருந்தது தவறு என்று ஒரு தரப்பினர் இணையத்தில் விவாதம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். இன்னும் ஒரு தரப்பினர் அதை எப்படி தவறாக முடியும். படிப்பு இல்லாமல் எவ்வளவுதான் சொத்து சுகம் இருந்தாலும் அவர்களுக்கு உரிய மரியாதையும் கிடைக்காது. அவர்களால் ஜெயிக்கவும் முடியாது என்று கருத்து கூறி வருகிறார்கள்.
இந்த நிலையில் தென் இந்திய சினிமாவில் முக்கிய நட்சத்திரமாக இருக்கும் நடிகர் தனுஷ் படிப்பு குறித்து பேசிய வீடியோ தற்போது இணையத்தில் ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள். அதே நேரத்தில் நடிகர் தனுஷ் ஒரு நடிகராக மட்டுமல்லாமல் பாடல் ஆசிரியராகவும், இயக்குனராகவும் பன்முக திறமை கொண்டவராக இருக்கிறார். சமீபத்தில் அவர் கேப்டன் மில்லர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் எல்லாம் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷனுக்கான வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தனுஷ் பேசிய வீடியோ இப்போது வைரலாகி கொண்டு இருக்கிறது.
ஏற்கனவே நீயா நானா கோபிநாத் கல்வி குறித்து பேசிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வந்த நிலையில் தற்போது தனுஷ் பேசிய வீடியோவும் வைரல் ஆகி வருகிறது. அதில் தனுஷ் சினிமாவிற்கு வந்த புதுசில் ஆங்கிலம் சரளமாக பேச தெரியாதாம். ஆனால் இப்போது அவர் பழமொழிகளில் சரளமாக பேசி வருகிறார். ஆனாலும் இவர் பள்ளி படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு நடிக்க வந்ததால் அவரால் படிக்க படிப்பை தொடர முடியாமல் போயிருக்கிறது. இதனால் தன்னால் பட்டப்படிப்பு படிக்க முடியவில்லை என்று இவர் பல நாட்கள் நினைத்து வருந்தி இருந்தாராம்.
நட்சத்திர ஓட்டல் மற்றும் நிகழ்ச்சிகள் என வெளியே எங்கு செல்லும்போதும் அங்கு இருப்பவர்கள் பலர் ஆங்கிலத்தில் சரளமாக பேசுவார்களாம். ஆனால் தனுஷால் அந்த இடத்தில் ஆங்கில வார்த்தையால் பேச முடியாமல் நிற்பாராம். அப்போது நாம படிக்கவில்லையே என்று இவருக்குள் ஒரு தாழ்வு மனப்பான்மையையும் ஏற்பட்டிருக்கிறது. அதேபோல இவர் படிக்கவில்லை என்பதை சிலர் சொல்லியும் காட்டி இருக்கிறார்கள். இது பற்றி தனுஷ் பல பேட்டிகளிலும் பேசி இருக்கிறார்.

அதனால் அடிக்கடி இவர் ரசிகர்களிடம் தயவு செய்து அட்லீஸ்ட் ஒரு டிகிரியாவது படிச்சிடுங்க என்று பேட்டியில் கேட்டுக் கொண்டிருந்தார். அதுமட்டுமல்லாமல் தனுஷ் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் குழந்தைகளிடம் படங்களில் ஹீரோக்கள் படிக்காமல் இருப்பார்கள் ஆனால் நிஜத்தில் படித்தால் தான் ஹீரோ எனவே நன்கு படியுங்கள் அந்த என்று இவர் அட்வைஸ் பண்ணிய வீடியோவை ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications