விசித்ராவோடு சண்டையை விடுங்க.. ஜோவிகா பற்றி வனிதா தூக்கிப்போட்ட குண்டு.. அதுவும் 2 படத்திலாமே

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமாகி இருக்கும் நடிகை வனிதாவின் மகள் ஜோவிகா பற்றி வனிதா சில தகவல்களை பகிர்ந்து இருக்கிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் ஜோவிகா மற்றும் விசித்ரா இருவருக்கும் இடையே அடிப்படைக் கல்வி விஷயத்தில் கருத்து மோதல்கள் ஏற்பட்டு இருக்கிறது.

bigg boss tamil season 7 Jovika committed 2 movies

அதே நேரத்தில் ஜோவிகாவுக்கு ஆதரவாக நடிகர் கமல் பேசியிருக்கும் நிலையில் ஜோவிகா இரண்டு திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார் என்று வனிதா தெரிவித்திருக்கிறார். அது பற்றி பார்க்கலாம்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி ரசிகர்களின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஒவ்வொரு நாளும் புது புது பிரச்சனைகள் இந்த நிகழ்ச்சியில் நடந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் சில தினங்களாகவே நடிகை விசித்ரா மற்றும் ஜோவிகாவிற்கு இடையே அடிப்படை கல்வி குறித்த பிரச்சனைகளும் வாக்குவாதங்களும் ஏற்பட்டு இருக்கிறது.

bigg boss tamil season 7 Jovika committed 2 movies

அடிப்படைக் கல்வியில் முக்கியத்துவத்தைப் பற்றி விசித்திரா பேசியிருந்ததற்கு ஜோவிகா எனக்கு படிப்பு வரவில்லை. அதனால் தான் நான் படிப்பை விட்டு விட்டு வந்தேன் என்று கூறி பரப்பரப்பை ஏற்படுத்தி இருந்தார். இதற்கு பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் சக போட்டியாளர்களும் அவருக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் நேற்று எபிசோடில் நடிகர் கமல்ஹாசன் விசித்ரா மற்றும் ஜோவிகா இருவருக்கும் தகுந்தது போன்று பஞ்சாயத்து செய்து தீர்ப்பை வழங்கியிருந்தார்.

ஜோவிகாவின் பேச்சுக்கு சமூக வலைத்தளத்தில் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அது குறித்த விவாதங்களும் அதிகமாக இணையத்தில் இந்த நிலையில் ஜோவிகா பேசியது சரிதான் என்று ஜோவிகாவின் பேச்சுக்கு நடிகை வனிதா முழு ஆதரவு தெரிவித்து வருகிறார். அதோடு ஜோவிகா பற்றி சில சுவாரசியமான தகவல்களையும் பகிர்ந்திருக்கிறார்.

அந்த வகையில் ஜோவிகாவை கமல்ஹாசன் முதல் எபிசோடில் டெக்னீசியன் என்று சொன்னதை சுட்டிக்காட்டி அப்போது ஜோவிகா இயக்குனர் பார்த்திபனிடம் கடந்த சில மாதங்களாக உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார். தன்னிடம் இரண்டு கார்கள் இருந்தாலும் ஜோவிகாவை மெட்ரோ ரயிலில் தான் பார்த்திபன் அலுவலகத்திற்கு அனுப்புவேன் என்றும் அப்படி போனால் தான் உதவி இயக்குனர்களின் கஷ்டம் என்னவென்று அவளுக்கு புரியும் என்று தான் அப்படி நடந்து கொள்வதாகவும் கூறி இருந்தார்.

அத்தோடு ஜோவிகா பற்றிய முக்கிய ரகசியத்தையும் அந்த பேட்டியில் பேசியிருக்கிறார். அதாவது ஜோவிகா பிக்பாஸ் செல்லும் முன்பே இரண்டு படங்களில் ஹீரோயினியாக நடிக்க கமிட்டாகிவிட்டார். அதில் ஒரு தமிழ் திரைப்படமும், ஒரு தெலுங்கு திரைப்படத்தில் நடிக்க கமிட்டானார். அதற்கு பிறகு தான் அவர் பிக் பாஸ் சென்றுள்ளார். ஆனால் இதை பிக் பாஸ் வீட்டிற்குள் ஜோவிகா சொல்லவில்லை. ஆனால் நான் சொல்வது எனக்கு பெருமையாக தான் இருக்கிறது என்று வனிதா அதில் பேசியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+