பிக் பாஸ்7: இது என்ன தமிழுக்கு வந்த சோதனை.. ஜோவிகா எழுதிய வார்த்தை.. வனிதா கொடுத்த விளக்கம்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் ஜோவிகா தன்னுடைய பெயரை தமிழில் எழுதிய விதத்தைக் குறித்து நெட்டிசன்கள் கலாய்த்து கொண்டிருக்கின்றனர்.
சில தினங்களுக்கு முன்பு தமிழ் என்பதற்கு பதிலாக ஜோவிகா தாமில் என்று எழுதி இருந்தார். இப்போது ஜோவிகா என்பதற்கு பதிலாக ஜோபவிகா என்று எழுதி இருக்கிறார்.

அதே நேரத்தில் பிக் பாஸ் வீட்டிற்குள் ஜோவிகா அதிகமாக தூங்கும் காட்சிகள் வெளியே காட்டப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் அது குறித்து வனிதா விளக்கம் கொடுத்திருக்கிறார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி இதுவரைக்கும் இல்லாத வகையில் அதிகமான இளம் போட்டியாளர்களை கொண்டுள்ளது. இந்த சீசனில் ரசிகர்கள் அதிகமாக கவர வேண்டும் என்பதற்காக அதிகமாக ரசிகர்களுக்கு பிரபலமான போட்டியாளர்கள் மற்றும் சர்ச்சையான போட்டியாளர்களை களம் இறக்கி வைத்திருக்கின்றனர். அதில் நடிகை வனிதாவின் மகளான ஜோவிகாவும் ஒருவர்.
இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார் என்ற தகவல் சில மாதங்களாகவே இணையத்தில் வெளியாகி கொண்டிருந்தது. அதை உறுதிப்படுத்தும் வகையில் வனிதாவும் அவ்வப்போது சில புகைப்படங்களையும் சில கேப்ஷன்களையும் கொடுத்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜோவிகா கலந்து கொண்டதும் அவருக்கு அதிகமான ரசிகர்கள் ஆதரவு கொடுத்து வந்தனர்.
பல ஆர்மி பேஸ்களும் ஜோவிகாவிற்கு தொடங்கப்பட்டது. இந்த நிலையில் தான் முதல் வாரத்திலேயே விசித்ரா மற்றும் ஜோவிகாவிற்கு இடையே படிப்பு விஷயத்தில் பெரிய அளவில் பிரச்சனை வெடித்தது. அப்போது ஜோவிகாவை தமிழில் எழுதி காட்டு என்று விசித்திரா சொல்ல, எனக்கு தமிழ் படிக்க தெரியாது அதனால்தான் நானே ஸ்கூலுக்கு போகவில்லை என்று ஜோவிகா கூறி இருந்தார். அதோடு படிப்பு மட்டும்தான் முக்கியம் என்று இல்லை.
எனக்கு வேறு திறமை இருக்கிறது. என்னுடைய திறமையால் நான் முன்னேறுவேன் என்று அப்போது ஜோவிகா வீரவசனம் பேசியிருந்தார். இதனாலேயே சமூக வலைத்தளத்தில் அதிகமான கருத்து மோதல்கள் ஏற்பட்டது. இப்படியான நிலையில் சில தினங்களாகவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜோவிகா அதிகமாக தூங்கும் காட்சிகள் மட்டும் தான் 24 மணி நேரங்களில் மட்டுமல்லாமல் எபிசோடுகளின் கூட காட்டப்படுகிறது.
அதிலும் ஜோவிகாவிற்கு அதிகமாக குளோசப் வைத்து அவர் தூங்குவதை ஒரு மணிநேரம் எபிசோடில் காட்டுவதால் அதிகமான ரசிகர்கள் அவரை இதை சொல்லியே கலாய்த்து கொண்டிருக்கின்றனர். அதோடு சில தினங்களுக்கு முன்பு ஜோவிகா ஒரு தோசை கல்லில் தமிழ் என்று எழுதுவதற்கு பதிலாக தாமில் என்று எழுதியிருந்தார். இதுவோ பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருந்தது. அதைத் தொடர்ந்து இப்போது தன்னுடைய பெயரை தமிழில் எழுதுவதற்கு முயற்சி செய்கிறார்.

அதில் ஜோவிகா என்பதற்கு பதிலாக ஜோபவிகா என்று எழுதி வைத்திருக்கிறார். இதை பார்த்த நெட்டிசன்கள் இதுதான் தமிழுக்கு வந்த சோதனையா? என்று நொந்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி ரிவியூ செய்து கொண்டிருக்கும் வனிதாவிடம் ரசிகர்கள் உங்கள் மகள் அதிகமாக நிகழ்ச்சியில் தூங்குவது போன்ற காட்சிகளே வந்து கொண்டிருக்கிறது என்று கேள்வி கேட்டு இருக்கின்றனர்.
அதற்கு வனிதா, ஆமாம் ஜோவிகா இப்போ ரொம்பவே மன உளைச்சலில் இருக்கிறார். அந்த வீட்டிற்குள் ரொம்ப டென்ஷன் ஏற்பட்டு விட்டால் தன்னாலே தூக்கம் வந்துவிடுவது இயல்புதான். அதை நானே அனுபவித்து இருக்கிறேன். ஜோவிகாவிற்கு எனக்கு முகத்தில் அடிபட்டு இருப்பது உணர்வு ரீதியாக தெரிந்து இருக்கிறது. அதனால் தான் ஜோவிகா அமைதியாக இருக்கிறார். அதனால் ஜோவிகாவிற்கு தூக்கம் வருகிறது என்று பேசி இருக்கிறார். தற்போது இந்த வீடியோவை ரசிகர்கள் இணையத்தில் கலாய்த்து கொண்டிருக்கின்றனர்.
-
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
ஒருபுறம் அஜித் அம்மா மறைவு... மறுபுறம் அனாதையாக விடைபெற்ற சத்யேந்திரா! சமூகத்தின் இரட்டை முகமா? -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications