கேப்டன் ஆகாமலே வெளியேறும் ஜோவிகா? பிச்சை போட்டா வேணுமா? வனிதா வெளியிட்ட திடீர் வீடியோ
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் இந்த வாரம் வாக்குகளின் அடிப்படையில் ஜோவிகா வெளியேறப் போகிறார் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
ஜோவிகா இதுவரைக்கும் பிக் பாஸ் வீட்டிற்குள் பலமுறை தலைவர் பதவிக்கு போட்டியிட்டும் கடைசி வரை வீட்டில் தலைவராக இருக்கவில்லை.

இந்த நிலையில் ஜோவிகாவின் அம்மாவான நடிகை வனிதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போது பேசிய வீடியோ ஒன்றை பகிர்ந்து இருக்கிறார்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் நடிகை வனிதாவின் மகளான ஜோவிகா அறிமுகம் ஆகி இருக்கிறார். இதற்கு முன்பு ஜோவிகா பிக்பாஸ் வீட்டிற்குள் வனிதா போட்டியாளராக இருக்கும்போது உள்ளே வந்திருந்தார். அதை தொடர்ந்து இப்போது தானே போட்டியாளராக வந்திருக்கிறார். இந்த நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே வனிதாவின் மகள் ஜோவிகா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார் என்ற ரகசியம் லீக் ஆகி இருந்தது.
அதை நிரூபிக்கும் வகையாக அடிக்கடி வனிதாவும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில வீடியோக்கள் புகைப்படங்களையும் வெளியிட்டுக் கொண்டிருந்தார். இப்படியான நிலையில் ஆரம்பத்தில் ஜோவிகா பிக்பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகமானதும் அதிகமான வரவேற்பு இருந்தது. அதிலும் முதல் வாரத்திலேயே விசித்ராவோடு ஏற்பட்ட சண்டையில் அதிகமான இளைஞர்கள் ஜோவிகாவிற்கு சப்போர்ட் செய்து கொண்டிருந்தனர்.
பல பிரபலங்களும் கூட திறமை இருக்கிறது, அது போதும். அதனால் படிப்பு வேண்டும் என்று இளம் தலைமுறையினரை கொடுமைப்படுத்த கூடாது என்றெல்லாம் தத்துவம் பேசிக் கொண்டிருந்தனர். அதைத்தொடர்ந்து பிரதீப் உடைய வெளியேற்றத்தின் போது பிரதீப்புக்கு எதிராக மாயா கேங்கோடு சேர்ந்து ஜோவிகா ரெட் கார்ட் கொடுத்தது அனைத்து ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய வைத்திருந்தது.
அதுபோல பிக் பாஸ் வீட்டிற்குள் ஜோவிகா விளையாடும் விளையாட்டுக்கு தன்னுடைய ரிவியூவில் அடிக்கடி வனிதாவும் தன்னுடைய சப்போர்ட் தெரிவித்து கொண்டு இருப்பார். அதிலும் ஒரு சில நாட்களாக இப்போது ஜோவிகா அதிகமாக தூங்கிக் கொண்டிருக்கும் காட்சிகள் புகைப்படங்களாகவும் வீடியோக்களாகவும் வெளிவர அதை குறித்தும் கூட வனிதா தன்னுடைய ரிவியூவில் விளக்கம் கொடுத்திருந்தார்.
தனக்கு முகத்தில் ஏற்பட்ட தாக்குதல் தன்னுடைய மகளுக்கு உள்ளே இருக்கும் நிலையில் உணர்வு பூர்வமாக புரிந்திருக்கிறது. அதனால் தான் அவள் ஒருவிதமான மன அழுத்தத்தில் இருக்கிறார். அதனால் அவளுக்கு தூக்கம் வருகிறது என்றும் கூறியிருந்தார். அதுபோல பிக் பாஸ் வீட்டிற்குள் அடிக்கடி ஜோவிகா வழுக்கி விழும் வீடியோக்களும் ட்ரெண்டானதை தொடர்ந்து வீட்டிலும் ஜோவிகா எந்த இடத்திலும் நடக்கவே மாட்டார்.
ஜோவிகாவுக்கு ஓடுவதுதான் ரொம்பவே பிடிக்கும். அதனால் கீழே விழுந்து எழுந்தால் தான் அவளுக்கு புத்தி வரும் என்றும் கூறியிருந்தார். இப்படியாக இருந்த நிலையில் இந்த வாரத்தில் ஜோவிகா தான் வாக்குகளின் அடிப்படையில் கடைசி இடத்தில் இருக்கிறார். இதனால் நாளை அவர் வெளியேறப் போகிறார் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் வனிதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போது பேசிய வீடியோ ஒன்றை ஸ்டோரியாக வைத்திருக்கிறார்.
அதில் தர்ஷன் இடம் தான் பேசிய வீடியோ தான் பகிர்ந்து இருக்கிறார். அதில் தர்ஷன் இடம் உனக்கு டைட்டிலை தூக்கி உங்க கையில கொடுத்த மாதிரியும், இதை நீ இவங்களுக்கு தூக்கி கொடுத்த மாதிரியும் பேசிக்கிட்டு இருக்கீங்க. ஃபர்ஸ்ட் ஆஃப் ஆல் உனக்கு பிச்சை போட்டா வேணுமா? இது வந்து சிம்பத்தி ஷோ இல்ல. அக்கா அண்ணன்கிறது மரியாதை கொடுக்கிறது...
அதுக்காக மரியாதை கொடுக்கறதுக்காக விட்டுக் கொடுத்துட்டு போகிறது என்ன கிழக்கு சீமையிலே படமா? கொஞ்சம் செல்பிஷா தான் இருக்கணும் என்று பதிவு வெளியிட்டு இருக்கிறார். இந்த நிலையில் இந்த வீடியோ யாருக்கான பதிவாக இருக்கும் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.












Click it and Unblock the Notifications