ஜோவிகா அப்பா பெயரை எடுத்தது தப்பு.. விஜயகுமார் பெயர் இப்படித்தான் சேர்ந்தது.. வனிதா விளக்கம்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகம் ஆகி இருக்கும் ஜோவிகா பற்றி அவருடைய அம்மாவான நடிகை வனிதா பல தகவல்களை பகிர்ந்து இருக்கிறார்.
அதில் பலர் தன்னுடைய மகள் ஜோவிகா விஜயகுமார் என்று பெயர் வைத்திருப்பதற்கு கேள்வி எழுப்பி வருகின்றனர் என்று அதற்கு விளக்கமும் கொடுத்து இருக்கிறார்.

அதில் தன்னுடைய மகளின் அப்பா பற்றி பலர் கேள்வி எழுப்பி வரும் நிலையில் அது பற்றியும் நடிகை வனிதா அந்த வீடியோவில் பேசியிருக்கிறார். அதைப் பற்றி பார்க்கலாம்.
நடிகை வனிதா விஜயகுமார் சமூக வலைத்தளத்தை பயன்படுத்தும் பலருக்கும் பரிச்சயமானவர்தான். இவர் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகி அதற்குப் பிறகு நடிகர் ராஜ்கிரனோடு ஒரு திரைப்படத்தில் நடித்திருந்தார். ஒரு சில திரைப்படங்களை நடித்துக் கொண்டிருக்கும் போது திருமண வாழ்க்கையில் இணைந்து அதற்கு பிறகு நடிப்பை விட்டு விலகி இருந்தார்
நடிகை வனிதாவின் திருமண வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை திறந்த புத்தகமாக பலருக்கும் தெரிந்ததுதான். நடிகை வனிதா தன்னுடைய முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு அடுத்து சில திருமணங்கள் செய்தது அதற்கு பிறகு காதல் சர்ச்சைகள் என்று அடிக்கடி இணையதளத்தில் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக தன்னுடைய மகள் ஜோவிகாவை கலந்து கொள்ள வைத்திருக்கிறார்.

இந்த நிலையில் ஜோவிகா பிக்பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகமானதிலிருந்து தன்னுடைய கருத்துக்களை தைரியமாக ஒவ்வொரு இடத்திலும் எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் விசித்திரா அடிப்படை கல்வி முக்கியம் என்று பேசி இருந்த நிலையில் தனக்கு படிப்பு வரவில்லை. அதனால் தான் பாதியிலே படிப்பை விட்டு விலகி இருந்தேன் என்று தன்னுடைய கருத்தையும் எடுத்து வைக்க அது தற்போது சமூக வலைதளத்தில் விவாதிக்கப்படும் பொருளாக மாறி இருக்கிறது.
அதே நேரத்தில் ஜோவிகா தன்னுடைய பெயரில் ஜோவிகா விஜயகுமார் என்று எல்லா இடத்திலும் பயன்படுத்தி வருவது குறித்து இணையத்தில் பல்வேறு கேள்விகள் எழும்பி வருகின்றனர். அது குறித்து வனிதா தற்போது புது வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் கரீனா கபூர், அமீர்கான், சல்மான்கான் இவங்களையெல்லாம் கேட்காத கேள்வி ஜோவிகா பற்றி மட்டும்தான் கேட்கிறீங்க. அதைப் பற்றி விளக்கத்தை நான் கொடுக்க விரும்புகிறேன்.
எல்லாரும் குடும்ப பெயரை பயன்படுத்துவது குடும்ப வழக்கமாகவும் அதே நேரத்தில் சிலருக்கு சந்தர்ப்ப சூழ்நிலையாலும் கூட அந்த மாதிரி வைக்க வேண்டிய நிலைமை வருகிறது. நான் ஜோவிகா பிறக்கும்போது ஆகாஷோடு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தனியாகத்தான் இருந்தேன். ஜோவிகாவின் அப்பா ஆகாஷ் தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
அவருடைய இன்சியலை தான் ஜோவிகா போடுகிறார். நான் அந்த நேரத்தில் தனியாக இருந்ததால் என்னுடைய பெயருக்கு பின்னாடி வரும் என்னுடைய அப்பா பெயரை ஜோவிகாவிற்கு வைத்தேன் என்று அந்த வீடியோவில் வனிதா பேசி இருக்கிறார். தற்போது இது வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications