பிக் பாஸ் தமிழ் சீசன் 7: இரண்டாகப் போகும் வீடு.. கமலின் புது ப்ரோமோ.. இதை கவனிச்சீங்களா?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியின் லான்ச் ப்ரோமோ இரண்டாவதாக வெளியாகி இருக்கிறது.
அதில் நடிகர் கமல்ஹாசன் இரட்டை வேடங்களில் நடித்து நிகழ்ச்சி பற்றி பேசி இருக்கிறார்.

அதே நேரத்தில் இந்த சீசனில் நடக்கும் பலவற்றைப் பற்றியும் பேசி இருக்கிறார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று சொல்லியே பிக் பாஸ் நிகழ்ச்சி 6 சீசன்களாக அனைத்து ரசிகர்களையும் எதிர்பார்க்க வைத்து விடுகிறது. தற்போது ஏழாவது சீசன் எப்போது வரும் என்று அதிகமான ரசிகர்கள் காத்திருந்தனர். அதற்கு மகிழ்ச்சி கொடுக்கும் வகையில் தான் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
பிறமொழிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சி பல சீசன்களை கடந்து போய்க் கொண்டிருந்தாலும், தமிழ் சீசனில் தற்போது ஏழாவது சீசன் ஒளிபரப்பாக போகிறது. அதற்கான இரண்டாவது லாஞ்சிங் ப்ரொமோ நேற்று கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி இருக்கிறது. இதில் இந்த முறை வழக்கமாக இருப்பது போலவே 100 நாட்கள் 20 போட்டியாளர்கள் 60 கேமராக்கள் என பல விஷயங்கள் தொடர போவதாக அதில் கூறியிருக்கிறார்.

அத்தோடு பிக் பாஸ் வீடு ரெண்டாக மாறியிருப்பதாக அதிகாரப்பூர்வமாக கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே நாம் பிக் பாஸ் நிகழ்ச்சி இந்த முறை இரண்டு வீடு என்பது பற்றி கூறி இருக்கிறோம். அதில் இருக்கும் நிறை குறைகள் பற்றி கூறியிருக்கிறோம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் இந்த ப்ரொமோவில் நடித்திருக்கிறார்.
அதிலும் ஒரு கமலை இன்னொரு கமல் கலாய்ப்பது போன்று பேசி இருக்கிறார். எப்போதும் இருப்பது போன்று அதே கான்செப்ட் இந்த சீசனில் இருக்கப்போவதில்லை என்று கூறியிருக்கின்றனர். அதோடு வரும் அக்டோபர் இரண்டாம் தேதி அல்லது எட்டாம் தேதி இந்த சீசன் தொடங்கப்படும் என்றும் செய்திகள் வெளியாகி இருக்கிறது.
ஏற்கனவே இந்த சீசனில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்த பல தகவல்கள் பரவி வரும் நிலையில் இந்த முறை 20 போட்டியாளர்கள் என்று கூறப்பட்டிருக்கிறது. அதுபோல அவர்கள் பற்றிய அதிகாரப்பூர்வமான தகவலுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அதே நேரத்தில் இனி அடுத்தடுத்த பிரமோக்கள் வெளியாகி அதிகாரப்பூர்வமாக போட்டியாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த முறை பிக் பாஸ் வீட்டில் ஒரு பக்கம் எப்போதும் இருப்பது போன்று பிரம்மாண்டமாக எல்லா சௌகரியங்களோடு ஒரு வீடு இருக்கும் என்றும், அதே நேரத்தில் இன்னொரு வீடு தனி தீவியில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அந்த வீட்டில் நாமினேஷன் செய்யப்பட்டவர்களுக்கு கடும் டாஸ்க் கொடுக்கப்பட்டு அங்கே வைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதுபோல இதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களுக்கு இந்த முறை இரண்டு வீடு என்பது தெரியாமல் தான் வைக்கப்படுகிறது தாம். பிரமாண்டமான வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் எலிமினேஷன் ஆகி தீவிற்கு போன பிறகுதான் அவர்களுக்கு இந்த மாற்றங்கள் தெரிய வருமாம். ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தனிமைப்படுத்த பட்டு விட்டார்கள் என்றும் கூறப்படுகிறது.
-
Bharathiraja: "கூட இருப்பவர்களையே நம்ப முடியாது..." ரசிகர்களை கலங்க வைக்கும் பாரதிராஜாவின் கடைசி பேட்டி -
"குடும்ப வாழ்க்கை” மொத்த சர்ச்சைகளுக்கும் போல்டாக முற்றுப்புள்ளி வைத்த நடிகை சுகன்யா.. பாராட்டும் ரசிகர்கள் -
திரிஷா பிரண்ட் நடிகை சார்மியோட மட்டும் ஃப்ரெண்ட்ஷிப் வச்சுக்காதீங்க! எச்சரித்த விஜய் சேதுபதி! பின்னணி காரணம் -
கடைசியில யாருமே இல்லாம போயிட்டீங்க இல்ல? இப்படி அனாதையா.. பாரதிராஜா உடலை கண்டு கதறிய கங்கை அமரன் -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
பாரதிராஜா, இளையராஜா வாழ்க்கையில் நடந்த "ஒரே” துயரம்.. நம்பிக்கை நாயகனுக்கு இப்படியா நடக்கணும்! -
உடைந்த பாரதிராஜா.. மகன் மனோஜ்ஜை மறக்க முடியாமல் தேம்பி தேம்பி அழுது, புத்திர சோகத்தாலேயே போன உயிர் -
"29 வயசுல உங்களுக்கு இந்த ஃபீலிங் வந்திருக்கா? Netflix-ல் டிரெண்டாகும் ‘29’ படம் ஏன் இளைஞர்களின் மனசை கலக்குது!" -
மன்னிப்பு கேட்டும் ஓயாத சர்ச்சை... ரவி மோகனுக்கு என்ன ஆச்சு? நீதிமன்றத்துக்கு தெரியாதா? பிரபலம் கேள்வி -
பாரதிராஜா யார்? ஸ்டூடியோக்களில் முடங்கிய திரையுலகை கிராமத்து மண்வாசனைக்கு கூட்டிச்சென்ற கலை வித்தகன் -
பாரதிராஜாவுக்கு திடீர் உடல்நலக் குறைவு.. தீவிர மருத்துவ கண்காணிப்பு! இமய இயக்குனருக்கு என்ன ஆச்சு -
100ஐ தொடாமல் போன சூப்பர் குட் பிலிம்ஸ் RB சௌத்ரி.. காற்றில் கரைந்த ரியல் ஜென்டில்மேனின் கடைசி ஆசை












Click it and Unblock the Notifications