வெளியானது பிக்பாஸ் 7 போட்டியாளர்களின் முழு விவரம்.. 21 பேரா? பஞ்சாயத்துக்கு பஞ்சம் இருக்காது
சென்னை: விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியின் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் உத்தேச பெயர் பட்டியல் வெளியாகி இருக்கிறது.
ஒவ்வொரு பிக்பாஸ் சீசன் தொடங்குவதற்கு முன்பும் இதுபோன்று உத்தேச பட்டியல் வெளியாவது வழக்கம்தான். அது போல இப்போதும் 21 போட்டியாளர்களின் பெயர் அதில் இடம்பெற்று இருக்கிறது.

அதே நேரத்தில் இந்த மாதிரி உத்தேச பட்டியலில் இருக்கும் பெயர்களில் பல போட்டியாளர்கள் ஒவ்வொரு சீசனிலும் கலந்து கொண்டிருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
விஜய் டிவியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியை அடித்துக் கொள்ள முடியாது. இந்த நிகழ்ச்சி 100 நாட்கள் தாண்டி ஒளிபரப்பாகி வரும் நிலையில் இதில் கலந்து கொள்வதற்காக பல பிரபலங்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆரம்பத்தில் முதல் சீசன் தொடங்கப்படும் போது பெரிய அளவில் எதிர்பார்ப்பும், சர்ச்சைகளும் இருந்தது.
அதற்குப் பிறகு தங்களுக்கு தெரிந்த பிரபலங்கள் தங்களுடைய நிஜ வாழ்க்கையில் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை பார்த்துக் கொள்வதற்காக பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்க பலர் தொடங்கினார்கள். அது முதல் சீசனில் கிடைத்த வரவேற்பு காரணமாகவே தற்போது வரைக்கும் ஆறாவது சீசன் வெற்றிகரமாக முடிவுக்கு வந்தது. அதுபோல இன்னும் ஒரு சில நாட்களில் அதாவது வரும் அக்டோபர் ஒன்றாம் தேதி பிக் பாஸ் தமிழ் சீசன் 7 தொடங்க இருக்கிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சி பல மொழிகளில் பல சீசன்களாக ஒளிபரப்பாகி வருகிறது. ஆனால் தமிழில் இப்போதுதான் ஏழாவது சீசன் வருகிறது. பிற மொழிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பத்துக்கும் மேற்பட்ட சீசனை கூட கடந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதுபோல தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சி இவ்வளவு வெற்றி பெறுவதற்கு காரணம் இதற்கு தொகுப்பாளராக இருக்கும் கமல்ஹாசன் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. உலகநாயகன் என்ற பெயர் பட்டத்தோடு வலம் வந்த கமல்ஹாசன் முதல் முறையாக இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளராக அறிமுகமாகி இருந்தார்.
அதோடு ஒவ்வொரு வாரமும் இவர் பஞ்சாயத்து செய்வதை பார்ப்பதற்காகவே பலர் வார இறுதி நாட்களில் இந்த நிகழ்ச்சிக்காக முன்பு ஆஜராகி விடுவது வழக்கம். அந்த வகையில் இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு வீடு அல்ல இரண்டு வீடுகள் என்றும் ஏற்கனவே ப்ரோமோ வெளியாகிவிட்டது. இந்த நிலையில் சும்மாவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் சண்டை சச்சரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. இப்போது இரண்டு வீடு என்பதால் என்ன மாதிரி இருக்கப் போகிறதோ என்று இந்த சீசனுக்கு ஆர்வம் அதிகரித்து இருக்கிறது.

இந்த நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் அக்டோபர் ஒன்றாம் தேதி மாலை 6:00 மணிக்கு பிக் பாஸ் கிராண்ட் லான்ச் நடக்க இருக்கிறது. இதனைத் தொடர்ந்து போட்டியாளர்கள் குறித்த தகவல்களும் அடிக்கடி வெளியாகி கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தற்போது இந்த சீசனில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் உத்தேச பட்டியல் இணையத்தில் கசிந்து இருக்கிறது.
அதில் நடிகை தர்ஷா குப்தா, மௌனராகம் சீரியல் மூலம் பிரபலம் அடைந்த நடிகை ரவீனா, நடிகை வனிதா விஜயகுமாரின் மகளான ஜோவிகா, பாண்டியன் ஸ்டோர் சீரியல் கதிர் (குமரன்), ரோபோ சங்கர் மகள் இந்திரஜா, நடிகை நிலா (அன்பே ஆருயிரே), நடிகை நிவிஷா, பிரபல மாடல் அனன்யா, ரோஷினி ஹரிப்ரியன், தொகுப்பாளினி ஜாக்லின், உமாரியாஸ் கான், ஸ்ரீதேவி விஜயகுமார், யுவன் பாலாஜி, நடிகர் அப்பாஸ், செய்தி வாசிப்பாளர் ரஞ்சித், சத்யா சீரியல் நடிகர் விஷ்ணு, ரக்ஷன், மாகாபா ஆனந்த், பப்ளு பிரித்விராஜ், விஜே அர்ச்சனா என மொத்தம் 21 பிரபலங்களின் பெயர் அதில் இடம் பிடித்திருக்கிறது.
ஆனாலும் இது எந்த அளவிற்கு உண்மை என்பது பொறுத்திருந்து பார்ப்போம். அதே நேரத்தில் ஒவ்வொரு முறையும் இந்த மாதிரி வரும் உத்தேச பட்டியலில் இருக்கும் அதிகமான போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் தொடர்ச்சியாக கலந்து கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் இந்த முறை என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
-
22 வயசுல அமலா பாலுக்கு அம்மா.. இப்போ அரசு வேலையில் கலக்கும் நடிகை! மைனா பூவிதாவின் மறுபக்கம் -
Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி -
“விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் ‘கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!” -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications