பிக்பாஸ் 7: மனிதாபிமானம் கொஞ்சமாவது இருக்கா? விக்ரமிடம் மன வருத்தத்தில் கேள்வி கேட்ட அர்ச்சனா தந்தை
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் இன்று டாஸ்க் தொடங்கி இருக்கிறது. அதில் அர்ச்சனாவின் அப்பா அம்மா அவருக்காக கலந்து கொண்டிருக்கின்றனர்.
அப்போது எல்லோரிடமும் நல்லபடியாக பேசிக் கொண்டிருந்த அர்ச்சனாவின் அப்பா விக்ரம் இடம் அர்ச்சனா அழுது கொண்டிருந்தபோது நீங்கள் இப்படி செய்யலாமா? என்று கேள்வி கேட்டு இருக்கிறார்.
அதோடு விக்ரம் தான் அர்ச்சனாவை அவமானப்படுத்த வேண்டும் என்று நடந்து கொள்ளவில்லை. ஒரு காமெடிக்காக தான் அப்படி பண்ணினேன் என்று விளக்கமும் கொடுத்து இருந்தார். இது பற்றி என்ன நடந்தது என்பதை விரிவாக பார்ப்போம்.

அந்த வகையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி இன்னும் ஒரு சில நாட்களில் முடிவுக்கு வர இருக்கிறது. அதனாலேயே இந்த வாரத்தில் ஃப்ரீஸ் டாஸ்க் தொடங்கி இருக்கிறது. இந்த டாஸ்க் எப்போது நடைபெறும் என்று அதிகமான ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தனர். ரசிகர்களை விடவும் பிக் பாஸ் போட்டியாளர்களும் இதைத்தான் விரும்பி இருந்தனர்.
இப்போது இன்று காலை அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 இன்று முதல் ஃப்ரீஸ் டாஸ்க் தொடங்க இருக்கிறது. அதில் குடும்பத்தினர் மொத்தமாகவும் வரலாம் அல்லது ஒவ்வொருவராகவும் வரலாம் என்று பிக்பாஸ் கூறி இருந்தார். அதன்படி ஒவ்வொரு போட்டியாளரின் குடும்பத்தினரும் வந்து கொண்டிருக்கின்றனர். அதில் அர்ச்சனாவிற்காக அவருடைய அம்மாவும், அப்பாவும் வந்திருக்கின்றனர்.
அவர்களை பார்த்ததும் அர்ச்சனா கண்கலங்க அவர்களை வரவேற்று இருந்தார். பிறகு அர்ச்சனா சார்பாக அர்ச்சனாவின் அப்பா விசித்திராவிடம் மன்னிப்பு கேட்டு இருந்தார். என் பொண்ணு இந்த வீட்டிற்குள் முதல் வாரத்தில் மனதொடிந்து போயிருந்த நிலையில் நீங்கதான் அவளுக்கு ஆறுதலாக இருந்தீங்க. ஆனால் அதை ஒரு கட்டத்தில் அர்ச்சனா மறந்து விட்டாள்.

அதனால் அவளுடைய சார்பாக நாங்கள் மன்னிப்பு கேட்கிறோம். ஒருத்தங்க கஷ்டத்தில் இருக்கும்போது அவங்களுக்கு துரும்பளவு உதவி செஞ்சாலும் அதை பெருசா நினைச்சுக்கணும். ஆனா நீங்க செஞ்ச உதவியை அர்ச்சனா மறந்தது எப்படி என்று தான் எங்களுக்கு தெரியல என்று கூறியிருந்தனர். அதைத்தொடர்ந்து நிக்சனிடம் நீ அர்ச்சனாவை கள்ளிப்பால் ஊத்தி கொன்னு இருக்கணும் என்று சொன்னது தப்பு என்றும் சுட்டிக்காட்டி இருந்தனர்.

அதைத்தொடர்ந்து எல்லோரிடமும் பேசிக் கொண்டிருக்கும்போது விக்ரமிடம் சில விஷயங்கள் பகிர்ந்து இருக்கின்றனர். இப்போது அர்ச்சனாவின் அப்பா விக்ரம் இடம் கொஞ்சமாவது மனிதத்தோடு நடந்து கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார். அதைக் கேட்டு விக்ரம் எதற்காக இவர் இப்படி சொல்கிறார் என்பது புரியாமல் முழித்துக் கொண்டிருக்கும் போது அவர் மேலும் விளக்கம் கொடுக்கிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications