பிக் பாஸ் 7: தாறுமாறு சம்பவம் செய்த அர்ச்சனா.. பொறாமையில் பொங்கும் மாயா, பூர்ணிமா.. வெளுத்து விட்ட பிக் பாஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் இன்று டான்ஸ் மராத்தான் டாஸ்க் தொடங்கி இருக்கிறது.

அதில் அர்ச்சனாவிற்கு திமிரு திரைப்படத்தில் ஈஸ்வரியின் கேரக்டர் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆரம்பத்தில் இந்த கேரக்டர் வேண்டாம் என்று அழுத அர்ச்சனா பிறகு அந்த கேரக்டராக மாறி கலக்கிக் கொண்டிருக்கிறார்.

ஆனால் அர்ச்சனாவை மொக்கை பண்ண வேண்டும் என்பதற்காக மாயா மற்றும் பூர்ணிமா செய்த சூழ்ச்சிகள் கடைசியில் எடுபடாமல் போயிருக்கிறது. ஆனால் மாயா பிக் பாஸிடம் கேட்ட கேள்விக்கு பிக் பாஸ் மாயாவிற்கு பதிலடி கொடுத்து அனுப்பி இருக்கிறார்.

Bigg Boss Tamil season 7 Maya and Poornimas scheming to bring Archana

அந்த வகையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இருந்து அதிகப்படியான சண்டை சச்சரவுகள் மட்டுமே இருந்து வருகிறது. இதனை குறிப்பிட்டு கடந்த வார ஞாயிற்றுக்கிழமை எபிசோட்டில் கூட கமல்ஹாசன் பிக் பாஸில் இந்த சீசனில் வன்மம் மட்டும்தான் அதிகமாக இருக்கிறது. எந்த டாஸ்க் கொடுத்தாலும் அங்கே மனதில் இருக்கும் வன்முறைதான் எல்லோரும் காட்டிக் கொண்டிருக்கிறீர்களே தவிர யாரும் மக்களை என்டர்டைன்மென்ட் பண்ண வேண்டும் என்று செயல்படுவதில்லை என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் இன்று டான்ஸ் மராத்தான் டாஸ்க் தொடங்கப்பட்டிருக்கிறது. அதில் ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் ஒரு நடிகர்களின் கெட்டப் கொடுக்கப்பட்டிருந்தது. அதில் அர்ச்சனாவிற்கு திமிரு திரைப்படத்தில் ஈஸ்வரியின் கேரக்டர் கொடுக்கப்பட்டிருந்தது. எல்லா போட்டியாளர்களுக்கும் பாசிட்டிவ் கேரக்டர் கொடுத்துவிட்டு எனக்கு மட்டும் நெகட்டிவ் கேரக்டர் கொடுக்கப்பட்டிருக்கிறது.

அப்போ என்னுடைய கேரக்டர் வெளியே நெகட்டிவாக தான் போய்க்கொண்டிருக்கிறதா? அதனால் தான் இப்படி ஒரு கேரக்டர் எனக்கு வந்திருக்கிறதா என்று அர்ச்சனா காலையில் டாஸ்க் தொடங்கும்போது அழுது கொண்டே இருந்தார். அதோட நான் வீட்டுக்கு போக வேண்டும் என்று அடம் பிடித்துக் கொண்டு இருந்தார். அப்போது அனன்யா அர்ச்சனாவுக்கு அட்வைஸ் கொடுத்திருந்தார்.

அதை தொடர்ந்து பிக் பாஸ் அர்ச்சனாவை கூப்பிட்டு அர்ச்சனாவிற்கு அட்வைஸ் பண்ண அதற்குப் பிறகு டாஸ்க்கில் அப்படியே ஈஸ்வரியாக அர்ச்சனா மாறியிருக்கிறார். அர்ச்சனா அப்படியே மதுரை தமிழில் பேசி வில்லத்தனமாக செய்து கொண்டிருக்க அதை எப்படியாவது குளறுபடி செய்ய வேண்டும் என்பதற்காக பருத்திவீரன் திரைப்படத்தில் முத்தழகு கேரக்டராக மாறி இருக்கும் பூர்ணிமாவும், வாரணம் ஆயிரம் திரைப்பட சிம்ரன் ஆக மாறி இருக்கும் மாயாவும் முயற்சி செய்கின்றனர்.

பூர்ணிமாவுக்கு அதிகமான வாய்ப்புகள் இருந்தாலும் எதையுமே புதியதாக செய்யாமல் அர்ச்சனா பேசுவதை நீங்க ரொம்ப கிரென்ச் பண்ணிட்டு இருக்கீங்க. எதுக்காக இப்படி எல்லாம் பண்ணிட்டு இருக்கீங்க என்று அர்ச்சனாவை ஆப் பண்ணுவதற்காக முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர். ஆனால் அதற்கெல்லாம் அசராத அர்ச்சனா வழக்கம் போல மாயா மற்றும் பூர்ணிமாவுக்கு பதிலடி கொடுத்து அனுப்புகிறார்.

அதே நேரத்தில் மாயா பிக் பாஸ் இடம் எனக்கு இரண்டு முறை இதே போலவே கேரக்டர் கொடுத்து இருக்கீங்க. இந்த முறையாவது மாற்றி கொடுத்திருக்கலாமே என்று கேட்க அதற்கு பிக் பாஸ் எத்தனை முறை கொடுத்தாலும் உங்களால் அதில் சிறப்பை கொடுக்க முடியும் என்று நாங்கள் நினைக்கிறோம். ஆனால் உங்களுக்கு உங்கள் மீது நம்பிக்கை இல்லையா? என்று கேட்டு மொக்கை கொடுத்து அனுப்பி இருக்கிறார். தற்போது இந்த வீடியோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+