சர்ச்சைகளுக்கு மத்தியில் சிக்கி இருக்கும் மாயா.. லோகேஷ் சொன்ன வார்த்தை.. குழப்பமா இருக்கே

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் மாயா குறித்து சமூக வலைத்தளத்தில் அதிகமான நெகட்டிவ் கருத்துகள் பரவி வருகிறது.

மாயா பிளான் போட்டு பிரதீப்பை வெளியேற்றி விட்டார் என்றும் அவரோடு சில போட்டியாளர்களை சேர்த்துக்கொண்டு உள்ளே குரூப்பிசம் பண்ணிக் கொண்டிருக்கிறார் என்றும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு கொண்டிருக்கிறது.

bigg boss tamil season 7 Maya Controversies about Lokesh

இந்த நிலையில் மாயா பற்றி செய்தியாளர்கள் கேள்விக்கு லோகேஷ் சில தகவல்களை பகிர்ந்து இருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி பெரிய அளவில் சூடு பிடிப்பதற்கு காரணம் பிரதீப்டைய எதிர்பாரா ரெட் கார்ட் பிரச்சனை தான். இதுக்கு முக்கிய காரணமாக இருந்தது நடிகை மாயாவும் தான். அவர் தன்னோடு புல்லி கேங்காக சிலரை சேர்த்து கொண்டு செய்யும் அட்டகாசம் காரணமாகவே இந்த சீசன் அதிக அளவில் பேசப்பட்டு கொண்டிருக்கிறது.

எதையும் ஜாலியாக கன்டென்ட்டாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் ஏதேதோ செய்து கொண்டிருக்கும் மாயா குரூப் பிரதீப் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட பிறகு ரசிகர்களின் மத்தியில் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. பிரதீப் பற்றி அடுக்கடுக்கான பல குற்றச்சாட்டுகளை வைத்திருந்த மாயா குரூப் பிரதீப் வெளியே போன பிறகு இப்போது நாங்கள் ஒன்று சொன்னோம்.

ஆனால் கமல் சார் நாங்க சொன்னதை வேறு விதமாக புரிந்து கொண்டார் என்று கமல் மீது தங்களுடைய கேள்விகளை திருப்பி இருக்கின்றனர்.
இப்படியாக இருக்கும் நிலையில் பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் மாயாவை பற்றி பிளாஷ்பேக்கை அதிகமான ரசிகர்கள் நோண்ட தொடங்கி இருக்கின்றனர்.

அப்போதுதான் மாய ஒரு லெஸ்பியன் நிறுவனத்தை நடத்திக் கொண்டிருப்பதாகவும் அதனால் ஒரு பெண் பாதிக்கப்பட்டதாகவும் சம்பந்தப்பட்ட பெண் சில வருடங்களுக்கு முன்பு மாயா மீது புகார் ஒன்றை கொடுத்தார். இது பல செய்திகளில் வெளியாகி இருந்த நிலையில் அந்த செய்தி இப்போது பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.

அந்த நிலையில் சமீபத்தில் பிக் பாஸ் முன்னாள் போட்டியாளர் சுசித்ராவும் மாயா பற்றி பல பேட்டிகளில் பேசிக் கொண்டிருக்கிறார். அதோடு என்னுடைய முன்னாள் கணவரே மாயாவின் லெஸ்பியன் நிறுவனத்திற்கு பண உதவிகளை செய்தார் என்றும் அதில் சுசித்ரா கூறி இருக்கிறார். அதுபோல விக்ரம் திரைப்படத்தில் பிராஸ்டிடியூடாக வரும் மாயா எல்சியூ காரணமாக லியோ படத்தில் ஒரு சீனில் நடித்து இருப்பார்.

இது பற்றி லோகஷ் விக்ரம் படத்தில் மாயா பிராஸ்டிடியூட் ஆனால் லியோ படத்தில் அப்படி இல்லை. அந்த விடுதியில் இருந்து பாதுகாத்து அழைத்துவரப்பட்ட ஒரு அகதிபோலத்தான் லியோ படத்தில் அவரை காட்டி இருப்போம் என்று கூறியிருக்கிறார். அப்போது அங்கிருக்கும் நிருபர் ஒருவர் உண்மையில் அப்போ மாயா பிராஸ்டிடியூட் தானா? என்று கேட்டு இருக்கிறார்.

இந்த கேள்வியை சற்றும் எதிர்ப்பார்க்காத லோகேஷ் இந்த படத்தில் தான் மாயா பிராஸ்டிடியூட் என்று அந்த பதிலை சில தடுமாற்றத்திற்கு பிறகு சொல்லி இருக்கிறார். தற்போது இந்த வீடியோவை மாயாவுக்கு எதிராக ரசிகர்கள் வைரல் ஆக்கி வருகின்றனர். அதே நேரத்தில் மாயாவின் கேரக்டர் குறித்து தப்பாக பேசிவிட்டார் என்று முன்னாள் போட்டியாளரான சுசித்ரா மீது மாயாவின் பெற்றோர் வழக்கு தொடுக்க இருக்கிறார்கள் என்று சில தகவல்களும் பரவி வருகிறது. இதில் எது உண்மை எது பொய் என்று மாயா பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்து விளக்கம் கொடுத்த பிறகு தான் தெரியும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+