பிரதீப் குறித்து அடுத்த சர்ச்சையை கிளப்பிய மாயா.. நிக்சன் கொடுத்த ஐடியா.. இப்படியுமா பிளான் போடுவாங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரதீப்க்கு ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பி வைக்கப்பட்டது.

அதற்கு சில போட்டியாளர்கள் செங்கொடி தூக்கி கமலிடம் பிரதீப்பால் பெண்களுக்கு பிக் பாஸ் வீட்டிற்குள் பாதுகாப்பு இல்லை என்று பல காரணங்களையும் கூறி இருந்தனர்.

bigg boss tamil season 7 Maya who stirred up the next controversy about Pradeep

அதில் ஒரு நபராக மாயாவும் உண்டு. இந்த நிலையில் பிரதீப் குறித்து மாயா புதிய சர்ச்சை ஒன்றை கிளப்பி இருக்கிறார். அது குறித்து தற்போது இணையத்தில் அதிகமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. அது பற்றி பார்க்கலாம்.

அந்த வகையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி ஆரம்பத்தில் இரண்டு வீடு கான்செப்ட் என்பதால் பெரிய அளவில் எதிர்பார்ப்போடு இருந்த நிலையில் நிகழ்ச்சி தொடங்கியதும் வழக்கமாக இருக்கும் சண்டை சச்சரவுகள் மட்டுமே இருக்கிறதே என்று பலருக்கும் சலிப்பு தட்ட தொடங்கியது.

அந்த நேரத்தில் தான் யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்த சீசனின் டைட்டில் வின்னராக வருவார் என்று எதிர்பார்த்த பிரதீப்க்கு ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்டார். இது குறித்து பலர் பிரதீப்க்கு ஆதரவாக கருத்து கூறி பிரதீப்க்காக பல ஹேஸ் டேக் செய்து வந்தனர். அதே நேரத்தில் பிரதீப் பிக் பாஸ் வீட்டிற்குள் கெட்ட வார்த்தை பேசுகிறார்.

அவருடைய நடவடிக்கையால் பிக் பாஸ் வீட்டிற்குள் இருப்பதற்கு எங்களுக்கு சேப்டி இல்லை என்று ஒரு சில போட்டியாளர்கள் செங்கொடி தூக்கி கமலிடம் கம்ப்ளைன்ட் செய்திருந்ததால் பிரதீப் வெளியேற்றப்பட்டார். அதில் மாயா, பூர்ணிமா, ஐசு, ரவீனா போன்ற பிரதீபால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்கிற தோரணையில் கம்ப்ளைன்ட் செய்திருந்தனர்.

இந்த நிலையில் இப்போது பிரதீப்க்கு அதிகமான ஆதரவு இருக்கும் நிலையில் கடந்த வாரம் தான் கமல்ஹாசன் தன் மீது தப்பில்லை தன்னிடம் போட்டியாளர்கள் கம்ப்ளைன்ட் செய்ததால் தான் நான் பிரதீப்பை வெளியே அனுப்பி வைத்தேன் என மீண்டும் மீண்டும் கூறியிருந்தார். இந்த நிலையில் நேற்று பிக் பாஸ் வீட்டிற்கு போட்டியாளர்கள் வழக்கம்போல தங்களுடைய வேலைகளை செய்து கொண்டிருக்கின்றார்கள்.

அப்போது மாயா மற்றும் பூர்ணிமா இருவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அதில் மாயா இப்போ இதை பேசலாமான்னு தெரியல. பிரதீப்பிற்கு ரெட் கார்டு கொடுத்தது பற்றி தான் அதிகமா எல்லாரும் பேசிகிட்டு இருக்காங்க. வெளியே போனா நமக்கு பாதுகாப்பு இருக்குமானு தெரியல. இது பற்றி ரசிகர்கள் எப்படி எடுத்துப்பாங்கன்னு தெரியலையே என்று பேசிக் கொண்டிருக்கிறார்.

அதோடு எல்லோரும் பிரதீப்க்கு தான் சப்போர்ட் செய்கிறார்கள் என்று சொன்னவுடன் பூர்ணிமா ஆமா என்ன சொல்றதுன்னு தெரியல, பயமா இருக்கு. என்ன சொல்றதுன்னு தெரியலையே என்று புலம்பி கொண்டு இருக்கிறார். அதோடு அவன் என்ன நினைச்சுட்டு இருக்கான்னு தெரியல என்று இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

அப்போது அருகில் இருக்கும் நிக்சன் வெளியே போனதும் நீங்க பிரதீப்பை சந்தித்து நேரடியா பேசிட வேண்டியதுதானே என்று சொல்ல, அதற்கு மாயா நக்கலாக அவன் ஒரு ஆளு, அவன் கிட்ட போயி பேசணுமா அப்படி எனக்கு எந்த தேவையும் இல்லை என்று திமிராக பதில் சொல்கிறார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதே நேரத்தில் இவர்கள் மீது எந்த தவறும் இல்லை என்றால் ஏன் பயப்படனும் என்று பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+