யப்பா முடியல! ஹரிஷ் கல்யாண் வெளியிட்ட போஸ்ட்.. விஷ்ணு தாக்கப்பட்டார்.. அடப்பாவமே இப்படியும் நடந்ததா?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் பார்க்கிங் பட ப்ரமோஷனுக்காக சென்றிருந்த ஹரிஷ் கல்யாண் தன்னுடைய twitter பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அதில் ஹரிஷ் கல்யாணை தன்னுடைய நண்பர் என்று விஷ்ணு கூறியிருக்கிறார். அதை குறித்து தன்னுடைய ரியாக்ஷனை ஹரிஷ் கல்யாண் கொடுத்திருக்கிறார்.

ஏற்கனவே அர்ச்சனாவோடு சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் விஷ்ணுவிற்கு இப்போது ஹரிஷ் கல்யாண் கொடுத்த பதிலடி பார்த்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று சொல்கின்ற பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் எதிர்பாராத பல நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதில் வார இறுதி நாட்களில் அமைதியாக இருக்கும் விஷ்ணு திங்கள் முதல் புதன் வரை சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டு வருவது வழக்கமாக இருக்கிறது.
அதுவும் அந்த வாரம் யாரை தேர்ந்தெடுக்கிறார் என்பது விஷ்ணுவிற்கு தெரியாது என்று தான் சொல்ல வேண்டும். யார் மாட்டுகிறார்களோ அவர்களோடு தொடர்ச்சியாக சண்டை போட்டுக் கொண்டிருக்கும் விஷ்ணு வியாழன், வெள்ளிக்கிழமை அமைதியாக மாறிவிடுவார். இது குறித்து கமல்ஹாசன் முன்னிலையில் கூட சக போட்டியாளர்கள் கலாய்த்து இருந்தனர்.
இப்படியான நிலையில் தான் சில தினங்களுக்கு முன்பு பிக்பாஸ் வீட்டிற்குள் நடிகர் ஹரிஷ் கல்யாண் மற்றும் நடிகை இந்துஜா இருவரும் தாங்கள் நடித்த பார்க்கிங் திரைப்படத்திற்கான பிரமோஷனுக்காக சென்றிருந்தனர். அப்போது அவர்கள் இருவரும் வெளியே போட்டியாளர்களுக்கு இருக்கும் பாசிட்டிவ் நெகட்டிவ் இமேஜ்களை மட்டும் படாமல் சொல்லி இருந்தனர்.
இந்த நிலையில் விஷ்ணு மணியிடம் ஹரிஷ் கல்யாண் என்னுடைய பிரண்டு தான் அதனால் தான் எனக்கு ஸ்டார் கொடுத்தார் என்று பேசிக் கொண்டிருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பகிர்ந்த ஒரு ரசிகர் இது உண்மையா என்று ஹரிஷ் கல்யாணை டேக் செய்து கேள்வி கேட்டிருக்கிறார். அதற்கு ஹரிஷ் கல்யாண் ஹெப்பா முடியலடா என்று சிவகார்த்திகேயன் புலம்புவது போன்ற ஒரு ரியாக்ஷன் கொடுத்திருக்கிறார்.
இதை பார்த்ததும் ரசிகர்கள் விஷ்ணு தாக்கப்பட்டார் என்று கலாய்த்து கொண்டிருக்கின்றனர். எப்படியாவது நாம பைனல் மேடைக்கு வந்து விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் விஷ்ணு அதற்காக நான் வில்லனாகவும் இருப்பேன் அதனாலேயே நான் கடைசி நாள் மேடையில் கமல்ஹாசன் கையைப் பிடித்துக் கொண்டு நிற்பேன் என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அதுவும் கடந்த திங்கள் கிழமையில் இருந்து அர்ச்சனாவோடு ஏற்பட்ட சண்டை இன்று வரைக்கும் தீர்க்க முடியாததாக போய்க்கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் தற்போது விஷ்ணுவை பற்றி ஹரிஷ் கல்யாண் வெளியிட்ட பதிவை வைத்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications