பிக் பாஸ் 7: புது ப்ரோமோவில் கமல் கொடுத்த க்ளூ.. சின்ன வீடு.. பாதிக்கு பாதி.. இதை கவனிச்சீங்களா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் ஏற்கனவே சொன்னது போல இரண்டு வீடு குறித்து கமல் பேசுகையில் இன்னொரு தகவலையும் கூறியிருக்கிறார்.
அதாவது இந்த முறை இரண்டு வீட்டிலும் ஒன்று சின்னதாக இருக்குமா? என்று கமலை கமலே கேள்வி கேட்பது போல ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் முதல் சீசனில் கிடைத்த வரவேற்பு காரணமாகவே தொடர்ச்சியாக ஆறு சீசன்கள் முடிவுக்கு வந்திருக்கிறது. இனி சீக்கிரத்தில் ஏழாவது சீசன் தொடங்கப்படும் என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர்.
அதுவும் செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்படும் என்று எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சி குறித்து அடுத்தடுத்த சில ப்ரோமோக்கள் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே ப்ரோமோ காட்சிகளை சில மாதங்களுக்கு முன்பே கமல்ஹாசன் நடித்த முடித்து விட்டார். ஆனால் இப்போதுதான் அந்த ப்ரோமோக்கள் ஒவ்வொன்றாக வெளியாகி கொண்டிருக்கிறது. காரணம் வரும் தேர்தலில் எந்த கட்சியோடு கூட்டணி வைக்கப் போகிறாரோ அது குறித்த அறிவிப்போடு பிரமோ வெளியாகும் என்று ரசிகர்களும் எதிர்பார்த்து இருந்தனர்.
இந்த நிலையில் ஏற்கனவே இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டு வீடு கான்செப்ட் இருக்கும் என்று வெளியான தகவல்கள் உண்மைதான் என்று கமல்ஹாசன் ப்ரோமோவில் கூறியிருந்தார். இதுவரைக்கும் இல்லாத வகையில் இந்த முறை பிரமோக்களில் இரண்டு கமல்ஹாசன் ஒருவரை ஒருவர் கலாய்ப்பது போன்று பேசிக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் தற்போது வெளியான பிரமோவில் ஒரு கமல்ஹாசன் இந்த முறை "இரண்டு வீடா..? அது எப்படி.? ஒன்னு சின்ன வீடா? நான் சைஸ்ல கேட்டேன்.. ஒன்னுல பத்து இன்னொன்னு இல்ல பத்தா செலக்ட் பண்ணி வச்சிருக்கீங்களா? எப்படி? என்று கேள்வி கேட்கிறார்.
அதற்கு இன்னொரு கமல்ஹாசன் ஏய் பாத்திக்கலா, ஒரு குளூ குடுத்தா போதுமே பிருச்சி மேஞ்சிடுவிங்களே..! என்று கூறி இருக்கிறார். இப்படியாக ப்ரோமோ வெளியாகி இருக்கும் நிலையில் அப்போ இதுதான் உண்மை நிலவரமா என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு கேட்டு வருகின்றனர். அப்படியானால் சின்ன வீட்டில் எலிமினேஷன் ஆகும் போட்டியாளர்கள் தங்க வைக்கப்படுவார்களா? அல்லது சின்ன வீட்டில் இருந்து தான் போட்டியாளர்கள் பெரிய வீட்டுக்கு மாற்றப்படுவார்களா? என்ற பல்வேறு கேள்விகள் ரசிகர்களின் மத்தியில் எழும்புகிறது.












Click it and Unblock the Notifications